வியாழன், 15 ஆகஸ்ட், 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல்

இலங்கை 2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
01. திலித் சுசந்த ஜயவீர 
02. சரத் மனமேந்திர 
03. அபூபக்கர் முகம்மது இன்பாஸ் 
04. ஏ. எஸ். பி. லியனகே 
05. பானி விஜேசிறிவர்தன 
06. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க 
07. அஜந்தா டி சொய்சா 
08. பத்தரமுல்லை சிரலதன தேரர் 
09. சரத் பொன்சேகா 
10. நுவன் சஞ்சீவ போபகே 
11. ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத் 
12. ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க 
13. கே.கே. பியதாச 
14. மையில்வாகனம் திலகராஜா 
15. சிறிபால அமரசிங்க 
16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 
17. சரத் கீர்த்திரத்ன 
18. கே. ஆனந்த குலரத்ன 
19. நாமல் ராஜபக்ஷ 
20. அக்மீமன தயாரதன தேரர் 
21. கே.ஆர். கிஷன் 
22. பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த 
23. விஜயதாச ராஜபக்ச 
24. அனுர சிட்னி ஜயரத்ன 
25. சிறிதுங்க ஜயசூரிய 
26. மஹிந்த தேவகே 
27. முகமது இல்லயாஸ் 
28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ 
29. ஆண்டனி விக்டர் பெரேரா 
30. கீர்த்தி விக்கிரமரத்ன 
31. சஜித் பிரேமதாச 
32. ரணில் விக்கிரமசிங்க 
33. மரக்கலமான பிரேமசிறி 
34. லலித் டி சிலவா 
35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா
36. டி.எம். பண்டாரநாயக்கா 
37. அனுரகுமார திஸாநாயக்க 
38. அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா 
39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான.
என்பதாகும்
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 14 ஆகஸ்ட், 2024

பாடசாலை பரீட்சை வினாத்தாளில் இடம் பிடித்த வைத்தியர் அர்ச்சுனா

இலங்கையில் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட வலய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பரீட்சையில் டாக்டர் அருச்சுனா தொடர்பில் வந்த வினாதாள் சமூகவலைத்தளங்களில்
 வெளியாகியுள்ளது. 
பாடசாலைகளில் இடம்பெற்ற இரண்டாம் தவணை பரீட்சை இடம்பெற்ற நிலையில் குடியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றிலேயே இவ்வாறு மருத்துவர் அருச்சுனா பெயரில் கேள்வி 
இருந்துள்ளது.
அதாவது மாணவர்களிடம் கொடுக்கப்பட்ட அந்த பரீட்சை தாளில், டாக்டர் அர்ச்சுனா ஒளிப்பு மறைப்பு இன்றி மனதில் பட்டதை கூறினார். 
இங்கு ஒளிப்பு மறைப்பு என்ற இணைமொழி தரும் பொருள் என்ன என்பதே அந்த வினா ஆகும். 
 குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் இதன் உண்மைதன்மை உறுதிப்படுத்தமுடியாமல் உள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் கடிதம் மன்னார் விவகாரம் யார் பணம் பெற்றது மோதல் ஆரம்பம்

மன்னார் விவகாரம் சிந்துஜாவுக்கு ஆன போராட்டம் திட்டமிட்ட ரீதியில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு அண்ணன் செந்தூரன்னால் குலைக்கப்படுகிறது.
அன்புள்ள செந்தூரன் அண்ணா. நீங்கள் எதுக்கு மன்னாருக்கு 
வந்து நிக்கிறீங்க என்று பொதுமக்களுக்கு விளங்காத வரைக்கும் நீங்கள்
 அங்க நிக்கலாம்.
நீங்களா வீட்ட போகாட்டி.. இல்லாட்டி அவங்களே பார்சல் பண்ணி இந்தியாவில விட்டுருவாங்க.
கெதியாக கிளம்பவும்.. உங்களுக்கு மனநோயோ என்று சொல்லி இப்படியெல்லாம் என்ன அடிச்சு கேக்குறாங்க.
மன்னார் எனது வீடு அதை நான் பார்த்துக் கொள்வேன்..
இப்படிக்கு அன்பு தம்பி அர்ச்சுனா.எனகுறிப்பிட்டுள்ளார் 
என்பதாகும்





 

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

மருத்துவர் அர்ச்சுனாவின் மன்னார் சம்பவமும் ஏழுபேர் கொண்ட நண்பர்கள் அணி

மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா நண்பர்கள் அணி' (நண்பர்கள் அணி) சென்ற ஓகஸ்ற் மூன்று, ஐந்து மற்றும் ஏழாம் திகதிகளில் அர்ச்சுனா சார்பில் மன்னார் நீதிமன்றில் முன்னிலையான சட்டவாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது.
அவ்வகையில், பின்வரும் சட்டவாளர்கள் (Attorney at Law) மிகுந்த நன்றியுடன் பெயரிடப்படவேண்டியவர்கள்:
அன்ரன் புனிதநாயகம்
றெஜி றோய்ஸ் குரூஸ்
ஜெகநாதன் தற்பரன்
தர்மராஜா வினோதன்
கணபதிப்பிள்ளை கணேஸ்வரன்
அல்வின் கமல்ராஜ்
புராதனி சிவலிங்கம்
சுதர்சனா ஜெயசீலன்
செல்வராஜ் டினேசன்
சுலோக்சினி நாகராஜா
அன்ரனி மடுத்தீன்
அப்துல்ஹுதா பாத்திமா சப்னா
டிலக்சினி றொபின்
போல் ரிறோன்
கௌசல்யா நரேந்திரன்
இவர்களுக்கு ஆதரவாகத் தோள்கொடுத்த மற்றைய 
சட்டவாளர்களுக்கும் நன்றி.
அர்ச்சுனாவின் மன்னார் சட்டத் தேவைகள் குறித்துக் கரிசனையுடன் முயற்சிகளை எடுத்த அஜித், சுசி, கிரி, ஜெராட், இளவேனில், செலஸ்ரின் ஆகியோருக்கு நன்றி. சாவகச்சேரியிலிருந்து
 சட்ட ஆதரவை வழங்க முயற்சித்த அர்ச்சுனா அபிமானிகளையும் நண்பர்கள் அணி அறியும். அவர்களுக்கும் நன்றி... எனப் பதிவிடப்பட்டுள்ளது. 
மன்னார் சம்பவம் 
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மன்னார் மருத்துவமனைக்கு அர்ச்சுனா போன நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சனிக்கிழமை 
காலையில் அவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டதாகத் தகவல் வருகிறது. அஃது ஒரு பொதுவான உரையாடலாக இருக்கும் என்ற நம்பிக்கை தான் எல்லோரிடமும்!
ஆனாலும் அர்ச்சுனா கைது செய்யப்படுவதான செய்திவருகிறது. அவசர அவசரமாக அவருக்கு ஆதரவு தரும் நடவடிக்கைகள் நண்பர்கள் அணியினால் முடுக்கி விடப்படுகின்றன. சாவகச்சேரி 
அபிமானிகள் சிலரும் இயங்குகிறார்கள். சட்டவாளர்கள் மடுத்தீன், சுதர்சனா மற்றும் டினேசன் ஆகியோர் நீதிமன்றுக்கும் நீதிபதியின் வதிவிடத்துக்கும் விரைகிறார்கள். சனியன்றே அர்ச்சுனாவை வெளியே 
வைத்திருக்கும் முன்நகர்வு முயற்சி செய்யப்பட்டாலும், அவரை விளக்கமறியலில் வைக்கும் முடிவு 
தெரியவருகிறது.
சனி முன்னிரவில் நண்பர்கள் அணி மன்னார் சட்டவாளர் மூலமாக வவுனியாவில் இருக்கும் சட்டவாளர் புனிதநாயகத்தைத் தொடர்புகொள்கிறது. ஒரு குடும்ப நிகழ்வில் இருந்த போதிலும் அந்த 
அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் திங்களன்று 
பிணை முன்நகர்வுக்கான முயற்சியை எடுக்கலாம் என்று
 தீர்மானிக்கிறார்.
திங்கள் பகல் இந்த முன்நகர்வு மன்னார் நீதிமன்றத்தாற் கருத்தில் கொள்ளப்படுகிறபோது அர்ச்சுனா சார்பில் ஆறு 
சட்டவாளர்கள் (புனிதநாயகம், மடுத்தீன், சுதர்சனா, டினேசன், சுலோக்சினி, புராதனி) முன்வருகிறார்கள். ஆனால், ஆச்சரியப்படும் வகையில் பெருந்தொகையான சட்டவாளர்கள் பிணை
 விண்ணப்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அர்ச்சுனா மேலும் இரண்டு நாட்களுக்குக் காத்திருக்கவேண்டிய 
நிலை வருகிறது.
புதன் கிழமையன்று சட்டவாளர் புனிதநாயகம் தலைமையில் அர்ச்சுனா சார்பிலான பதினைந்து சட்டவாளர்கள் நீதிமன்றுக்கு 
வருகிறார்கள். மன்னார் மட்டுமன்றி, முல்லைத்தீவு, 
வவுனியா, யாழ்ப்பாணம் என்று வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து அவர்கள் வருகிறார்கள். மற்றைய தரப்பில் ஆறு சட்டவாளர்கள் பிணைக்கு எதிராக வாதாடுகிறார்கள். மருத்துவமனைக்குள் வந்து மரணித்த
 ஓர் இளம் தாய்க்கு வன்முறை இல்லாத வகையில் நீதி கேட்டமைக்காக ஒருவருக்குப் பிணை மறுப்பார்களா என்று வழக்கைப் பார்க்க வந்த பொதுமக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
புதனன்று பிற்பகலில் இறுக்கமான முன்நிபந்தனைகளோடு அர்ச்சுனாவுக்குப் பிணை தரப்படுகிறது. வெளியே வரும் அர்ச்சுனாவுக்காக 
நீதிமன்றுக்கு வெளியே மக்கள் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். ஆனாலும் நீதிமன்றின் அமைதியைக் காக்கும் நோக்கிலும் தேவையற்ற 
குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கிலும் சட்டவாளர்கள் அர்ச்சுனாவைப் பின்பக்கத்தால் நீதிமன்ற வளவுக்கு வெளியே
 கொண்டுபோகிறார்கள். இருந்தாலும், அர்ச்சுனா போய்விட்டார் என்பதை அறிந்து ஏமாற்றம் கொண்ட மக்களின் உணர்வை அறிந்து அர்ச்சுனா மன்னார் விளையாட்டரங்குக்கு அழைத்துவரப்படுகிறார்.
தங்களுக்காகக் குரல் கொடுத்த அர்ச்சுனாவுக்கு நன்றி கூற அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அர்ச்சுனாவின் மனதில் மன்னார் மக்கள் ஆழமாகப் பதிந்து போகிறார்கள்!
குறிப்பு: 'மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா நண்பர்கள் அணி' என்பது உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து அவருடன் தனிப்பட்ட தொடர்பிலுள்ள ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவாகும்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு பணம் வசூலிக்கும் கும்பல்


இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட குழுவினர் வர்த்தகர்களிடம் சென்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு பணம் வசூலிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கிறது.
இவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் இலங்கை பொலிஸில் முறைப்பாடு 
செய்துள்ளது.
இவ்வாறு அறவிடப்படும் தொகைக்கு தாம் பொறுப்பல்ல என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பில்
 தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து வகையான வரிகள் தொடர்பாகவும், வரி வசூல் நிலுவைத் தொகைகள் முறையாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ச
ட்டப்பூர்வமாக மட்டுமே செய்யப்படும் என அனைத்து வரி செலுத்துவோருக்கும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், வரி செலுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அருகில் உள்ள பிராந்திய அலுவலகம் அல்லது உள்நாட்டு இறைவரி
 திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு வந்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் மேலும் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.என்பது  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 10 ஆகஸ்ட், 2024

நாட்டில் தேர்தலில் என்னதான் நடக்கும் நொந்து புண்ணாகப்போவது மக்கள் வாழ்வு மட்டுமே

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளன.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக ஒருவர் களமிறக்கப்படும் முதலாவது
 சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த நிலையில், மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜூம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில், அவர்கள் மலையக தமிழ் சமூகத்தை கவனத்தில் கொள்ளாததை அடுத்தே, தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக மயில்வாகனம் திலகராஜ், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் தமிழ் வேட்பாளர்கள் தனித்து ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும், கணிசமான வாக்குகளை 
பெற முடியவில்லை. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களம் கண்டுள்ள 
தமிழ் வேட்பாளர்கள் முன்னுள்ள வாய்ப்புகள் என்ன? 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து
 தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் வகையில் கடந்த காலங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை
 நடத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதித் தேர்தலின் தமிழ் பொது வேட்பாளராக பா.அரிநேத்திரன் அறிவிக்கப்பட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பா.அரியநேத்திரன், 2004ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
அதனைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ஈட்டி, நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார். பா.அரியநேத்திரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார் என்று 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் 
தெரிவிக்கின்றார்.
தேர்தல் ஆணையகம் வேட்பாளர் நியமனங்கள் செய்யப்பட்டதன் பிறகு அதற்கான சின்னத்தை ஒதுக்கும். "அதுவரை என்ன சின்னம் என்பது எங்களுக்கு தெரியாது" என சுரேஷ் பிரேமசந்திரன்
 தெரிவிக்கின்றார்.
''தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வுகளை கொண்டு வருவதற்கான ஒரு நகர்வை ஏற்படுத்தும் முறையில் அந்த வெற்றியை 
தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என
 கருதுகின்றோம்.
தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒன்றை சர்வதேச வெளிக்கு கொண்டு செல்லும் அளவில் இது மிகப்பெரிய உதவிகளை செய்யும்." என அவர் 
குறிப்பிடுகின்றார்.
தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்காகவே வேட்பாளராக களமிறங்குகின்றேனே தவிர, ஜனாதிபதியாவதற்கு அல்ல என்று தமிழ் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரன் 
தெரிவிக்கின்றார்.
''எதிர் வருகின்ற 9வது ஜனாதிபதித் தேர்தலிலே வடகிழக்கில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்கான ஒரு வேட்பாளராக என்னை நிறுத்தியுள்ளனர். நான் வெறும் அடையாளம். 
அதாவது தமிழ்த் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேனே தவிர, ஸ்ரீலங்கா சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்கு
 அல்ல" என தெரிவித்தார். இனப் படுகொலை 
நிகழ்ந்ததிலிருந்து தமிழ் மக்கள் உரிமையற்ற இனமாக இருப்பதாக கூறிய அவர், தங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திற்கும், ஸ்ரீலங்காவிற்கும் வலியுறுத்துகின்ற ஒரு அடையாளத்திற்காக மாத்திரமே தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான கட்சியாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான இதுவரை தமது இறுதித் தீர்மானத்தை 
அறிவிக்கவில்லை.
இந்தநிலையில், பொது வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை 
வழங்கியுள்ளனர். வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியானது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கியுள்ளது.
மறுபுறம், தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பில், மலையக தமிழர்களை கருத்திற் கொள்ளாததாலேயே, ஜனாதிபதித் தேர்தலில் தாம் களமிறங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் 
தெரிவிக்கின்றார்.
இலங்கையின் 70 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இறுதி 30 வருட காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்னை பேசப்பட்ட அளவிற்கு, மலையக தமிழர் பிரச்னை பேசப்படவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார். "தமிழ் பொது வேட்பாளர் என்ற கோஷம், மலையக தமிழரை
 உள்ளடக்கவில்லை என்பது அந்த பொது வேட்பாளர் கருத்துகளில் இருந்தே
 வெளிப்பட்டது. தமிழ் பொது வேட்பாளர் என பெயரை வைத்துக்கொள்கின்றார்களே தவிர, மலையக மக்கள் தொடர்பில் எதுவும் பேசவில்லை" என திலகராஜ்
 தெரிவித்தார்.
கொள்கை வகுப்பாளர்களும் இந்த மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த மக்களின் பிரச்னைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியே தான் போட்டியிடுவதாக கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் பலவும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், தென் பகுதியிலுள்ள தமிழ் கட்சிகள், தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணப்பாட்டிற்கு ஆதரவை 
வழங்கவில்லை.
மலையகம் உள்ளிட்ட நாட்டின் தென் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்க
 மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி, மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு 
பொருத்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழிடம் கூறினார்.
இந்த காலத்திற்கு பொருத்தமற்ற நகர்வாவே, தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தான் பார்ப்பதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் 
தெரிவிக்கின்றார். தமிழர் தரப்பு அரசியலில் பேசும் தரப்பாக இருக்க வேண்டும். 
ஆனால் துரதிஷ்டவசமாக 30 வருட கால யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர், 2009ம் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் முடிவடைந்தும். வடக்கு, கிழக்கு, மலையகத்தை மையப்படுத்தி
, தமிழர்கள் ஒருமித்த திசையிலே பேரம் பேசும் சக்தியை இழந்திருக்கின்றார்கள் என்ற நிலை கவலைக்குரிய ஒரு விடயம்" என்கிறார் உமாச்சந்திரா பிரகாஷ்.
தமிழர்களின் இருப்பு இலங்கையில் மிக முக்கியமான ஒரு விடயம் என்ற வகையில் காலத்தில் பொருத்தமற்ற ஒரு அரசியல் நகர்வாக பொது வேட்பாளர் நகர்வை பார்ப்பதாக அவர் கூறுகிறார். "இது,
 ஒட்டு மொத்த தமிழ் இனத்தினுடைய இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. 
தமிழர் தரப்பு தற்போது மிக புத்திசாலித்தனமாக சிந்தித்து, அரசியலில் எந்த பக்கமாக இருந்தாலும், வெற்றி கிடைக்கும் பக்கம் பேரம் பேசும் சக்தியாக இருந்து தங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். உரிமையுடன் கூடிய இலக்கத்தை கொள்ள வேண்டும்." என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ்
 தெரிவிக்கின்றார்.
அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்களிடம், தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு கிடையாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.
தமிழர்களின் பலத்தை காண்பிப்பதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவர் களமிறங்குவது இந்த தருணத்தில் பொருத்தமற்றது என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல்
 தெரிவிக்கின்றார்.
''இலங்கை தமிழர்கள் குறிப்பாக நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் விடயங்களில் தீர்க்கமான கட்டங்களில் தங்களின் வாக்குகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்த நிலையில், இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் வடக்கு, கிழக்கு, 
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு 
களமிறங்கியிருந்தாலும், அவர் ஜனாதிபதியாவதற்கு எந்தளவு வாய்ப்புக்கள் இருக்கின்றது 
என்று கேட்டால், அதற்கு மிக தெளிவாக அவரால் ஜனாதிபதியாக
 முடியாது என திட்டவட்டமாக கூறிக்கொள்ள முடியும்" என்றார் ரசூல்.
தமிழ் மக்களின் தனித்துவத்தை அல்லது தமிழ் மக்களின் பலத்தை நிருபிப்பதற்கான தருணம் இதுவென எண்ணி அவர் களமிறங்கியிருந்தால், நிச்சயமாக இது அதற்கான தருணம் கிடையாது
 எனவும் அவர் கூறுகிறார். "காரணம், தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். 
அது நாடாளுமன்றத் தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல்களாக இருக்கலாம். அந்த இடங்களில் தமிழர்களின் பலத்தை 
காட்ட வேண்டும். அதனூடாக உரிமைகளை
 பெற்றுக்கொள்வதற்கான
 வலுவை பெற முடியும். ஜனாதிபதித் தேர்தலில் அந்த பலத்தை காண்பிப்பது, அதற்கான தருணம் கிடையாது என நினைக்கின்றேன்" என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா
 மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக வடக்கு மாகாணம் அமைந்துள்ளது. தேர்தல் காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி 
ஆகிய மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மாவட்டம் எனவும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வன்னி மாவட்டம் எனவும் கருதப்பட்டு வாக்கு 
பதிவு இடம்பெறும்.
இந்த நிலையில், வட மாகாணத்தில் மாத்திரம் 8,99,268 வாக்குகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணத்தை பொருத்தவரை திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல (அம்பாறை) ஆகிய மூன்று மாவட்டங்கள் 
உள்ளடங்குகின்றன.
இந்த மூன்று மாவட்டங்களிலும் 13,21,043 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை தவிர, முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர்.
 குறிப்பிட்ட சில பகுதிகளில் சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர். தென் பகுதியை பொருத்தவரை பெரும்பான்மை சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமையினால் தமிழர்கள் வாக்கு 
எண்ணிக்கையை சரியாக கணிப்பிட முடியவில்லை.
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

தினசரி யாழ் பலாலி சென்னை இடையிலான விமான சேவை

யாழ் பலாலி சென்னை இடையிலான தினசரி விமான சேவையை இன்டிகோ (INDIGO) விமானத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
 தினசரி பிற்பகல் 3.55 மணிக்கு யாழ். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 5.10 PM இற்கு சென்னை சென்றடையும்.
 சென்னை விமான நிலையத்தில் பிற்பகல் 1.55 இற்கு புறப்பட்டு , 3.10 மணியளவில் யாழ். வந்தடையும். பயணியொருவர் 30Kg மற்றும் 7Kg Hand luggage யுமாக மொத்தம் 37Kg கொண்டு செல்ல முடியும்.
 எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி தொடக்கம் பயணத்தை மேற்கொள்ள முடியும் .குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.