புதன், 4 நவம்பர், 2026

யாழில் மறக்க முடியா தட்டிவான் போக்குவரத்து உங்களுக்கு நினைவிருக்கோ

நாம் மறக்க முடியா தட்டிவான் தட்டிவான் நினைவிருக்கோ யாழ்ப்பாணத்தின்ர மறக்க முடியாத ஒரு போக்குவரத்து!
90s, 2000s காலத்தில யாழ்ப்பாணத்தில வளர்ந்தவையளுக்கு இந்தத் தட்டிவான் ஒரு வாகனம் மட்டுமில்ல… அது ஒரு தனி அனுபவம்!
எனக்கு இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு… யாழ்ப்பாண Townல இருந்து குறிகட்டுவானுக்கு, நயினாதீவு போறதுக்காக கன தரம் இந்தத் தட்டிவானில போயிருப்பன்!
அந்தக் காலத்தில CTB பஸ்ஸுக்கு அடுத்தபடியா எங்களுக்கிருந்த இன்னொரு முக்கியமான போக்குவரத்து இந்தத் தட்டிவான் தான்.
இதில Seat கொஞ்சம்தான் இருக்கும் (Seat எண்ட பேர்ல ரெண்டு பக்கமும் நீளத்துக்கு பலகை அடிச்சிருப்பாங்கள்). ஆனா ஏறுற சனத்துக்கு அளவே இருக்காது!
மேல கெரியரில மூட்டை முடிச்சுகள கட்டி ஏத்துவாங்கள்… உள்ளுக்க நடுவிலயும் சாமான்களை அடுக்கி வைப்பாங்கள். அதுக்கு மேல சனம் வேற குந்தியிருக்கும்!
பின்னுக்கு கயிறுகள் தொங்கும். அதைப் பிடிச்சுக்கொண்டு ஃபுட்போட்டில நிண்டு போறதுக்கெண்டே ஒரு க்ரவுட் இருக்கும்.ஆனா உண்மையான சாகசம் எங்க தெரியுமோ?
பண்ணை றோட்டும், வேலணை பாலமும், Full body massage இலவசமா கிடைக்கும். மலயான் கபேல விடிய காலம தோசையும் வடையும் ஒரு கட்டு கட்டிட்டு வந்தா ஊருக்கு போய் சேர்றதுக்குள்ள அதது அந்த அந்த இடத்தில போய் செட்டிலாகி அடுத்த பசியும் வந்திடும்.
2000 காலப்பகுதியில அந்த றோட்டின்ர நிலைமை தெரிஞ்சவையளுக்குத் தெரியும்!
குண்டும் குழியுமா இருக்கும். தட்டிவான் ஒரு குழிக்க இறங்கினா போதும்.
உள்ளுக்க இருக்கிற எல்லாரும் ஒருக்கா மேல எழும்பி, திரும்ப சீற்றில வந்து விழுவம்!ஒரு குழியில விழுந்து எழும்புறதுக்குள்ள அடுத்த 
குழி வந்திடும்!
ட்றைவர் அண்ணை ஸ்ரியறிங்கைத் திருப்புறாரோ, இல்ல தட்டிவானையும் சேர்த்து திருப்புறாரோ எண்டு அடிக்கடி எட்டி பாத்து கன்போர்ம் பண்ணிடனும்.
சீற்றில இருந்தாலும் ஆட்டம்… நிண்டாலும் ஆட்டம்… ஃபுட்போட்டில நிண்டவையளுக்கு இலவசமா காத்தும் அடிக்கும், அதுவும் சாரம் கட்டிட்டு கைத்த பிடிச்சு தொங்கிட்டு வாறவையள் நோக்கம் வேறயா
 இருக்கும்… 
அதுக்குள்ள எங்கட ஆக்களின்ர கதைகளுக்கும் குறைச்சலில்ல.
“அங்கால கொஞ்சம் தள்ளி இருங்கோவன்!”
“எங்க தள்ளுறது? இதுக்கு மேல தள்ளினா நான் வெளியிலதான் இருக்க வேணும்!”
“அம்மா பிள்ளைய தூக்கி மடில இருத்துங்கோ, அண்ண ஒரு எப்பன் தள்ளி இருங்க. “
“அண்ணை, கொஞ்சம் பாத்து ஓட்டுங்கோ!”
றோட்டே இப்பிடித்தான் இருக்கு நான் என்ன செய்யிறது?”
இதெல்லாம் அந்தப் பயணத்தில கேக்கிற வழக்கமான
 வசனங்கள்!
அதுவும் திருவிழா டைம்ல சொந்தக்காரர் எல்லாருமா நயினாதீவுக்குப் போற பயணம் எண்டா சொல்லவே தேவையில்லை…
தட்டிவான் முழுக்க எங்கட ஆக்கள்… சிரிப்பு, பகிடி, கதைகள், பிள்ளையளின்ர சத்தம் எண்டு குறிகட்டுவான் போய்ச் சேருற வரைக்கும் ஒரே கொண்டாட்டம்தான்!
இண்டைக்கு எவ்வளவோ வசதியான வாகனங்கள் வந்திட்டுது. நல்ல றோட்டுகள், ஏசி வாகனங்கள் எண்டு பயணமே 
மாறிப்போச்சு.
ஆனா அந்தத் தட்டிவானில அடிச்ச காத்தும், பண்ணை றோட்டில வாங்கின குலுக்கலும், சொந்தக்காரரோட சேர்ந்து போன சந்தோசமும்…
அதெல்லாம் திரும்பக் கிடைக்காத பொக்கிஷமான 
நினைவுகள்! 
யாழ்ப்பாணத்தின்ர 90s, 2000s காலத்துக்குரிய ஒரு அடையாளம்தான் இந்தத் தட்டிவான்!உங்களில எத்தின பேர் இந்தத் தட்டிவானில பயணம் செய்திருக்கிறியள்?
பண்ணை றோட்டில தட்டிவானுக்குள்ள Seatல இருந்து போனத விட ஏர்லையே இருந்து போனவங்கள் தான் அதிகமா இருக்கும்.
தட்டிவான் படம் ஒண்டு கண்ணில பட்டிச்சு அது தான் பழைய காலத்துக்கு ஒருக்கா போயிட்டு வருவம் எண்டு…  
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.