நாட்டில் கிளிநொச்சியின் பூநகரி பிரதேசசபையின் வாடியடி நகரிற்கான மூலோபாய நகரத்திட்டம்.02-11-2026- இன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உதவி உள்ளுராட்சி
ஆணையாளர்,தவிசாளர் மற்றும் செயலாளர் பங்கெடுப்புடன் மூலோபாய திட்ட அறிவித்தல் காட்சிப்பலகை.02-11-2026- இன்று திங்கட்கிழமை
திறந்துவைக்கபட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பங்களிப்புடன் வகுக்கப்பட்ட உத்தேச வாடியடி நவீன சந்தைக்கட்டட தொகுதியில் கீழ் தளத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைத்தொகுதிகளும் முதலாம்
தளத்தில் கலாச்சார மண்டபம் மற்றும் திருமணமண்டபம் என்பவையும் உள்ளங்கியுள்ளது.
அதேவேளை உணவுக்கூடங்கள் மற்றும் இரண்டாம் தளத்தில் திறந்த திரையரங்கு மற்றும் நவீன உணவகங்ளிற்கான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நீண்ட யுத்தங்காரணமாக பாரிய இடப்பெயர்வையும் அழிவையும் சந்தித்துள்ள பூநகரியின் வாடியடி தற்போது கௌதாரிமுனை சுற்றுலா மையம் மற்றும் மீள்புதுப்பிக்க தக்க சக்தி திட்டங்களில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியுள்ளது.
அவ்வகையில் பெருமளவிலான முதலீட்டாளர்கள் சுற்றுலாத்துறை சார்ந்து முதலிடும் மையமாக பூநகரி வாடியடி பரிணமித்துள்ள நிலையில் வாடியடி நகரிற்கான மூலோபாய நகரத்திட்டம் இன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக