ஞாயிறு, 1 நவம்பர், 2026

யாழ் பலாலி, வசாவிளான் மக்கள் காணிகளுக்காக போராட்டம்

மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி வலி. வடக்கு மக்கள், பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டமானது, கடந்த 36 வருடங்களாக 
காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள
 தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு 
பயன்படுத்தி வரும் நிலையில், தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில், தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய தினம்(01) பலாலி சந்தி மற்றும் வாசாவிளான் சந்தி ஆகிய இருவேறு இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை மயிலிட்டியிலும் மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தை முன்னெடுத்து இருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.