புதன், 22 ஜூலை, 2026

யாழ் செம்மணியில் சர்வதேச விசாரணை வேண்டும் என போராட்டம்

யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது. 
செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக , ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு வருகை தந்த நிலையில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போரட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் தாதுகோப கட்டுமானம் ஆரம்பம்

நாட்டில்  திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் 136ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, தொல்பொருள் அமைவிடத்தைச் சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் தாதுகோபம் கட்டுமானத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு -22-07-w2026-இன்று 
 இடம்பெற்றது
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.எம்.ஹேமந்தகுமார முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை 
நாட்டி வைத்தார்.
வரலாற்றுத் தகவல்களின்படி, சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழியின் மூலம் தமிழர்களான பௌத்தர்களுக்குப் பௌத்த கல்வி கற்பிக்கும் சைத்தியம் ஒன்று அங்கு காணப்பட்டதாகவும், பின்னர் அதே இடத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிள்ளையார் கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்தது.
இதற்கிடையில், இக்காணி மடத்தடி முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்றும், 2002ஆம் ஆண்டு சிதிலமடைந்த கோயிலைப் புனர்நிர்மாணம் செய்ய முயன்ற போது அது தொல்பொருள் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் காணி உரிமையாளரான திருமதி கோகிலவதனி கணேஷ் தெரிவித்தார்.
பராமரிப்பின்றி இக்கோயில் அழிவடைந்த நிலையில், புதிய ஆலய அமைப்புப் பணிகள் காணி உரிமையாளரால் தொடங்கப்பட்டபோதிலும், அங்கு புராதன தொல்பொருள் படிவங்கள் உள்ளன என்ற காரணத்தினால் கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக உரிமையாளர் தரப்பு 
தெரிவித்துள்ளது.
நிகழ்வில் பேசிய திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபிள்யு.யு.சுரங்க பெரேரா, அழிவடைந்த சிதிலங்களை ஒன்றிணைத்துப் புராதன கட்டுமானத்தைப் பாதுகாப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், "கன்னியாவில் இன்று நடைபெறும் நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல; இலங்கையின் புராதன தொல்பொருள் இடமொன்றைப் பாதுகாக்கும் முயற்சியே இதுவாகும். இதற்குச் சிலர் இன, மத சாயங்களைப் பூச நினைக்கின்றனர்.
தற்போதைய 100 தொல்லியல் பகுதிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், இன்னும் சில தினங்களில் சேருநுவிலை பிரதேச செயலகப் பிரிவின் சோமாவதி பாதுகாப்பு அரண் பகுதியில் அமைந்துள்ள சோழர்கால ஸ்ரீ மங்களபுரம் சிவன் ஆலயத்தைப் பாதுகாக்கும் வகையிலான கட்டுமானமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே, தொல்லியல் திணைக்களம் மத, இனவாத நோக்குடன் செயற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
நேற்றைய நிகழ்வில் மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதேச கிராம சேவகர், இஸ்லாமிய மதகுரு மற்றும் துறைசார் அலுவலர்கள் கலந்துகொண்டு அடிக்கற்களை நாட்டி வைத்தனர். இந்நிகழ்விற்கு வில்கம் விஹாரையின் நாயக்க தேரர் அம்பிட்டியே சீலவண்ஸ திஸ்ஸ தேரர் அனுசாசனம் வழங்கினார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்று இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்

இன்று இலங்கையில்  1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 45,780 ரூபாய் ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 41,970 ரூபாய் ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை 34,339.10 ரூபாய் ஆகவும் உள்ளது.
18 கரட் தங்க விலை
1g விலை LKR 34,339.10
8g விலை LKR 274,712.80
10g விலை LKR 343,391.00
22 கரட் தங்க விலை
1g விலை LKR 41,970.00
8g விலை LKR 335,760.00
10g விலை LKR 419,700.00
24 கரட் தங்க விலை
1g விலை LKR 45,780.00
8g விலை LKR 366,240.00
10g விலை LKR 457,800.00
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 21 ஜூலை, 2026

பிரெஞ்சு நாடாளுமன்றம் பதின் ஐந்து வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடக தடைக்கு ஒப்புதல்

பிரெஞ்சு நாடாளுமன்றம்  பதின் ஐந்து  வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மசோதாவிற்கு, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் ஒரு சமரசக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
செப்டம்பர் தொடக்கத்தில் பள்ளி ஆண்டு தொடங்குவதற்குள் இந்தத் தடை அமலுக்கு வர வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸின் ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், டிக்டாக் மற்றும் ஆல்ஃபபெட்டின் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் 16 வயதுக்குட்பட்டோருக்கான உலகின் முதல் தடையை டிசம்பரில் அமல்படுத்திய ஆஸ்திரேலியாவைப் பிரான்ஸ் பின்பற்றும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற இடங்களில் இந்தத் தடைக்கு மக்ரோன் ஆதரவைத் திரட்டியுள்ளார்.
27 நாடுகளைக் கொண்ட இந்த கூட்டமைப்பில், குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் சமீபத்தில் ஆதரித்துள்ளார். 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

தற்போது கனடாவின் குடியேற்ற சட்டமும் முக்கிய அம்சங்களும்

தற்போது கனேடிய குடியேற்றச் சட்டம் (Canadian Immigration Law) என்பது வெளிநாட்டவர்கள் கனடாவிற்கு வருவது, வேலை செய்வது, படிப்பது, நிரந்தர குடியுரிமை (Permanent Residence) பெறுவது மற்றும் குடியுரிமை (Citizenship) பெறுவது போன்றவற்றை ஒழுங்குபடுத்துகிறது.
இதன் முக்கிய அம்சங்கள்
சட்டத்தின் அடிப்படை: 
கனடாவின் குடியேற்ற முறை பெரும்பாலும் Immigration and Refugee Protection Act (IRPA) மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளின் கீழ் இயங்குகிறது.
நிரந்தர குடியுரிமை (Permanent Residence): 
திறமையான தொழிலாளர்கள் (Express Entry), மாகாண பரிந்துரை (Provincial Nominee Program), குடும்ப ஆதரவு (Family Sponsorship), மற்றும் பிற திட்டங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தற்காலிக அனுமதிகள்: 
வேலை அனுமதி (Work Permit), கல்வி அனுமதி (Study Permit), மற்றும் பார்வையாளர் விசா (Visitor Visa) ஆகியவற்றிற்கு தனித்தனி
 விதிமுறைகள் உள்ளன.
அகதிகள் பாதுகாப்பு: 
தங்கள் நாட்டில் துன்புறுத்தல் அல்லது உயிர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சிலர் கனடாவில் அகதி பாதுகாப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விண்ணப்பமும் தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
சட்டங்களைப் பின்பற்றுதல்: 
விண்ணப்பங்களில் உண்மையான தகவல்களை வழங்க வேண்டும். தவறான தகவல் (misrepresentation) வழங்கப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்; சில சந்தர்ப்பங்களில் எதிர்கால விண்ணப்பங்களிலும் தடைகள் ஏற்படலாம்.
குடியுரிமை: 
நிரந்தர குடியுரிமை பெற்ற பிறகு, குறிப்பிட்ட உடல்நிலை இருப்பு (physical presence) மற்றும் பிற தகுதிகளை பூர்த்தி செய்தால் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



உலகில் புத்தகமே சிறந்தது மீண்டும் பழைய கல்வி முறைக்குத் திரும்பும் ஐரோப்பா

 உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக பள்ளிகளில் புத்தகங்களுக்குப் பதிலாக டேப்லெட்டுகள்(Tablets), கையெழுத்திற்குப் பதிலாக டிஜிட்டல் பணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 
கல்வியின் எதிர்காலம் திரைகளில்தான் உள்ளது என்று கருதப்பட்டது. ஆனால் இன்று ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே, பிரான்ஸ், இத்தாலி மற்றும் டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் அந்த அணுகுமுறையை மாற்றத் தொடங்கியுள்ளன.
அவை மீண்டும் அச்சுப் புத்தகங்கள், கையெழுத்து மற்றும் பாரம்பரிய வாசிப்பு முறைகளை பள்ளிகளில் அதிகப்படுத்தி வருகின்றன.
இதற்குக் காரணம் பழைய முறையின் மீதான பாசம் அல்ல. ஆய்வுகளின்படி, கையால் எழுதுவதும் அச்சுப் புத்தகங்களை வாசிப்பதும் நினைவாற்றல், கவனச்செலுத்தும் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்துகின்றன என்று தெரியவந்துள்ளது.
2023ம் ஆண்டு ஸ்வீடன், பள்ளிகளில் டேப்லெட் பயன்பாட்டை கட்டாயமாக்கும் திட்டத்தை நிறுத்தி, நூற்றுக்கணக்கான மில்லியன் குரோனர்களை அச்சுப் புத்தகங்களுக்காக ஒதுக்கியது.
அதைத் தொடர்ந்து டென்மார்க் 540 மில்லியன் குரோனர்களை முதலீடு செய்து, டேப்லெட்டுகளுக்குப் பதிலாக அச்சுப் புத்தகங்களை
 வழங்கத் தொடங்கியது. 
மேலும், 2027க்குள் பள்ளிகளை முழுமையாக மொபைல் இல்லாத கல்விச் சூழலாக மாற்றும் இலக்கையும் அறிவித்துள்ளது. 
பிரான்ஸ் மற்றும் இத்தாலி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, 
மீண்டும் காகித நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பென்சில் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. 
நார்வேயின் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் கற்றல் நேரத்தில் மொபைல் சாதனங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஃபின்லாந்தும் 2024ல் இதேபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது.
ஒரு காலத்தில், "அதிக தொழில்நுட்பம் = சிறந்த கல்வி" என்ற எண்ணம் பரவலாக இருந்தது, ஆனால் இன்று, உலகின் முன்னேறிய கல்வி அமைப்புகளே ஒரு புதிய கேள்வியை எழுப்புகின்றன: பல நூற்றாண்டுகளாக மாணவர்கள் பயன்படுத்தி வரும் சிறந்த கற்றல் கருவி. ஒரு புத்தகம், ஒரு பென்சில், மற்றும் முழு கவனம் செலுத்தும் திறன்தானோ என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 20 ஜூலை, 2026

இலங்கையில் திருமணங்களின் எண்ணிக்கை சுமார் இருபத்தி எட்டு சதவீதம் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்கள்
 தெரிவிக்கின்றன
அந்த திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் 200,985 ஆக இருந்த பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 144,182 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 28 சதவீத வீழ்ச்சியாகும்.
கோவிட் பெருந்தொற்றில் குறைவடைந்த 
திருமண பதிவு 2020-ஆம் ஆண்டிற்கு முன்னதாக, பல ஆண்டுகளில் திருமணங்களின் எண்ணிக்கை 170,000-க்கு மேலாகப் பதிவாகியிருந்தது. இருப்பினும், கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்து, 2020-ஆம் ஆண்டில் 143,808
 ஆகக் குறைந்தது.
பெருந்தொற்றுக்குப்பின், 2021-ஆம் ஆண்டில் 162,628 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 171,140 ஆகவும் திருமணப் பதிவுகள் மீண்டும் 
அதிகரித்திருந்தன.
இருப்பினும், 2023-ஆம் ஆண்டில் 151,356 ஆகவும், 2024-ஆம் ஆண்டில் 139,290 ஆகவும் மீண்டும் சரிந்தன. இறுதியாக, 2025-ஆம் ஆண்டில் திருமணப் பதிவுகள் சிறிய அளவில் அதிகரித்து 144,182 ஆகப் பதிவாகியுள்ளன. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.