செவ்வாய், 24 நவம்பர், 2026

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்க கோரி போராட்டம்

யாழ்  தையிட்டி பகுதியில் அடை மழைக்கும் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்குச் சொந்தமான வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள தமது தனியார் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, 
காணி உரிமையாளர்கள் ,24-11-2024- இன்றைய தினம்செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
நீண்ட நாட்களாக காணிகளைத் தம்மிடம் மீண்டும் ஒப்படைக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தினத்திலும்  மாலை வரையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் விகாரை 
அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அக்காணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளால் நீண்டகாலமாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
 தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் இப்பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுவது
 வழமையாகும்.
அதேபோன்றே பொதுமக்களது காணிகளை ஆக்கிரமித்து பலாலியில் அமைக்கப்பட்டுவரும் இராணுவ வைத்தியசாலைக்கெதிராகவும் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருவது
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.