ஞாயிறு, 31 ஜூலை, 2022

நாட்டில் பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்தினை நாட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மிகவும் நெரிசலான பயணங்களின் போது கொள்ளையர்கள் கைவரிசையை காட்டுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.குறிப்பாக...

சனி, 30 ஜூலை, 2022

சந்தைக்கு அறிமுகம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார மோட்டார் கார்

ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை .29-07-2022. அன்று சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.இந்த காருக்கு ´Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஆஸ்டின் மினி மொக் காரை போன்றது.அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை...

வெள்ளி, 29 ஜூலை, 2022

சர்வதேச பொருளாதாரத்தில் 34 வருடங்களில் 1600 கோடி டாலர்கள் இழப்பை ஏற்படுத்திய பாம்பு மற்றும் தவளை

அமெரிக்க நாட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பழுப்பு மர பாம்பு மற்றும் கருந்தவளை போன்ற இரண்டு உயிரினங்களால் 34 வருடங்களில் சர்வதேச பொருளாதாரத்தில் 1600 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் நாட்டின் சயன்டிஃபிக் ரிப்போா்ட்ஸ் என்ற அறிவியல் இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அமெரிக்க நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பழுப்பு மரப்பாம்பு...

வியாழன், 28 ஜூலை, 2022

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம்

தற்போதுள்ள கொரோனா அபாயம் அதிகரித்தால், எதிர்காலத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டலாம் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டால், அது தற்போது பரவி வரும் வேகத்தைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி...

புதன், 27 ஜூலை, 2022

நாட்டில் அவசர கால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (27) பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இன்று மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியதுடன், சபை முதல்வர்...

செவ்வாய், 26 ஜூலை, 2022

மீண்டும் யாழில் வழமைக்கு திரும்பிய பேருந்து சேவைகள்

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.அதேவேளை, யாழ். மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இன்று முதல் 50 வீதமளவில் இயங்குமென யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதாரன் தெரிவித்த்துள்ளார்.இதற்கமைய யாழ்ப்பாணத்தில்...

திங்கள், 25 ஜூலை, 2022

இலங்கையில்துவிச்சக்கரவண்டி பாவனையாளர்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் பிரச்சினை காரணமாக துவிச்சக்கரவண்டிகளின் பாவனைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர முக்கிய அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.கடந்த சில வாரங்களில் மாத்திரம் துவிச்சக்கர வண்டிகளினால் 15க்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் சிலர் படுகாயமும் அடைந்துள்ளனர்.இவற்றில்...

ஞாயிறு, 24 ஜூலை, 2022

இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை(25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.குறித்த அறிக்கையில் மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், வலய பொறுப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள்...

சனி, 23 ஜூலை, 2022

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள்.24-07-2022. நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளதுடன், யாழ் சாலை முடங்குவதால் அதனுடன் இணைந்த சாலைகளின் செயற்பாடுகளும் பாதிக்கப்படுமென தெரிவித்தனர்.இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே யாழ் சாலை ஊழியர்கள் இதனை கூட்டாக அறிவித்தனர்.மேலும்...

வெள்ளி, 22 ஜூலை, 2022

இலங்கையில் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு

புகையிரத கட்டணங்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஇதற்கமைய நாளை  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர அறிவித்துள்ளார்.இதேவேளை, புகையிரத கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன்...

வியாழன், 21 ஜூலை, 2022

ஜனாதிபதி ரணில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங இராஜினாமா செய்துள்ளார் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.இந்நாட்டின்...

புதன், 20 ஜூலை, 2022

நாட்டில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். எனினும், நேற்றைய தினம் வேட்பாளர்கள் தங்களது...

செவ்வாய், 19 ஜூலை, 2022

இலங்கை முழுவதும் குவிக்கப்படும் இராணுவம்

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 18-07-2022.அன்று .வெளியிட்டார் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை கருத்திற்கொண்டு, மக்களின் பாதுகாப்பையும்,...

திங்கள், 18 ஜூலை, 2022

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும்,குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில் இடம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த...

ஞாயிறு, 17 ஜூலை, 2022

தொழில் நுட்ப கோளாறால் பாகிஸ்தானில் அவசரமாக இறங்கிய இந்திய விமானம்

இன்டிகோ நிறுவனத்தின் 6இ-1406 விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சார்ஜாவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். 2-வது பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதுபற்றி விமானி கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து இந்தியாவின் இன்டிகோ விமானம் பாகிஸ்தானில்...

சனி, 16 ஜூலை, 2022

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு-

¨கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது புதிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வகை மாறுபாடுகளில் பல நாடுகளால் நோய் தொற்று பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது,...

வெள்ளி, 15 ஜூலை, 2022

நாட்டில் பதவியேற்றதும் ரணில் சென்ற முதல் இடம் எது தெரியுமா

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு பொல்துவ சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் போது இடம்பெற்ற சம்பவங்களில் காயமடைந்த இரு இராணுவ வீரர்களின் சுகங்களை விசாரிப்பதற்காகவே அவர் சென்றதாக கூறப்படுகிறது.இந்த விஜயத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...

வியாழன், 14 ஜூலை, 2022

இலங்கைக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளது

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தமது பிரஜைகளைக் கேட்டுக்கொண்டுள்ளன. இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>...

செவ்வாய், 12 ஜூலை, 2022

இலங்கை 14 ஆம் திகதி முடங்குமா வெளியான தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்.13-07-2022 நாளை பதவி விலகாவிடின் .14-07-2022.வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கடுமையாக எச்சரித்துள்ளார்.கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்...

திங்கள், 11 ஜூலை, 2022

பூந்தோட்ட பொலிஸ் காவலரன் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது

இலங்கை வவுனியா பூந்தோட்டம் பொலிஸ் காவலரன் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (09-07-2022)இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அச்சந்தர்ப்பத்தில் பொலிஸார் எவரும் காவலரனில் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு...

ஞாயிறு, 10 ஜூலை, 2022

இலங்கையில் டீசலுக்காக காத்திருக்கும் அம்புலன்ஸ் வண்டிகள் யார் விட்ட தவறு

¨வவுனியாவில் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்கு எரிபொருள் இல்லாத நிலையில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலகத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசல் வழங்கப்படவுள்ள நிலையில், சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் டீசல் நிரப்புவதற்காக 1990 அம்புலன்ஸ் வரிசையில் காத்து நிற்கின்றது.வார...

சனி, 9 ஜூலை, 2022

இலங்கையில் பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்! கல்வி அமைச்சின் தீர்மானம் வெளியானது

இலங்கையில் அடுத்த வாரமும் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பான அறிவிப்பு  வெளியானது.அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள விடுமுறை நீடிக்கப்படுவதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் பாடசாலைகளை...
Blogger இயக்குவது.