நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை அதிகரிக்காமல் பேணுவதற்கு உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், கோழி இறைச்சியின் விலையைக் குறைக்கவும் உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சு
தெரிவித்துள்ளது
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் மக்களுக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இதில் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக