திங்கள், 8 ஜூலை, 2024

நாட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கினால் வட் வரியை உயர்த்த வேண்டி வரும்

நாட்டில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கூற்றுப்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின், தற்போதைய 18% VAT 20% - 21% ஆக 
அதிகரிக்கப்பட வேண்டும். 
பொதுமக்களை ஒடுக்கி இதுபோன்ற கோரிக்கையை நிறைவேற்றும் தகுதி அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். 
அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
தற்போதுள்ள வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.
 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளம் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 7 ஜூலை, 2024

நாட்டில் அம்பாள்குளம் பகுதியில் கட்டுமானப் பணிகளின் நிறைவுக்காக காத்திருக்கும் ஆலயம்

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமனோன் மணி அம்பாள் ஆலயம் கட்டுமானப் பணிகளின் நிறைவுக்காக
  காத்திருக்கிறது. 
குறித்த ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






சனி, 6 ஜூலை, 2024

நாட்டில் அரச துறையினருக்கு சம்பளத்தை அதிகரிக்க முடியாது ஜனாதிபதி திட்டவட்டம்

நாட்டில் அரச துறையில் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  
இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 
ஊவா மாகாண சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் நிகழ்வில் இன்று (06.07) வெல்லவயில் இடம்பெற்ற
 நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி
 மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
 அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 5 ஜூலை, 2024

இந்திய முதல்வர் ஈழ தமிழ் பெண் உமா குமரனுக்கு வாழ்த்து தெரிவித்தார்

பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டாமர் பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் போட்டியிட்ட நிலையில், ஈழ தமிழ் பெண்ணான உமா குமரன் வெற்றி வாகை
 சூடியுள்ளார்.
இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
அதில், "ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்" 
என்று பதிவிட்டுள்ளார். 
 பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுன் வெற்றி பெற்றார். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார்.என்பது குறிப்பிடத்தக்கது
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினராக உமா குமரனுக்கு 
இந்த இணையத்தின் நல் வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 4 ஜூலை, 2024

நாட்டில் தேர்தலுக்கு இடைக்கால உத்தரவு குறித்த மனு மீது அரசாங்கம் கவனம்

நாட்டில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால உத்தரவு
 பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம்
 செலுத்தியுள்ளது.
 மேற்படி மனுவை தாக்கல் செய்வதன் மூலம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 12(1), 82(6), 3, 4, 118 மற்றும் 125 ஆகிய பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 126 இன் படி 
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 3ஆம் பிரிவின் ஊடாகத் திருத்தப்பட்ட பிரிவு 30(2)ஐ வியாக்கியானம் செய்யக்கூடாது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இதற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணைக்குழு அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் உயர் நீதிமன்றத்தினால் இது குறித்த இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை 
நடத்துவதற்கான மேலதிக பணிகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு
 இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு குறித்த மனுவில் கோரியுள்ளது.
 இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் மனுதாரர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது என்பதே தனது உறுதியான நிலைப்பாடாகும் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 3 ஜூலை, 2024

வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் காணியை உரிமை மாற்றம் செய்த பெண்கள் கைது

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு
 வழங்கியிருந்தார்.
இந் நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம்காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம்
 செய்துள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணி மோசடி செய்த சகோதரியைக் கைது செய்துள்ளதுடன் 
அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
இருவரையும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தராஜாவின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, 10 ஆயிரம் ரூபாவுக்காக தான் ஆள்மாறாட்டம் செய்ததாக 
குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய இருவரும் விளக்கமறியலில் 
வைக்கப்பட்டுள்ளனர்.
ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் (10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம் வைத்தவர்) கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது .
சட்டத்தரணியின் முன்னிலையில் கையொப்பம் வைத்தபோது தான் நோய்வாய்ப் பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் மாஸ்க் அணிந்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 2 ஜூலை, 2024

நாட்டில் பொலிஸார் புலனாய்வு விசாரணையின் போது மக்கள் சித்திரவதைக்கு உள்ளாகக்கூடாது

நாட்டில் பொலிசார் புலனாய்வு அலுவலர் என்ற வகையில் தங்களது புலனாய்வு மற்றும் விசாரணைகளின் போது பொலிசார் பொதுமக்களை சித்திரவதைக்குள்ளாக்காமல் இருக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் வலியுறுத்தியுள்ளார். 
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தையொட்டி பொலிஸ் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், குற்றவியல் சட்டப் புலனாய்வுகள் பொலிசில் முறைப்பாடொன்றினைச் செய்வதன் மூலமோ அல்லது முறைப்பாடின்றியோ பொலிசார் விசாரணைகளை 
ஆரம்பிக்கலாம். அம்மீறல்களை புலனாய்வு செய்வதன் நோக்கம் யார் யாருக்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு இயன்றளவு
 விடையளிப்பதாகும்.
 மீறல் சம்பவம் எத்தனை தடவைகள் இடம்பெற்றுள்ளதென்பதையும் ஒரு சம்பவத்தில் எத்தனை மீறல்கள் இடம்பெற்றுள்ளது என்பதையும் இனங்காண இந்த புலனாய்வுகள் உதவும். 
இப்புலனாய்வுகளின் போது சந்தேக நபருக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கோ உள ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தீங்கு ஏற்படாத வண்ணம் விசாரணைகள் செய்யப்படவேண்டும். 
மனித உரிமை மீறல் சம்பவம் என்பது ஆரம்பமும், 
முடிவும் உள்ள ஏதோவொரு நிகழ்வாகும். அது தனி நிகழ்வாக, தொடர் நிகழ்வாக. பலர் இணைந்து இடம்பெறும் கூட்டு 
நிகழ்வாக இருக்கலாம். 
இதனை பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்கின்ற போது துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் மீறல்கள் ஏற்படாத வகையில் பொலிசார் செயற்படவேண்டியது அவர்களின் கடமையிலான பணியாகும். 
முறைப்பாடு செய்ய நிலையத்திற்கு வருபவர்களை அன்போடு ஆதரித்து வார்த்தைப் பிரயோகங்களை எவரது மனமும் புண்படாத வகையில் பாவிக்கவேண்டும். இது மனித கௌரவத்தை 
பாதுகாக்கும் என்பதால் சித்திரவதைக் கலாச்சாரம் இல்லாதொழிப்பதற்கு அனைவர்களும் முன் வந்து செயற்படவேண்டும்” எனத் 
தெரிவித்துள்ளார். 
இந்நிகழ்வின் போது கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையைச் சேர்ந்த வைத்தியகலாநிதி. எம்.ஏ.சி.எம். பசால், மனித உரிமைகள் அதிகாரி பி.எம்.எம். பெறோஸ் ஆகியோர் விரிவுரையாற்றினர். என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.