ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

நாட்டில் களுத்துறையில் வாக்குச் சீட்டு விநியோகம் செய்த தபாற்காரர் மீது தாக்குதல்

நாட்டில்  வாக்குச் சீட்டு விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய தபால்காரரை தாக்கிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.  
கைது செய்யப்பட்டவர் களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.  
தற்சமயம், தபால்காரர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான படிவத்துடன் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 7 செப்டம்பர், 2024

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரம்

நாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் அமைச்சர்கள் இன்றையதினம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
 கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினரே இன்று காலை யாழ் நகரில் பிரசார நடவடிக்கையை மேற்கொண்டனர்.
 நல்லூர் சங்கிலியன் தோப்பு மற்றும் உடுப்பட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பிரசார கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தருகின்றமை  குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 6 செப்டம்பர், 2024

நாட்டில் மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன் அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டில் வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் கோருவதற்கு கல்வி அமைச்சு 
தீர்மானித்துள்ளது.

 இந்த ஆண்டு, அதிகபட்சமாக, பதினைந்து இலட்சம் ரூபாய் வரை, ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் மற்றும் மாணவர்கள் பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இந்த கடன் தொகையைப் பெறுவதற்கு இரண்டு உத்தரவாததாரர்கள் கட்டாயம் என்றும், தாய் அல்லது தந்தை முதல் உத்தரவாததாரராக
 கையொப்பமிட வேண்டும் மற்றும் கடன் தொகையை 
அங்கீகரிக்கும் வங்கியின் தேவைக்கேற்ப
 இரண்டாவது
 உத்தரவாததாரரை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 கடன் பெற்ற 292 மாணவர்கள் கடன் தொகையை
 செலுத்த தவறியமையால் இம்முறை உத்தரவாததாரர்களின் தேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்கது  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 5 செப்டம்பர், 2024

தமிழ் மக்கள் அனைவரும் சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை

தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன்,
 தமிழ் மக்கள் அனைவரும் 'சங்கு'ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை 
விடுத்துள்ளார்.
 அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் அனாதைகளாக அலைந்து திரிகிறார்கள். நாம் நம்பிய அனைவருமே தேர்தல்களின் பின்னர் எம்மை ஏமாற்றியே 
வருகிறார்கள். 
தேர்தலில் வாக்குறுதி கொடுத்த யாருமே அதன் பின்னர் எம்மை மதித்ததில்லை. இம்முறை எமக்கு ஒரு புதிய தெம்பு பிறந்துள்ளது. வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்து கொண்டே நாம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம். 
 நாம் நம்பிய அனைவரும் எம்மைக் கைவிட்ட போதும், நாம் எமது உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை என்பதையும், அதற்காகப் போராடும் எமது உணர்வுகளை இன்னும் இழந்து
 விடவில்லை என்பதையும் அத்துடன் எமது வலிகளையும் வேதனைகளையும் இந்த உலகுக்கு உரக்கச் சொல்லப் போகிறோம்.
 வெற்றி பெறும்வரை எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவது 
எமது வரலாற்றுக் கடமை. கடந்த காலங்களில் கூட்டணியின் தலைமை பல துரோகங்களுக்குத் துணைபோய் இருக்கிறது என்பது. 
ஆனால், இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை தமிழ் இனத்தின் வரலாற்றுக் கடமையைச் செய்யத் தயங்காது. என்றுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 4 செப்டம்பர், 2024

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இந்தாஅண்டின் தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

நாட்டில் இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (04) முதல் ஆரம்பமாகவுள்ளன.
 இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து12,319 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 
அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76 ஆயிரத்து 977 பேர் தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு 
அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா 
அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் 
அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், 
சிறப்பு பொலிஸ் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு
 பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்றையதினம் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
 தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இன்றையதினத்திற்கு மேலதிகமாக குறித்த இடங்களில் 6ஆம் திகதியும் தபால்மூலம் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் முப்படை 
முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் 
இடம்பெறவுள்ளன.
 குறித்த திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத 
வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், எதிர்வரும், 11, 12ம் திகதிகளில், தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
 இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் செவ்வாய்க்கிழமை (3) முதல் விநியோகிக்கப்படும் நிலையில், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
 இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகளை வாகனங்களில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 அவ்வாறான வாகனங்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 2 செப்டம்பர், 2024

நாட்டில் அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள வாக்காளர் அட்டைகள்

நாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் 02-09-2024. இன்றுஅஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன. 
 அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில் குறித்த வாக்காளர் அட்டைகள், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி வரை
 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதன்போது, சுமார் 8,000 பேரைக் கடமைகளில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. 
 குறித்த தினங்களில் வாக்களிக்கத் தவறுபவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கது  என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

நாட்டில் சிறையில் உள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல 
தெரிவித்துள்ளார்.  
இவர்களில் 66 பேர் சிறை தண்டணை விதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், 256 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  
கடந்த 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் சிறைச்சாலையில் 185,056 கைதிகள் இருந்துள்ள நிலையில் அவர்களில் 14,952 பேர் உயர்தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.  
இது தவிர, சாதாரண தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களில் 44,614 பேரும், எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 64,684 பேரும், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 34,673 பேரும், 1-5 தரத்தில் தேர்ச்சி 
பெற்றவர்களில் 20,188 பேரும் சிறைச்சாலையில் உள்ளனர்.  
இதேவேளை, பாடசாலைகளுக்கு செல்லாத
 5,370 கைதிகள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.