செவ்வாய், 10 அக்டோபர், 2023

தற்போது சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேல
இதற்கு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. 
சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் உலகளாவிய வினியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மற்ற நாடுகளின் வெற்றிகரமான முயற்சியில் இருந்து சீனா உரிய முடிவை எடுக்கவேண்டும் என அந்தஅறிக்கையில் கூறபட் டுள்ளது
 என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 9 அக்டோபர், 2023

முல்லைத்தீவு இளைஞர்கள் நீதிபதிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு நீதி கோரி, முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 10.15 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயினை கட்டியவாறு அமைதியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிம் நீதி அமைச்சின் செயலாளருக்கு கையளிக்க மகஜர் கையளிக்கப்பட்டது.
முல்லைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்படும் அத்துமீறல் குடியேற்றம் மற்றும் நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் அத்தோடு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக கூறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த கண்டன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிபதிக்காக நீதி கேட்கும் இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு என்ன நீதியோ? , நீதியின் கழுத்தில் தூக்கு கயிறு தீர்த்து போனதா நியாயத்தின் உணர்வு, நீயும் 
பெண்தானே நீதி கிடைக்காத பெண்களுள் நீயும் ஒருத்தியோ?
 நீதி தேவதையே, தொடர்ந்து நடந்தேறும் நீதி புரள்வுகளுக்கு 
என்ன தீர்ப்பு நீதி அமைச்சே? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் 
ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மதகுருமார், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இ.ஜெகதீஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 8 அக்டோபர், 2023

கட்டுவானில் பாதை தொடர்பில் இரு வீட்டாருக்கு முரண்பாடு மூன்று மோட்டார் சைக்கிள் தீக்கிரை

  யாழில்  இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 
யாழ் கட்டுவான் பகுதியில் 06-10-2023.அன்று  
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
அப்பகுதியில் வசிக்கும் இரு வீட்டாருக்கு இடையில் , பாதை தொடர்பில் நீண்ட காலமாக முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது 
இந்நிலையில் ஒரு வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் தங்கி இருந்தார். அவர் தான் தங்கியிருந்த வீட்டாருக்கு ஆதரவாக
 வன்முறை கும்பல் ஒன்றினை கூலிக்கு அமர்த்தி , 
அவர்களுடன் முரண்பட்ட வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் நின்ற இரு மோட்டார் சைக்கிளையும் வன்முறை கும்பல் 
தீக்கிரையாக்கி உள்ளது.
குறித்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு , வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீக்கிரையாக்கி 
விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை பாதிக்கப்பட்ட வீட்டார் 
வன்முறை கும்பலை 
துரத்திய போது , அவர்கள் தப்பி செல்லும் போது ஒரு 
மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர். அதனை வீட்டார் தீக்கிரையாக்கி உள்ளனர். 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 7 அக்டோபர், 2023

நாட்டில் மட்டக்களப்பில் பதட்டமான சூழல் பொலிஸார் குவிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளிலிருந்து விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களின் பூர்வீக மேய்ச்சல் தரைகள் மீளவும் அவர்களிடமே ஒப்படைக்கப்படவும் கோரி  போராட்டம் நடைபெற்று வருகின்றது.
 இந்தநிலையில் அகிம்சை வழியில் இடம்பெறும் போராட்டத்தினை அடக்கப் பொலிசார் குவிக்கப்படுகின்றார்கள் என  தெரிவித்துள்ளார்.
 இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய மேய்ச்சல் தரை அபகரிப்புத் தொடர்பில் தொடர்ந்து 23 ஆவது நாளாக இன்றும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 6 அக்டோபர், 2023

கடந்த ஆண்டு உயிரிழந்த மகாராணியை கொல்ல சதிதீட்டிய சீக்கியருக்கு 9 ஆண்டு தண்டனை

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 
அவரது பெயர் ஜஸ்வந்த் சிங் சைலு. 21 வயதான இவர் கடந்த 2021- ம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார்.
 முகத்தில் முகமூடி அணிந்த நிலையில் ஊடுருவிய அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்புபடை வீரர்கள்
 மடக்கி பிடித்தனர்
விசாரணையில் ஜஸ்வந்த் சிங் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொல்லும் நோக்கத்தில் வந்ததாக திடுக்கிடும் தகவலை 
தெரிவித்தார்.
1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் ராணியை கொல்ல வந்தாக தெரிவித்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. 
அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இங்கிலாந்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்வந்த் சிங் சைலுவை 
கைது செய்தனர். 
இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்வந்த் சிங் சைலுவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பு கூறினார். என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 5 அக்டோபர், 2023

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் அங்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ரிங் ஆப் பெயர் என்கிற கடலுக்கு அடியில் எரிமலைகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியில் ஜப்பான் நாடு அமைந்துள்ளது. பல்வேறு தீவுகளை கொண்ட இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் தோன்றுவது இயல்பான ஒன்று. 
பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களால் ஜப்பான் நாட்டில் அவ்வப்போது சுனாமி போன்ற பேரழிவுகள் 
நிகழ்ந்து வருகிறது. 
இந்த நிலையில் டொரிட்ஷிமோ தீவுக்கு அருகே காலை 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற சக்தி வாய்ந்த அளவில் இந்த நிலநடுக்கம் 
பதிவாகியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள இசூ தீபகற்பத்தில் உள்ள தீவுகளுக்கு ஒரு மீட்டர் உயரத்திலான சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மேலும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது..என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 4 அக்டோபர், 2023

பல்கலைக்கழக வளாகத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. 
மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. 
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பல்கலைக் கழகத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் நிலைமை குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. 
துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி 
வருகிறார்கள். 
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




Blogger இயக்குவது.