வெள்ளி, 5 மார்ச், 2021

பாதிக்கப்பட்ட மக்கள் மட்டக்களப்பில் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று 
நடைபெற்றது.
அரச அதிகாரிகளின் ஆதரவுடன் சில காணி மாபியாக்கள் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் உட்பட அரச காணிகள், எல்.ஆர்.சி காணிகள், மீனவர்களின் காணிகள் என அனைத்தையும் அதிகாரத்தை 
பயன்படுத்தி அபகரித்து வருவதாகவும். இது 

குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரில் பின்வருமாறு 
தெரிவிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்ட விரோத காணி
அபகரிப்புக்களுக்கு எதி ரான முறைப்பாடு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில்
 குறிப்பிட்ட வாகரை
பிரதேச செயலாளர்பிரிவு, கிரான் பிரதேச செயலாளர்பிரிவு, ஏறாவூர் பற்று
பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகமான L.R.C, அரச காணிகளை
யுத்தத்தால் இடம் பெயர்ந்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழ்,
முஸ்லிம் மக்களின் காணிகளை குறிவைத்து 
அந்த பிரததசத்தில் உள்ள
பிரதேச செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் தன்னுடைய
பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் அடி பணிய வைத்து குறிப்பிட்ட சில
காணி மாபியாக்கள் தொடர்ந்தும் காணிகளை அபகரித்து
 வருகின்றனர்.
இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி விசாரணை
ஆரணக்குழு, C.I.D, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு
முரறப்பாடுகள் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று 
வரும் நிவையில்
மீண்டும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள
புன்னக்குடா கடலை அண்டிய பகுதிகளில் உள்ள அரச, L.R.C, தமிழ் மக்களின்
பாரம்பரிய காணிகள் சில அரச உத்தியோகத்தர்களின்
 உதவிதயோடு
1. சின்ன லெவ்வை சபீக், அக்பர்பள்ளி வீதி, புன்னக்குடா வீதி, ஏறாவூர். (நிலப்
பண்பாட்டு திணைக்கள கள உத்தியோகத்தர்).
2. முஹம்மட் சபீக் ஓட்டமாவடி. (அரசாங்க நில அளவையாளர் நில அளவைத்
திணைக்களம் வந்தாறுமூலை).
3. பொன்னையா ரவீந்திரன், பிரதான வீதி, கிரான். (முன்னால் கர்ணா
அம்மானின் செயலாளர்)
4. அப்துல்ரஹீம் மௌலவி, டெலிகாம் வீதி, காத்தான்குடி – 1.
(ஹிஸ் புல்லாஹ் வின் பினாமி).
5. மும்தாஸ் மௌலவி, காத்தான்குடி. (ஹிறா பவுண் டேஷன்).
6. சாலி முஹம்மத் முபீன், காந்தியார் வீதி, ஏறாவூர்.
6. முகமட்பிலால், காட்டுப்பள்ளி வீதி, ஏறாவூர்- 6. (ஏறாவூர்இரட்டை கொலை
சந்தேகநபர்).
இந்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் காணிகளை பிடிக்கும்
தரகர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
இவர்களின் சட்டவிரோத காணி
அபகரிப்புக்கு சில பிரதேச செயலாளர்களும், காணி உத்தியோகத்தர்களும்,
சில அரச நில அளவையாளர்களும் உதவியாக உள்ளனர்.
இவர்களின்
காணிகளை பிடிப்பதற்கு சில சட்டத்தரணிகளும் உடந்தையாக உள்ளனர்.
எனவே இவர்களால் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட காணிகளுக்கான கள்ள
உறுதிகள், உட்பட பல ஆவணங்களும், ஆதாரங்களும் எங்களிடம்
உள்ளது. எனவே கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு எதிராக விசாரணைகள்
இடம்பெறும் பட்சத்தில் எங்களால் குறித்த ஆதாரங்களை உரிய அதிகாரிகளுக்கு
கொடுக்கமுடியும் எனவே இந்த சட்ட விதராத காணி மாபியாக்களுக்கு
எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
பாதிக்கப்பட்ட மக்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரை பிரதேசத்தில் நடைபெற்ற மேற்படி ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு சவுக்கடி, புன்னைக்குடா பிரதேசங்களில் நடைபெறும் சட்ட விரோத காணி அபகரிப்பை நிறுத்துமாறு கோரி பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.