ஞாயிறு, 29 நவம்பர், 2020

தனிமைப்படுத்தலில் இருந்து கொழும்பு, கம்பஹா சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. அத்துடன், பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்அதன்படி, இந்த நிலைமை .30-11-20.நாளை அதிகாலை 5.00 மணி முதல் அந்தப்...

வெள்ளி, 27 நவம்பர், 2020

சுப்பர்மடத்தில் வீட்டு முற்றத்திலும் அஞ்சலிக்க தடை

பருத்தித்துறையில் அஞ்சலிக்க தடை; எல்லைமீறிய மனித உரிமை பறிப்பு2 பிள்ளைகள், மருமகன் என மூவர் போரில் மாவீரர்களாக உயிர்க்கொடை வழங்கிய நிலையில் அவர்களை நினைவேந்துவதற்கு தமது வீட்டின் முன்றலில் ஏற்பாடுகளை செய்த பெற்றோருக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்று தடுத்துள்ளனர்.இதனால் அவர்கள் வீட்டுக்குள் தமது பிள்ளைகள் மற்றும் மருமகனுக்கு படையல் படைத்து தீபம்...

ஏறாவூரில் மாவீரர் நினைவேந்தலை ஊக்குவித்ததாக நால்வர் கைது

மாவீரர் நினைவேந்தலை ஊக்குவிக்கும் விதமாக முகநூலில் பதிவிட்டதாக நேற்று (26) மட்டக்களப்பு – ஏறாவூரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

மாவீரர்களுக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி

இலங்கை நாடாளுமன்றில் 27-11-20. இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 27-11-20. இன்றுநாடாளுமன்றில் உரையாற்றும் போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.“இந்த மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கு இன்று நினைவு கூரப்படுகின்ற மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்”...

யாழில் மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது

மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் 27-11-20.இன்று  கைது.யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் 27-11-20.இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்...

முல்லையில் மாவீரர் நாளுக்கு தயாரானவரின் வீட்டை சுற்றிவளைத்த இராணுவம்

முல்லைத்தீவில் மாவீரர் ஒருவரின் சகோதரனின் வீட்டில்.27-11-20. இன்று  மாலை மாவீரர் நாள் அனுஷ்டிக்க தயாரான போது அவரது வீட்டை இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.சுற்றிவளைத்த இராணுவத்தினர் புகைப்படம் எடுத்துள்ளனர்.இந்த சுற்றிவளைப்பு அச்சுறுத்தலையும் மீறி சகோதரனுக்கு மாவீரர் நாள் அஞ்சலியை குறித்த வீட்டார் தீபம் ஏற்றி செலுத்தினர். நிலாவரை.கொம்...

இராணுவம் முல்லையில் வர்த்தக நிலையங்களை திறக்குமாறு மிரட்டல்

முல்லைத்தீவு – நகரம் மற்றும் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில்.27-11-20 இன்று பெருமளவான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் அவற்றை திறக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் நிர்ப்பந்திப்பதாக வர்த்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.முல்லைத்தீவு நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக கணிசமான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல புதுக்குடியிருப்பிலும்...

சிட்னியில் அதிரடியால் மிரட்டிய ஸ்மித் இந்தியாவிற்கு இலக்கு 375

சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி ,27-11-20.இன்று தற்போது சிட்னியில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி பிஞ் – ஸ்மித் ஜோடியின் அசத்தலான ஆட்டத்தின் மூலம் 6 விக்கெட்களை இழந்து 374 ஓட்டங்களை குவித்துள்ளது.அணி சார்பில் அரோன் பிஞ் 124 பந்தில் 114, ஸ்டீவ் ஸ்மித்...

கண்டியின் கைநழுவியது வெற்றி; சுப்பர் ஓவரில் வென்றது கொழும்பு கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் முதலாவது போட்டியில் இன்று (26) கண்டி டஸ்கர்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.சமநிலையில் முடிவுற்ற இந்த போட்டியை சுப்பர் ஓவர் முறையில் நான்கு ஓட்டங்களினால் கொழும்பு வெற்றி கொண்டுள்ளது.போட்டியில் முதலில் ஆடிய கண்டி அணி 3 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.அணி சார்பில் அதிகபட்சம் குசல்...

புதன், 25 நவம்பர், 2020

மாத்தறை யில் கொரோனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம்

உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை..கொரோனா வைத்தியசாலை தாதியர்கள்தமக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லையென தெரிவித்து மாத்தறை மாவட்ட கொரோனா சிகிச்சை வைத்தியசாலையின் தாதியர்கள் 24-11-20.அன்று  அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமது கடமையை செய்ய உரிய வசதிகள் செய்து தரப்படவில்லையென தாதியர்கள் குற்றம்சாட்டினர்.வைத்தியசாலையின் வெளிப்புறமாக பாதாதைகளை...

செவ்வாய், 24 நவம்பர், 2020

யாழ் மற்றும் கோப்பாய்மாவீரர் நாளுக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான விசாரணை.25-11-20. நாளை  வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல்...

நம் உறவுகளை நினைவு கூருவதை எவரும் தடுக்க முடியாது?

இனத்திற்காக உயிர்நீத்த உறவுகளை நினைவுக்கூருவதை யாராலும் தடுத்து விட முடியாது என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் கிளிநொச்சி இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.கிளிநொச்சில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,“இனத்துக்காக தங்களது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர்களை...

திங்கள், 23 நவம்பர், 2020

யாழில் மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனுக்களை மீள பெற்றது பொலிஸ்

மாவீரர்நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடை கோரி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று மனுக்களை பொலிஸார் மீளப் பெற்றுள்ளனர்.வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் மாவீரர் நாளுக்கு தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.இன்று இந்த மனுக்கள் தொடர்பான வழக்கு...

வெள்ளி, 20 நவம்பர், 2020

மல்லாகம் மேல் நீதிமன்றின் தீர்ப்பு ஓர் வரலாற்று முடிவு அஜித்

யாழ் மல்லாகம் மேல் நீதிமன்றத்தின் .20-11-20.இன்றைய தீர்ப்பை “ஒரு வரலாற்று முடிவு என்றும், புலிகளை நினைவுகூரும் எந்த நிகழ்வுகளையும் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும்” பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.இந்த வழக்கைப் பார்வையிடுவதற்காக யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அஜித் ரோஹண வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது....

யாழ் மல்லாகம் நீதிவான் மாவீரர் நாளுக்கு தடை விதிக்கமறுப்பு

 மாவீரர் நாளுக்கு தடை விதிக்க மல்லாகம் நீதிவான் மறுப்பு; பொலிஸ் தரப்பின் மூக்குடைப்பட்டது பொலிஸாரின் மாவீரர் நாள் தடை கோரிக்கை மனுவுக்கு இணங்கி தடை விதிக்க மறுத்தும் பொலிஸாரினால் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு பணித்தும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான்.20-11-20. இன்று மாலை கட்டளை வழங்கினார்.நாட்டில்...

வியாழன், 19 நவம்பர், 2020

ஓட்டுமட சந்தியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் ஓட்டுமட சந்தியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.விபத்து சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.யாழ்.நகரிலிருந்து ஆறுகால்மடம் நோக்கி பயணித்த ஆட்டோ மீது குறித்த வீதி ஊடாக யாழ்.நகரம் நோக்கி பணித்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதுடன், அதே திசையில் பயணித்த...

தாண்டிக்குளம் பகுதியில் ஹன்ரர் ரக வாகனம் விபத்து இருவர் காயம்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஹன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து சம்பவம் 19-11-20.இன்று மதியம் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில்...

புதன், 18 நவம்பர், 2020

கனடாவில் காலமான மரியநேசனின் பூதவுடலை திருகோணமலைக்கு கொண்டுவர முயற்சி

கனடாவில் வாழ்ந்து வந்த பிக்பாஸ் புகழ் நடிகை லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடல் சுகவீனத்தால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் திருகோணமலைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும், இந்தியாவில் தற்போது இருக்கும் லொஸ்லியா மற்றும் அவரது நண்பர்களும் இலங்கையின் திருகோணமலைக்கு வரமுயற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,பிக்பாஸ்...
Blogger இயக்குவது.