தமிழக தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் விவகாரமும் மற்றும் தமிழீழம் தொடர்பான விடயங்களே பிரசாரப் பொருளாக இருப்பதாகவும், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்ளாது என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில்,
தென்னிந்திய தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர்களின் விவகாரமே பிரதான பிரசாரப் பொருளாக இருக்கின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும்
மறைக்கப்பட்டு விடும்.
ஈழம் தொடர்பில் இந்திய அரசியல் கட்சியொன்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும் கருத்து தொடர்பாக அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்ளாது. ஏனென்றால் தேர்தல் முடிந்த பின்னர் அவை அனைத்தும் மறக்கப்பட்டுவிடும். காலாகாலமாக இப்படித்தான் நடக்கின்றது.
பெரும் போராட்டத்தின் பின்னரே இலங்கையில் 30 வருட யுத்தம் முடிவுக்கு வந்தது. தற்போது தேசியப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனியொருபோதும் பிரிவினை வாதத்துக்கு இடமளிக்கப்படாது. அதற்கு எந்த வழியிலும் இடமளிக்கப்படாது.
இதேவேளை வடக்கு, கிழக்கில் சில அரசியல்வாதிகள் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றனர். அந்நாட்டு அரசியல் தலைவர் இரகசியமான முறையில் இங்கு வந்து சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பின்னரே எமக்குத் தெரிய
வருகின்றது.
எவ்வாறாயினும் பிரிவினைக்கு இடமளிக்க முடியாது. அத்துடன் எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையைப் பலப்படுத்தி முன் நகர்வதே எமது செயற்பாடா குமென்றும் அவர்
தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக