புதன், 31 மார்ச், 2021

நாட்டில் திடீர் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்த தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள்

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று இரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை
 முன்னெடுத்துள்ளன.
ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதாக ஒன்றியத்தின் தலைவர் சிந்தக பண்டாரா 
தெரிவித்தார்.இதற்கிடையில், அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் தபால் துறை உடனடியாக இரத்து செய்துள்ளது.விடுமுறை இரத்து செய்யப்பட்ட போதிலும் போராட்டம் தொடரும் என கூட்டு அஞ்சல் தொழிற்சங்கம் (ஜே.பி.டி.யு) தெரிவித்துள்ளது.
இதேவேளை, 
போராட்டம் காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையிலிருந்து தபால்களை அனுப்புதல் மற்றும் பெறும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், அரசாங்கம் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறினால், சாதாரண தொழிற்சங்க நடவடிக்கை பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும் என சிந்தக பண்டாரா 
தெரிவித்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.