செவ்வாய், 7 நவம்பர், 2023

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் நிறுத்தம்

இலங்கையில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம்.07-11-2023. இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக 
தெரிவித்துள்ளது.
நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் 
தெரிவிக்கின்றனர்.
அதன்படி.07-11-2023. இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக
 ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 6 நவம்பர், 2023

பலாங்கொடையில் வசித்து வரும் இரண்டு வயது சிறுவன் படைத்த உலக சாதனை படைத்தார்.

இலங்கை பலாங்கொடையில் வசித்து வரும் ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் மகனான ஆரோன் சாத்விக் என்ற 2 வயது 11 மாதங்கள் ஆன சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை படைத்தார்.
இந்த நிகழ்வானது நேற்று (05) பலாங்கொடை பெரிய மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் நடுவர்களாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, இரத்தினபுரி மாவட்டத் தலைவர் பிரவீனா பாரதி மற்றும் நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஷ்குமார் போன்றோர் நிகழ்வைக் கண்காணித்து
 உறுதி செய்தனர்.
 சோழன் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதேவேளை, அங்கிருந்த அனைவரும் அவரை வாழ்த்திப் பாராட்டினார்கள்
இவருக்கு எமது இணையங்களின்  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிகின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







ஞாயிறு, 5 நவம்பர், 2023

நாட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல்

நாட்டில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக 
கூறப்படுகிறது. 
அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் அரசாங்க ஊழியர்கள் 20 ஆயிரம் ரூபாவை சம்பள அதிகரிப்பாக கோரியிருந்தனர். இதனை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 4 நவம்பர், 2023

திரு திருமதி டொனால்ட் கிளென் றோய் ஜெயக்குமாரி( ஜெயா )தம்மதிகளின் .செல்வி.பெனற் டிலக்சியா அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெறுள்ளார்

யாழ் .நவற்கிரியை சேர்ந்த  திரு திருமதி டொனால்ட் கிளென் றோய் ஜெயக்குமாரி( ஜெயா )தம்மதிகளின் .செல்வி.பெனற் டிலக்சியா  அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில்
 தேசிய மட்டத்தில் இலக்கணப்போட்டி பிரிவு 4  இல் 1ம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். அவருக்கு
 பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு
 வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள். 
யா/புனித தெரேசாள் மகளிர் கல்லூரி மாணவி திரு திருமதி டொனால்ட் கிளென் றோய் ஜெயக்குமாரி செல்வி.பெனற் டிலக்சியா
அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இலக்கணப்போட்டி பிரிவு 4  இல் 1ம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார் 
இவருக்கு எமது இணையங்களின்  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிகின்றன.



வெள்ளி, 3 நவம்பர், 2023

சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் இலங்கையில் அழகான இடத்தில் உருவாகின்றது

இலங்கை கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு மேலே 600 ஏக்கர் காணி ஏற்கனவே சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக 
ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
 தெரிவித்துள்ளார்.
 காலநிலை மாற்றம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு எதிராக இலங்கை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 அரலிகஹா மன்றில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச காலநிலை மாற்ற மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் 
குறிப்பிட்டுள்ளார்.
 கடந்த ஆண்டு காலநிலை செழிப்பு திட்டத்தை தான் முன்வைத்ததாகவும், இந்த ஆண்டு COP 28 இல் நிகர பூஜ்ஜிய உமிழ்வு திட்டத்தை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 2 நவம்பர், 2023

நாட்டில் ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து

 

எஞ்சிய வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனங்களுக்கு மதுபான உற்பத்தி மற்றும் அதனை விநியோகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டதாக கலால் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்தார்.
நீண்டகாலமாக நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரம் ஒக்டோபர் 30ஆம் திகதியுடன் 
காலாவதியாகியுள்ளது.
ஐந்து மதுபான உற்பத்தி நிலையங்களில் மது உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், மதுபான உற்பத்தி நிலையங்கள் அதிகளவில் உள்ளதால்
 சந்தையில் மதுபானத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்
.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 1 நவம்பர், 2023

நாட்டில் பேருந்து கட்டண அதிகரிப்புத் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

நாட்டில் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் 
அஞ்சன பிரியன்ஜித், 
மீண்டும் டீசல் விலை அதிகரிக்கப்படுமாயின் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை, டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து 
உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர்களுக்கும் தேசிய
 போக்குவரத்து 
ஆணைக்குழுவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பயணக் கட்டணத்தை குறைக்க முடியாத நிலைமை காணப்படுவதாக முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



Blogger இயக்குவது.