சனி, 7 அக்டோபர், 2023

நாட்டில் மட்டக்களப்பில் பதட்டமான சூழல் பொலிஸார் குவிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளிலிருந்து விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களின் பூர்வீக மேய்ச்சல் தரைகள் மீளவும் அவர்களிடமே ஒப்படைக்கப்படவும் கோரி  போராட்டம் நடைபெற்று வருகின்றது.
 இந்தநிலையில் அகிம்சை வழியில் இடம்பெறும் போராட்டத்தினை அடக்கப் பொலிசார் குவிக்கப்படுகின்றார்கள் என  தெரிவித்துள்ளார்.
 இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய மேய்ச்சல் தரை அபகரிப்புத் தொடர்பில் தொடர்ந்து 23 ஆவது நாளாக இன்றும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 6 அக்டோபர், 2023

கடந்த ஆண்டு உயிரிழந்த மகாராணியை கொல்ல சதிதீட்டிய சீக்கியருக்கு 9 ஆண்டு தண்டனை

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 
அவரது பெயர் ஜஸ்வந்த் சிங் சைலு. 21 வயதான இவர் கடந்த 2021- ம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார்.
 முகத்தில் முகமூடி அணிந்த நிலையில் ஊடுருவிய அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்புபடை வீரர்கள்
 மடக்கி பிடித்தனர்
விசாரணையில் ஜஸ்வந்த் சிங் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொல்லும் நோக்கத்தில் வந்ததாக திடுக்கிடும் தகவலை 
தெரிவித்தார்.
1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் ராணியை கொல்ல வந்தாக தெரிவித்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. 
அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இங்கிலாந்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்வந்த் சிங் சைலுவை 
கைது செய்தனர். 
இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்வந்த் சிங் சைலுவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பு கூறினார். என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 5 அக்டோபர், 2023

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் அங்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ரிங் ஆப் பெயர் என்கிற கடலுக்கு அடியில் எரிமலைகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியில் ஜப்பான் நாடு அமைந்துள்ளது. பல்வேறு தீவுகளை கொண்ட இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் தோன்றுவது இயல்பான ஒன்று. 
பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களால் ஜப்பான் நாட்டில் அவ்வப்போது சுனாமி போன்ற பேரழிவுகள் 
நிகழ்ந்து வருகிறது. 
இந்த நிலையில் டொரிட்ஷிமோ தீவுக்கு அருகே காலை 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற சக்தி வாய்ந்த அளவில் இந்த நிலநடுக்கம் 
பதிவாகியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள இசூ தீபகற்பத்தில் உள்ள தீவுகளுக்கு ஒரு மீட்டர் உயரத்திலான சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மேலும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது..என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 4 அக்டோபர், 2023

பல்கலைக்கழக வளாகத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. 
மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. 
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பல்கலைக் கழகத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் நிலைமை குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. 
துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி 
வருகிறார்கள். 
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 3 அக்டோபர், 2023

நாட்டில் அதிகரித்துள்ள போதை பழக்கவழக்கம் கிளி நொச்சியில் சில கிராமங்கள் சுற்றி வளைப்பு

கிளி நொச்சியில் செல்வா நகர், கிருஷ்ணா நகர், விநாயகபுரம் போன்ற கிராமங்கள் சுற்றி வளைப்புகள் நடத்தப்பட்டது.. இலங்கையில் போதைவஸ்துக்களின் ஆட்டம் பாராளுமன்றம் வரை பேசப்படும் ஒரு புற்று நோயாக மாறியுள்ளது.
கடல் வழியாலும், ஆகாய வழியாலும் பல நாடுகளில் இருந்து நாளுக்கு ஒரு புதுவித போதைவஸ்துக்கள் இலங்கையில் அறிமுகமாக்கப்படுகிறது. கஞ்சா, ஹெரோயின், ஐஸ் போதைகளை விற்பனை செய்வோரும் நுகருவோரும் அதிகரித்த வண்ணமே உள்ளனர்.
இது சிங்கள நாடுகளில் அதிகமாக பாவனையில் இருந்தாலும் தமிழ் பேசும் பகுதிகளில், 2009 இல் அறவே கிடையாத இப் போதைவஸ்துக்கள் 
இப்பொழுது சாதாரணமாக ஒரு குடிசைக் கைத்தொழில் ஆகி பாடசாலைகளையும், மாணவ, மாணவிகளையும் குறிவைத்து விற்க்கப்படுகிறது.
இந்த வியாபாரத்தை கணிசமாக சில பாதுகாப்பு அதிகாரிகளும் இலஞ்சத்துக்காக கண்டும் காணாமல் இருப்பதும் அதிலும் தமிழ் போலீசாரில் சிலர் இதனால் வருமானம் ஈட்டுவதாலும் அனைத்து பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் அவப் பெயரை உண்டுபடுத்துகிறது.
இதை நுணுக்கமாக அறிந்த சில தமிழ், சிங்கள, இஸ்லாமிய நேர்மையான அதிகாரிகள் ஒரு கூட்டாக இணைந்து ஜனாதிபதிவரை இப் போதைவஸ்த்து நாட்டையும் நாட்டின் எதிர்கால சந்ததியினரையும் சூறையாடுகிறது என எடுத்துக் கூறியுள்ளனர்.
இதை செவி மடுத்த ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்து எங்கெங்கு போதைப் பொருள் பாவனையில் உள்ளதோ அங்கங்கு இரகசிய தேடுதலை நடாத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்க்குள் போதைக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புக்கள், சமூகம் மற்றும் துவேசமற்ற நாட்டின் நன்மை கருதும் மாணவர்களும் துப்பு துலக்கவும், நோட்டம் பார்க்கவும் ஈடுபடுத்த படுகிறார்களாம். இப்படைக்கும் காவற் துறைக்கும் தொடர்புகள் இல்லை.
ஆனால் இவர்கள் மக்களோடு மக்களாக இயங்கும் ஒரு படையாதலால் விரைவில் போதையை கட்டுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்கள், வெளி நாட்டவர்கள் தங்கும் விடுதிகளில் வேலை செய்பவர், பாடசாலையில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சிலர், இக்குழுவோடு இணைந்து கடமையாறுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது
இவ்வகையில் எமக்கு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி, கிளிநொச்சியில் 55 ஆம் கட்டை, கிருஷ்ணா நகர், செல்வநகர், விநாயகபுரம் போன்ற இடங்களே போதை வஸ்த்தின் ஆணிவேராக இருக்கிறது என்பதும் மக்களால் கூறப்படுகிறது.
இங்கே மாலையில் சில ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் சில பாதுகாப்புப் படைகளுக்கே போதைவஸ்த்தை வினையோகிப்பதாக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி கூறுகிறார்.
இப்பொழுது கிளிநொச்சியில் நான்கு இடங்களில் கண்டு பிடிக்க முடியாத அழவில் இரகசிய துப்புத் துலக்கும் படை முற்றுகையிட்டுள்ளதாம் விரைவில் கணிசமான அழவில் போதை வஸ்து கலாச்சாரம் முடிவுக்கு வருமென இப்படை உறுதி கூறியிருக்கிறது.
ரணில் அரசு தமது ஆட்சியை தக்க வைக்க போதை ஒழித்து சிங்கபூரை போல கொண்டு வரவேண்டுமென காய் நகர்த்துகிறதாம்.
அதனை மனதில் வைத்தே சில தினங்களின் முன்னர் 
நான் விரைவில் இலங்கையை சிங்கப்பூர் போல ஆக்குவேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.
எது எதுவாக இருப்பினும் இலங்கையில் மட்டுமல்ல உலகிலேயே மதுபானம் உட்பட எவ்வித போதைப் பொருளும் இருக்கக்கூடாது எனவும், ஆயுதங்கள் நாடுகளை ஆழக்கூடாது எனவும் பல பொது நல விரும்பிகள் 
கூறுகின்றனர்.
அதுவே எமது லங்கா4 ஊடகமும் விரும்புகிறது.,தமிழர்களின் எதிர்காலம், இலங்கையின் எதிர்காலம், மும்மத ஒற்றுமை, தமிழ் சிங்கள ஒறைக்கும், உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும் ஓங்கி குரல் கொடுப்பதோடு நிற்க்காமல் வரும் காலங்களில் வறியவர்களின் வாழ்வுக்கும், இழைஞர், யுவதிகளின் மேம்பாட்டுக்கும் முதுகெலும்பாக இருப்போம்.
எனக்கூறி உள்ளனர் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 2 அக்டோபர், 2023

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா பதவி விலகல் தொடர்பில் CID இற்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம்  தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவு 
பிறப்பித்துள்ளார். 
கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜா அனைத்து நீதித்துறை பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து தனது இராஜினாமா கடிதத்தை
 நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரிடம் 
கையளித்தார். 
பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் தாம் வழங்கிய தீர்புகளை தொடர்ந்து தமக்கு மரண அச்சுறுத்தல் வந்த நிலையில் தான், இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
இந்நிலையில்,  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இந்த அச்சுறுத்தல்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது என்று மேற்கோள் காட்டி, இந்த விவகாரத்தில் 
பக்கச்சார்பற்ற விசாரணைக்கு அரசாங்கத்திடம் 
கோரிக்கை விடுத்தது. 
இது குறித்து சட்டதரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நீதித்துறையைப் பாதுகாப்பது
 அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.  இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே மேற்படி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







ஞாயிறு, 1 அக்டோபர், 2023

இரண்டு விமானங்கள் இரத்து இலங்கை விமான நிலையத்தில் அவதிக்குள்ளான மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் இரத்துச் செய்யப்பட்ட நிலையில் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேபாளத்தின் 
காத்மாண்டு மற்றும் இந்தியாவின் மும்பைக்கு புறப்படவிருந்த இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணிகளை ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





Blogger இயக்குவது.