வியாழன், 8 ஆகஸ்ட், 2024

தமிழ் பொது வேட்பாளர் எதற்காக நிறுத்தப்படுகிறார் சுரேஷ் பதில்

இந்தியா யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பல நாடுகளும் ஐ.நா செயலாளரும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கபடவேண்டும் என கூறிய நிலையில் அரசாங்கம் வேறு 
தளத்தில் பயணிக்கிறது. 
இதனை தடுத்து நிறுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் பொது
 வேட்பாளரை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் வியாழக்கிழமை
 (08.08.2024)நடைபெற்றது.
 இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யுத்தம் முடிந்து 15 வருட காலம் முடிவடைந்த நிலையில் எந்தவொரு அரசாங்கமும் தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை 
முன்வைக்க இல்லை.
 ஆர்வத்துடன் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவும் இல்லை. யுத்தத்துக்கு பிறகு பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 
எமது மக்கள், நாங்கள் வாக்களித்திருக்கின்றோம்... அதில் சிலர் வென்றிருக்கின்றார்கள். 
ஒரு சிலர் தோற்றிருக்கின்றார்கள். வென்றவர்களே தோற்றவர்களே தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்கு எந்த அடிப்படைச் சிந்தனைகளும் அவர்களிடம் இருந்தது இல்லை. 
யுத்தத்திற்கு பிறகு மிகப் பெரிய அளவில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வடக்கு, கிழக்கில் நிறுவுகின்ற வேலைத்திட்டத்தை இன்றும் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

இவை தொடர்பில் ஜனாதிபதியுடன் அரசாங்கத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியிருந்தாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழ் மக்கள் அவர்களை நம்பி வாக்களித்தாலும் அரசாங்கம் இதற்கான முடிவைக் காணவில்லை என்பதை நாங்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டும்.
 யுத்தத்திற்கு பிறகு அரசியல் கட்சியாக பல குழுக்களாக அமைப்புக்களாக பிரிந்து நின்றது அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவை மாற்றப்பட வேண்டும். இந்த
 மண்ணில் தமிழ் மக்கள் சமத்துவமாக கலை 
கலாசாரங்களுடன் சுதந்திரமாக எம்மை நாங்கள் ஆளுகின்ற உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் தகுதி வாய்ந்தவர்கள் இவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
 இலங்கையில் இடம்பெற்ற அரச வங்குரோத்து என்பது பொருளாதாரப் பிரச்சினை மாத்திரம்தான் வேறு எதுவும் இல்லை என்ற விம்பத்தை சர்வதேச ரீதியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு 
அதுவல்ல. தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது அது தீர்க்கப்படவேண்டும். இந்தப் பிரச்சினையை 
வெளியுலகத்திற்கு கொண்டு செல்ல சிங்கள தரப்பிற்கு அதைத் தெளிவு படுத்துவதற்கு நாங்கள் எடுத்துக்கொண்ட ஜனநாயக
 பூர்வமான வழி என்னவென்றால் வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய மக்கள் ஆதரவாக வாக்களிக்கின்றபோது இந்தப் பிரச்சினை 
தீர்க்கப்படவில்லை என்பதை வெளியுலகமும் இராஜதந்திர சமூகமும் எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை உணரவைக்கப்படவேண்டும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாது இருக்கின்றது. 
இதில் இருந்து நழுவிப் போகமுடியாது சிவில் சமூகம் அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவாக செயற்படவேண்டும் என்பதால் தான் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற
 தீர்மானத்திற்கு 
வந்துள்ளோம். வடக்கு கிழக்கில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் இதனை ஆர்வத்துடன் வரவேற்றிருக்கின்றார்கள். 
அரசாங்க ஆதரவுடன் இருக்கும் ஒரு சிலர் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஏவ்வாறு இருப்பினும் வடகிழக்கில் 
இருக்ககூடிய தமிழ் மக்கள் பல லட்சமாக வாக்களிக்கின்றபோது நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பல பிரச்சினைகளை 
வெளிக்காட்டுகின்கின்ற அதேவேளை தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கப்படவேண்டும் என்பதைதெளிவாக சுட்டிக்காட்டுவதற்கு இதனைப் பயன்படுத்தவேண்டும். நாங்கள் பொது வேட்பாளரை 
நிறுத்தப்போகின்றோம் என்பதற்கு பிறக்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் இங்கு வருகின்றார்கள். 
இவர்களுக்கு எமது மக்களின் வாக்குப் பலம் புரிகின்றது. ஆதனால் தான் வாக்குகளை பெற்றுக் கொள்பவதற்காக தேடி வருகின்றார்கள். நாங்கள் 35 வருடங்களுக்கு மேலாக போராடி பல லட்சம் பேரை இழந்தும் இன்றும் எங்களை புதைத்து சிதைப்பதற்குகத்தான் திட்டமிட்டுள்ளார்கள் இவற்றை எதிர்த்து எமது மண்ணில் நாங்கள் சுதந்திரமாக 
வாழ்வதற்கு எமது பிரச்சினைகள் தீர்க்ககப்படபொதுவேட்பீளரை நிறுத்துகின்றோம் இந்தியாஉட்பட பல நாடுகளும் ஐ.நா பொதுச்சபை செயலாளர் கூட இல்ல்கை வந்திருந்தபோது கூட எமது பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் எனபேசி இருந்தார்கள் இன்று அதிலிருந்து வெளியேறி இலங்கை அரசாங்கம் வேறெரு தடத்தில் பயணம் செய்ய
 முயற்சிக்கின்றது. 
இதனை தடுத்து நிறுத்தி தமிழ்த்தேசியப் பிரச்சினை தீரரக்கப்படவேண்டும் இதற்கு தமிழ மக்கள் அணிதிரண்டு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங் கவேண்டும் தமிழ் மக்கள் மட்டும் பாதிக்கப்பட வில்லை தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மலையக மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் அவர்களும் இதனைப் புரிந்து கொள்வார்கள் என நம்கின்றோம்.
 எனவே தமிழ் பொதுவேட்பாளரை நாங்கள் ஐனாதிபதி வேட்பாளராக இறக்கியுள்ளோம் அவருக்கு முழுமையான ஆதரவை 
வெளிப்படுத்த வேண்டும் என்றார்.இதேவேளை தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே போட்டியிடுகின்றார் வெகுவிரைவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 7 ஆகஸ்ட், 2024

ஜனாதிபதி எச்சரிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைக்காமல் போகலாம்

சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் 
நிதியை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 இன்று முற்பகல் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என்றும் 
சுட்டிக்காட்டினார்.
 மேலும், நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டைக் காப்பாற்றி திறமையை 
நிரூபித்ததன் காரணமாக தமக்கு யாருடனும் போட்டி இல்லை. நாட்டை 
முன்னோக்கிக் கொண்டு செல்வது குறித்து
 தான் கவனம் செலுத்தியுள்ளதாகவும், ஊடக பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிலரினால் ஊழலைப் பற்றிப் பேச மட்டுமே முடியும். 
ஆனால் ஊழலைத் தடுப்பதற்காக பல சட்டங்களை இயற்றியுள்ளதாகவும், குற்றச் செயல்களால் சம்பாதித்த சொத்து தொடர்பான
 சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுள்ள 
எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.என்பது  குறிப்பிடத்தக்கதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியே வேண்டும்: போராட்டத்திற்கு அழைப்பு

யாழில் பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் 
புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கோரிக்கை 
விடுத்துள்ளது. 
 யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போராட்டத்திற்கான பகிரங்க அழைப்பு 
விடுக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பிலான விசேட ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த ஊடக அறிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேச விசாரணை வழியாகவே நீதி வழங்க வேண்டும் என்பதை 
மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம். 2700 நாட்களை கடந்தும் கடந்த 15 ஆண்டுகளாகவும் தெருவில் நின்று எம் பிள்ளைகளின் விடுதலைக்கும் நீதிக்குமாக தொடரும் போராட்டத்தை ஸ்ரீலங்கா அரசினால் ஒருபோதும் அடக்கி ஒடுக்க முடியாது.
 பன்னாட்டு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்பதையும் நாம் மீண்டும் ஸ்ரீலங்கா அரசுக்கு நினைவுபடுத்துகின்றோம்.
 ஆகஸ்ட் 30ஆம் நாள் பன்னாட்டு காணாமல் 
ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றைய நாளில் வடக்கு 
கிழக்கு தழுவிய ரீதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டத்தை நடாத்த இருக்கின்றோம். அது தொடர்பான தெளிவுபடுத்தலாக இந்த அறிக்கையை வடக்கு கிழக்கு
 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினராகிய நாம் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துகின்றோம். உலகமெங்கும் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு ஆயுதமாகவே
 கையாளப்படுவதாக ஐ.நா கூறுகின்றது. அதாவது ஜனநாயகத்திற்கு எதிரான மனித உரிமைகளுக்கு எதிரான இனங்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பிரயோகிக்கப்படுகின்றது. 
 அந்த வகையில் உலகம் முழுவதும் பல இலட்சக் கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி 
விபரங்கள் கூறுகின்றன. சில நாடுகளில் அதன் ஜனநாயத்திற்கு எதிரான - மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக செயற்படுகின்ற 
நபர்கள் குடும்பம் குடும்பமாகவும் தனி உறுப்பினர்களாகவும் காணாமல் ஆக்கப்படுகின்றனர்.
 அந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய சரியான புள்ளி விபரங்களை தொகுத்துக் கொள்ளுவதற்கு அந்த நாடுகள் திட்டமிட்ட அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கமாமல் புள்ளி 
விபரங்களை மறைத்து வருவதாகவும் ஐ.நா கூறுகிறது. போர், பஞ்சம், வன்முறை போன்ற சூழலில் காணாமல் ஆக்கப்படுதல்கள் சமூக அவலத்தை ஏற்படுத்தியுள்ளன.
 முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் தொடங்கிய காணாமல் ஆக்கப்படுதல் என்பது உலக அளவில் பரந்து 
விரிந்து செல்கிறது. அந்த வகையில் அர்ஜன்டீனா, ஸ்ரீலங்கா, வியட்னாம், குர்திஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற பல
 நாடுகளில் இனங்களுக்கும் சமூகங்களுக்கும் எதிரான ஆயுதமாக கையாளப்படுகின்றது. 
 போரில் கொல்லப்பபடுவதை விடவும் ஒரு இனத்திற்கு நீண்ட துயரத்தையும் நீண்ட அழிவையும் நீண்ட மனச் சிதைவுகளையும் ஏற்படுத்தவே காணாமல் ஆக்கப்படுதல் என்பது கொடூரமான ஆயுதமாக 
பிரயோகிக்கப்படுகிறது. ஈழத்தைப் பொறுத்தவரையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது முள்ளிவாய்க்காலிலோ, 
அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலோ தொடங்கிய நிகழ்வல்ல. ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கோரி போராடத் துவங்கிய
 காலத்தில் இருந்தே வலிந்து காணாமல் 
ஆக்கப்படுதல் என்பது இன ஒடுக்குமுறையின் ஒரு ஆயுதமாக கையாளப்பட்டு வந்துள்ளது. 
 1996ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையின்படி, 1980- 96 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 11,513 பேர் காணாமல் போயிருப்பதாகவும்; 1996-ஆம் ஆண்டு ஆசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைப்படி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 16,742 என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த
 எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கலாம் என்பதை இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 
இதற்குப் பிந்தைய காலத்தில் கோத்தபாய ராஜபக்சவின் வெள்ளைவான் கடத்தல் வாயிலாக மாத்திரம் வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி தென்னிலங்கையிலும் வசித்த பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
 அதாவது முள்ளிவாய்க்காலுக்கு முந்தைய காலத்தில்கூட தமிழ் இளைஞர்களைஅடக்கி ஒடுக்கவும் ஆயுதப் போராட்டத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்தவும் இளைஞர் சக்தியை இல்லாமல் செய்யவும்
 ஈழத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுதல் என்பது கட்டமைக்கப்பட்ட ரீதியில் ஸ்ரீலங்கா அரசின் இயந்திர
 நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் போது சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேரளவில் இறுதிப்போரில் இனவழிப்பு செய்யப்பட்டவர்களாக கருதப்படுகின்றது. இப்போரில் சுமார் ஐம்பதாயிரம் பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 
இவர்களில் 21ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டு தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதைப் போன்றே இன்னொரு உபாயமாக காணாமல் ஆக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. 
$தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் போதும் இறுதியாக முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்பும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதையே இன்று ஈழத் தமிழ் மக்கள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 சரணடைந்தவர்கள் இறந்துவிட்டார் என்றும் சரணடைந்தவர்கள் இப்போது இல்லை என்றும் மழுப்பல் பதில் கூறுகின்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் அவர்களை என்ன செய்தது என்பதை இந்த உலகத்திற்கு அறிவிக்க 
வேண்டும்? அவர்கள் எப்படி வலிந்து இல்லாமல் செய்யப்பட்டார்கள் என்றும் இவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் சிங்கள அரசு அறிவிக்க வேண்டும். கொன்றழிக்கப்பட்ட நிலையில் ஈழ இறுதிப் போரில் 59 மேற்பட்ட குழந்தைகள் ஸ்ரீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்டு வலிந்து 
காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக் கணக்கான குழந்தைகள் முள்ளிவாய்க்காலில் 21 ஆயிரத்திற்குமேற்பட்டவர்களுடன் 59 மேற்பட்ட குழந்தைகள் சரணடைந்துள்ளனர்.
 இவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை சொல்ல வேண்டும் என்றே ஈழத் தமிழ் இனம் போராடுகிறது. 59 மேற்பட்ட குழந்தைகளை 
வலிந்து காணாமல் ஆக்குவதன் வாயிலாக உலகில் குழந்தைகளை வலிந்து காணாமல் ஆக்குவதில் முதல் தர நாடு என்ற பெருமையை
 சிங்கள தேசம் பெற்றுள்ளது. குழந்தைகளின் உரிமை தொடர்பிலும் இனவழிப்பு தொடர்பிலும் வரைவிலக்கணங்களை கூறுகின்ற 
ஐக்கிய நாடுகள் சபையும் இன்ன பிற நிறுவனங்களும் சிங்கள இனவழிப்பு அரசை மயிலிறகால் தடவுவதே உலக மக்களுக்கு வேதனை தருகின்ற விடயமாகும்.
 இந்த நிலையில் ஈழ மண்ணில் ஸ்ரீலங்கா அரசினால் இனவழிப்பு நோக்கத்திற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் விடுதலை மற்றும் நீதியை வலியுறுத்தி பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான 
தலையிடலை வலியுறுத்தி காணாமல் 
ஆக்கப்பட்டோர் தினமான
 எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம்முன்னெடுக்கவுள்ள
 போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை 
வழங்குமாறு அன்பாக வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.
என்பது  குறிப்பிடத்தக்கதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 5 ஆகஸ்ட், 2024

யார் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற வினாவிற்க்கான விடை இன்று

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள பொதுவேட்பாளர் யார் என்ற விவரம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் 3 பேரின் பெயர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற 
முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனுக்கே வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.
இந்தப் பொதுக்கட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளரைக் கண்டறிவதற்கு உப குழுவை நியமித்திருந்தது. அந்தக் குழு பல்வேறு தரப்புகளுடனும் பேச்சு 
நடத்தியிருந்தது.
இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது 
பெயர்களே இறுதிப் பட்டியலில் உள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பாக 
உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்பது  குறிப்பிடத்தக்கதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகள் காலம் தாழ்ந்தவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள கரிசனைகள் காலந்தாழ்ந்தவையாகவே உள்ளதென்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன்
 தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து 
மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கும்ரூபவ் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மாகாண சபைகளை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கு ஏற்கனவே நான் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தேன்.
அப்போது திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவுகளையும் சமர்ப்பித்திருந்தேன். ஆனால் ஜனாதிபதி அதனை 
முன்னெடுப்பதற்கு தயாராக இல்லாத நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னெடுப்பதற்காக தேர்தல் திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு 
இணங்கியுள்ளார்.
அதுமட்டுமன்றி இன்னமும் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அவர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வாக்குறுதி அளித்தபடி விடயங்களை 
முன்னெடுத்தால் சிறந்தது.
எனினும், அவர் அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான காலத்தினை தவறவிட்டுள்ளார். இப்போது காலம் தாழ்த்தப்பட்டுவிட்டது. மேலும் அவர் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றுவார் என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லை.
அதேநேரம், மாகாண சபைகளை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சட்ட திருத்தங்கள் மீளப்பெற முடியாதவையாக இருக்க வேண்டும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் கடந்த காலத்தில் மாகாண சபைகளுக்கான சட்டங்கள்
 மீளப் பறிக்கப்பட்டு விட்டன.
ஒற்றையாட்சிக் கட்டமைப்புள்ள இந்த நாட்டில் அதிகாரங்களை பறிப்பது தொடர்கதையாகவே உள்ளது.
1987ஆம் ஆண்டு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், கிராமசேவகர் ஆகியோரை நிர்வகிக்கும் அதிகாரம் மாகாண சபைக்கு
 காணப்பட்டாலும் 1992இல் ரணசிங்க பிரேமதாசவினால் மாற்றியமைக்கப்பட்டமையால் மாகாணங்கள் அந்த 
அதிகாரங்களை இழந்தன.
இதனால், முதலமைச்சராக நான் இருந்தகாலத்தில் மாவட்டங்களை நிர்வகிப்பதற்கு நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது என்றார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 3 ஆகஸ்ட், 2024

தொழில் வல்லுநர்களின் பொறுப்பு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது என ஜனாதிபதிதெரி வித்துள்ளார்

புதிய பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஒன்றிணைவது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை கடன் வாங்குவதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
யாழ்.மாவட்ட அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடன் 02.-08-2024.அன்று  இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  
முன்னைய தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொண்டு புதிய பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு பங்களிப்பது இந்த நாட்டின் அறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

நாட்டில் பல தரப்பினரையும் சந்தித்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் மற்றும் மறுசீரமைப்புக்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதிய$
 அதிகாரிகள் குழு, ஜனாதிபதி, எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை 
நடத்தியுள்ளது.
 சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையினால் எட்டப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் நாட்டின் பொருளாதாரத்தில் அடையப்பட்டுள்ள சாதக மாற்றங்கள் மற்றும் நாணய 
நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை 
நடைமுறைப்படுத்துவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன தொடர்பில் ஆராயும் நோக்கில் சர்வதேச நாணய
 நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி பீற்றர் ப்ரூவர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கொழும்புக்கு
 வருகைதந்துள்ளனர். 
 இதன்போது அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ
 தலைமையிலான பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்கப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். 
 இச்சந்திப்புக்களின் முடிவில் ஊடக சந்திப்பொன்றை நடாத்துவதற்கு உத்தேசித்திருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், அதில் தமது அவதானிப்புக்கள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து
 அறிவிக்கவுள்ளனர். 
அது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் மூன்றாம் கட்ட மீளாய்வாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.குறிப்பிடத்தக்கது  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.