புதன், 17 மார்ச், 2021

தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பில் தமிழகத்தின் ஆளும் கட்சியின் முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.தமிழகத்தில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இம்முறை 
தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை
 இலக்காகக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட 
முன்னேற்றக் கழகம் வௌியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாகவும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட ஏழு 
பேரை விடுதலை
 செய்ய உத்தரவிட வேண்டுமென தாம் தொடர்ந்தும் உணர்வுபூர்வமாக வலியுறுத்துவதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.இலங்கையில் நடந்த இனப்படுகொலை, வன்புணர்வு போன்ற கொடூரமான குற்றங்களினால் பாதிக்கப்பட்ட 
தமிழ் மக்களுக்கு
 உரிய நீதி கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கவும் தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தமிழ் ஈழம் அமைந்திட அழுத்தம் கொடுப்பதாகவும் அந்த கட்சியின் ​தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது புதிய 
சர்வதேச நடுநிலை
 சுதந்திரத் தீர்ப்பாயம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கும் மத்திய அரசுக்கும் அ.தி.மு.க தொடர்ந்து 
அழுத்தம் கொடுக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.இலங்கையில் 
அரசியல் கட்சியாக செயற்படுவது தொடர்பில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு உள்ள 
திட்டம் தொடர்பில் திரிபுரா மாநில முதலமைச்சர் 
கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், பாரதிய ஜனதாக் கட்சி அங்கம் 
வகிக்கும் அதிமுக 
கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இலங்கை தொடர்பான 
விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இலங்கை அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு அமைய, இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என
 குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.