திங்கள், 22 ஜூலை, 2024

நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கௌரவம் வழங்கப்படும்

நாட்டில்கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் எனவும் கடந்த பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டுவதற்காக, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சி வடமேற்கு மாகாணத்தில் 
ஆரம்பிக்கப்பட்டதுடன், இதில் குருணாகல், புத்தளம்,
 அனுராதபுரம், மாத்தளை, கேகாலை 
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 5,000 பேர் கலந்துகொண்டனர்.
 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடாத்தும் நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் தொழில் முனைவர்களை உருவாக்குவதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பரிந்துரைக்கும் சுயதொழிலை
 ஆரம்பிக்கத் தேவையான நிதி மூலதனமாக தலா 50,000 ரூபாவையும் ஜனாதிபதி வழங்கினார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 21 ஜூலை, 2024

விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணை ஒன்றுக்கு அமைய அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற 
முயன்றபோது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  குற்றச்சாட்டுகள் மற்றும் அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 20 ஜூலை, 2024

யாழில் குழந்தையை கணவனுடன் விட்டுவிட்டு காதலனுடன் ஓடிய தாய்

யாழில் தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, கள்ள காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு 
சென்று இருந்தார்.
 இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும் , அவரது காதலனான இளைஞனையும் 
கைது செய்தனர். 
 கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற விசாரணைகளை அடுத்து இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 19 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பார்வையற்றோர் மற்றும் செவித்திறன்குறைபாடுள்ளவர்களும் வாக்களிக்கும் வசதி

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை முதன்முறையாக ஏற்படுத்தத் தேர்தல்கள் ஆணையம் முடிவு 
செய்துள்ளது.
அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி எழுத்து முறையிலும், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியிலும் அடையாளம் காணும் வகையில்
 சிறப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 18 ஜூலை, 2024

உர்சுலா வான் டெர் லேயன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக Ursula von der Leyen இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
720 உறுப்பினர்களைக் கொண்ட அறையில் இரகசிய வாக்கெடுப்பில் 401 வாக்குகளும், எதிராக 284 வாக்குகளும் 
ஐரோப்பிய 
ஒன்றியத்தின் சக்திவாய்ந்த நிர்வாகக் குழுவின் தலைமையில் மற்றொரு ஐந்தாண்டு காலத்திற்கு வான் டெர் லேயனின் முயற்சியை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
முந்தைய நாள் ஸ்ட்ராஸ்பேர்க்கில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வான் டெர் லேயன், உக்ரைனில் ரஷ்யாவின் போர், உலகப் பொருளாதாரப் போட்டி மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் சவால்களால் வடிவமைக்கப்பட்ட செழிப்பு மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட 
ஒரு திட்டத்தை வகுத்தார்.
“அடுத்த ஐந்து ஆண்டுகள், அடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு உலகில் ஐரோப்பாவின் இடத்தை வரையறுக்கும். நமது எதிர்காலத்தை நாமே வடிவமைக்கலாமா அல்லது நிகழ்வுகளால் அல்லது மற்றவர்களால் வடிவமைக்கப்பட வேண்டுமா என்பதை இது 
தீர்மானிக்கும்” என்று வான் டெர் லேயன் தனது ரகசிய வாக்கெடுப்புக்கு முன்னதாக தெரிவித்தார்.
 காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத்தின் “பசுமை ஒப்பந்தம்” மாற்றத்தில் பின்வாங்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 17 ஜூலை, 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எப்போது என்பது வெளியான அறிவிப்பு

இலங்கையில்  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில்  இடம்பெறுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று(17.07.2024) காலை சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சர் சினேகபூர்வ அடிப்படையில் எனது காரியாலயத்திற்கு 
வருகை தந்திருந்தார்.
 இதன் பொழுது வடக்கின் சுகாதார நிலைகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடபட்டது. இதன்போது புற்றுநோய் சிகிச்சை நிலையமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை
 காணப்படும் நிலையில் அதன் அபிவிருத்தி தொடர்பில் 
கலந்துரையாடப்ட்டது.
 மேலும் 1300 வைத்தியர்கள் மற்றும் 500 தாதியர்கள் நாட்டினை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மேலும் 15 வைத்தியர்கள் மீள திரும்பியுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி
 குறைகின்ற 
பொழுது மீள நாட்டிற்கு திரும்புவார்கள் எனவும் சுட்டிகாட்டப்பட்டது.
 இதேவேளை 850 வகையான மருந்து வகைகளில் 40 வகையான மருந்து வகையே தட்டுபாடு காணப்படுகின்றது
 ஊடகங்களே இதனை பெரிதாக்குவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக
 இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளது 
எனவும் தெரிவித்தார்.
 இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என கேட்டார் ? இதன் பொழுது எமது கட்சி பிரதான வேட்பாளர்களுடன் எமது அதிகாரப்பகிர்வு உட்பட உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி எமது மத்திய 
குழு முடிவெடுக்கும்.
 இதேவேளை எமது மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவுகின்ற கருத்தியலையும் அவருக்கு தெளிவுபடுத்தினேன் . இதற்கு மக்கள் யாழ்ப்பாண மக்கள் தமது வாக்குகளை வழங்குவது அவர்களுடைய உரிமை தொடர்பானது என அவர் மேலும் தெரிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 16 ஜூலை, 2024

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்தார் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு
 தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.