திங்கள், 14 செப்டம்பர், 2020

நாட்டில் வீடு வாங்க காத்திருப்போருக்கு ஓர் நற்செய்தி கோட்டாபய அறிவிப்பு

நாட்டிலுள்ள இளைஞர்களின் சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்கும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடுத்தர வர்க்க வீட்டுத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அரசாங்க 
திட்டங்களின் ஒன்றான் இதன் ஊடாக 5000 வீடுகள் நடுத்தர வர்க்க மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.முதல் முறையாக 6.25% வருடாந்த நிவாரண
 வட்டிக்கு வழங்கப்படும் இந்த வீட்டிற்காக 30 வருட கட்டணம் செலுத்தும் காலம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் குறைந்தபட்ச பணம் செலுத்தி இந்த வீடு ஒன்றை கொள்வனவு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கொழும்பு, கண்டி, அனுராதபுரம், பேலியகொட, கொட்டாவை, பன்னிப்பிட்டி மற்றும் மாலபே 
ஆகிய பிரதேசங்களில் இந்த வீட்டுத்திட்டம்
 முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



கேரளவில் சிகிச்சைக்கு வந்த பெண்ணின் பெயரைக் கேட்டு மருத்துவர்கள் அதிர்சி

 

கேரள மாநிலம் ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் வசித்து வருபவர் சைன் தாமஸ். இவரது மனைவியின் பெயர் கொரோனா.இவருக்கு தற்போது 34 வயது. இவருக்கு 34 வருடங்களுக்கு முன் ஒரு பாதிரியாரால் இப்பெயர் சூப்படப்ப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் அர்த்தம் கிரவுன் (Crown) அதாவது கிரீடம் என்பதாகும்.தற்போது 2020ல் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரொனாவால் அவரது பெயரைக் கேட்டதும் மக்கள் பதறுகிறார்கள். ஒரு சிலர் அவரை கேலி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், இரத்த தானம் செய்வதற்காக பெயரை எழுதியபோது மருத்துவர்களே தனது பெயரைப் படித்து அதிர்ச்சியடைந்ததாக திருமதி. எஸ்.கொரோனா கவலை
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 8 செப்டம்பர், 2020

வடமாகாண மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான வேண்டுகோள்

                                          

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையை பொறுத்தவரை தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எனினும், வடக்கு மக்கள் சமூக தொற்று தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதாக 
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் 
பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார 
நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளியினைப் பேணி சமூகத் தொற்று ஏற்படாவண்ணம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரேபிய நாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் வடக்கில் பல்வேறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.சமூகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் இனங்காணப்படாத போதிலும், மக்கள் சமூக தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் 
கேட்டுக்கொண்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 7 செப்டம்பர், 2020

தென்மராட்யில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி பெண் ஸ்தலத்தில் பலி

 யாழ்.தென்மராட்சிப் பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.தனங்கிளப்பில் இருந்த சங்குப்பிட்டி நோக்கி சென்ற டிப்பர் வாகனமே, மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியது.
தனங்கிளப்பு சந்தியில் இருந்து 
சங்குப்பிட்டி
 வீதியில் இந்த விபத்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,சாவகச்சேரி திசையிலிருந்து பூநகரி திசைக்குப் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பருமே மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது
.உயிரிழந்த
 பெண் அடையாளம் காணப்படவில்லை
. அவர் ஒரு காலையிழந்த நிலையில் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.விபத்தில் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>

 


 

புதன், 2 செப்டம்பர், 2020

போனஸ் பணத்தை கோரி கொத்மலை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

வழமையாக ஏப்ரல் மாதம் வரும் போனஸ் பணத்தை இவ்வருடம் வழங்கவில்லை என தெரிவித்து நுவரெலியா – கொத்மலை வீ.டி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 02-09-2020. அன்று 
.போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில்,
“காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு 
மாலை 6 மணிக்கு வீடுகளுக்கு செல்கின்றோம். இடையில் ஆடைத் தொழிற்சாலையில் சொல்லிலடங்கா கஸ்டத்தை அனுபவித்து 
வேலை செய்கின்றோம்.
சம்பளம் குறைவாக காணப்பட்டாலும் பொருளாதார சிக்கலால் வேலை பார்கின்றோம். நாங்கள் கஸ்டப்பட்டு வேலைப்பார்த்து வருடத்தில் மிஞ்சுவது இந்த போனஸ் பணம் மட்டும் தான்.
அதையும் இம்முறை தரமுடியாது என நிர்வாகத்தினர் கூறுகின்றனர். போனஸ் பணத்தை தரும் வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


இராணுவம் யாழ்.பொம்மைவெளியில் திடீர் சுற்றி வளைப்பு.

 

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பொம்மைவெளிப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்த சுற்றிவளைப்பு.01-09-2020. அன்று  காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த 
சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் விற்பனையாளர்கள் பொலிஸ் மற்றும் கஞ்சா ஹெரோயின்களும் மீட்கப்பட்டுள்ளன.சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் 
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸ்
 விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிககைளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



கேரள க ஞ் சா மற்றும் இரண்டு வா ள்களுடன் வவுனியாவில் இளைஞன் கைது

 

கேரள க ஞ் சா மற்றும் இரண்டு வா ள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இளைஞர் நேற்று இரவு (31.08) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, மாமடு, நெடுங்குளம் பகுதியில் ச ந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 20 வயது இளைஞன் ஒருவரின் பொதியினை சோ தனை செய்த போது 575 கிராம் கேரள க ஞ் சா மீ ட்கப்பட்டதுடன், ம றைத்து வைக்கப்பட்டிருந்த இரு வா ள்களும் கைப்ப ற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிசார் கைது செய்யப்பட்ட இளைஞனை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>




Blogger இயக்குவது.