சனி, 19 செப்டம்பர், 2020

போலி உறுதி மூலம் கையகப்படுத்திய குற்றச்சாட்டில் தமிழ் கோடீஸ்வரர் கைது.

 

கடந்த 2019 ஏபரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமான  சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான, 
கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள 18 கோடி ரூபா பெறுமதியான வீட்டை, போலி உறுதிப் பத்திரம் ஊடாக கையகப்படுத்திய விவகாரம் தொடர்பில், சி.ஐ.டி.யினர் நடத்தி வந்த விசாரணையில் பலர் கைது
 செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் கோடீஸ்வர வர்த்தகர் சிவபாதன் வாகீஷன், சட்டத்தரணி நதீல் துஷாந்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமயலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே
 இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.பம்பலபிட்டிப் பிரதேசத்தை சேர்ந்த தொடர்மாடிகலை அமைத்து விற்பனை செய்யும் கோடீஸ்வர வர்த்தகரான சிவபாதன் வாகீஷன், சட்டத்தரணி நதீல் துஷாந்த
 மாலகொட, ஆமர் வீதி பகுதியைச் சேர்ந்த ராமையா பரிமாள் அழகன், நீர்கொழும்பு –
 கொச்சிக்கடை, போரதொட்டை பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.எம். அமானுல்லாஹ், ராஜரத்னம் ராஜலிங்கம் ஆகிய சந்தேக
 நபர்களே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது 
குறிப்பிடத் தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 18 செப்டம்பர், 2020

லடாக் எல்லை விவகாரம்…வாய்ப் பேச்சால் மட்டும் சீனாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!!

 

சீனா போர்கள் இன்றி வெல்வதையே நோக்கமாக கொண்டிருக்கும். எனவே அவர்கள் போருக்கான சூழ்நிலையை உருவாக்கினால் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை சந்திப்பார்கள் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.சீனாவின் அதிகாரப்பூர்வ 
நாளேட்டில் இந்தியாவால் குளிர்காலத்தில் திறம்பட செயற்பட முடியாது என இந்திய படை பலத்தை குறைத்து 
மதிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா மேற்படி தெரிவித்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வடக்கு பிராந்திய இராணுவ கட்டளையின் செய்தி தொடர்பாளர், “ லடாக்கில் உயரமானது முதல் மிக உயரமானது வரையிலான மலைகள் உள்ளதுடன், அங்கு 40 அடிவரை கடும் பனிப்பொழிவு இருக்கும் எனவும்
 குறிப்பிட்டுள்ளார்.காற்றின் குளிர்ச்சியான காரணி துருப்புகளுக்கு நிலைமையை மேலும் மோசமாக்கும் எனத் தெரிவித்த அவர் பனிப்பொழிவால் சாலைகளும் மூடப்பட்டிருக்கும் அதேவேளை 
இவை அனைத்தையும் மீறி, இந்திய படைகளுக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பது என்னவென்றால் இந்திய வீரர்கள் குளிர்கால போரின் பெரும் அனுபவத்தை கொண்டுள்ளனர் என்பதுதான் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், சீனா எப்போதுமே போர்கள் இன்றி வெல்வதையே 
நோக்கமாக கொண்டிருக்கும். எனவே அவர்கள் போருக்கான சூழ்நிலையை உருவாக்கினால் அவர்கள் சிறந்த பயிற்சி
 பெற்ற சிறந்த முறையில் தயார்படுத்தப்பட்ட, முழுமையாக ஓய்வு எடுக்கப்பட்ட, உளவியல்ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை சந்திப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சர்வதேச ரீதியில் பல்வேறு தடைகளையும் தாண்டி முன்னிலைக்கு வந்த இலங்கை..

 

உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் ஸ்ரீலங்கா 83 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக புதிய தரப்படுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இத்தரப்படுத்தலை
 Canada’s Fraser Institute மற்றும் Advocata Institute Sri Lanka ஆகியன இணைந்து வெளியிட்டுள்ளன.162 நாடுகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்ட தரப்படுத்தலிலேயே ஸ்ரீலங்காவுக்கு 83 ஆவது
 இடம் கிடைத்துள்ளது.அதிக செழிப்பு , அரசியல் மற்றும் சுதந்திரம் என்பவற்றை முதல்நிலைப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற இப்பட்டியலில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் என்பன முறையே
 முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன.இதேவேளை நியூசிலாந்து, சுவிஸ்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாட்டில் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல இந்த
 விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் 22 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது
.இதன்போது முதலாம் வாசிப்புக்கென நீதி 
அமைச்சரால் குறித்த சட்டமூலம் 
முன்வைக்கப்படவுள்ளது.அதன்பின்னர் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்துவதற்கு ஏழு நாட்கள் வழங்கப்படவுள்ளன.ஏதேனும் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு 
தொடுத்தால் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுபெறுவதற்கு மூன்று வாரங்கள் எடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டமூலம் குழுநிலை விவாதத்தின்போதே திருத்தப்படவுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 16 செப்டம்பர், 2020

இரத்மலானை விமான நிலையம் விரைவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றம்

 மாலைத்தீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை இலக்கு வைத்து இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமான பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாதுறை 
அமைச்சு தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் சர்வதேச விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக 
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இரத்மலானை விமான நிலையத்தினுள் சர்வதேச விமான 
செயற்பாடுகளை அதிகரிப்பதற்கான அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எல்லை விமான செயற்பாட்டிற்கு உள்ள கோரிக்கையை கருத்திற்கொண்டு, 
மாலைத்தீவு மற்றும் இந்தியாவிற்கு விமான 
பயணத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய இரத்மலானை விமான
 நிலையத்திற்கு வரும் விமானங்களுக்கு மிகப்பெரிய நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

யாழில் கடத்தப்பட்ட மாணவியின் முறைப்பாட்டைப் பதிவு செய்ய மறுத்த பொலிஸ் அதிகாரி

 

யாழில் 15 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர்
 ஒருவர், மாணவியைத் தாக்கியுமுள்ளார்.மாணவி நேற்று காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் சென்ற போது, கோண்டாவில் இ.போ.ச சாலை 
முன்பாக ஒருவரால் மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.இந்த நிலையில் மாலை 3.30 மணியளவில் மாணவி மீளவும் அதே இடத்தில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.மாணவியால் 
தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடத்திச் சென்றவர் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் என்று அறிய முடிகின்றது.
சம்பவம் தொடர்பில் 
முறைப்பாட்டை வழங்க 
மாணவியின் தாயார், மாணவியுடன் கோப்பாய் 
பொலிஸ் நிலையத்துக்கு நேற்று மாலை சென்றுள்ளார்.அங்கு சுமார் 2 மணி நேரம் காத்திருக்க 
வைத்த குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, மாணவியைத் தாக்கியுமுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ் அதிகாரி மாணவியையும் அவரது தாயாரையும் திருப்பி அனுப்பியுள்ளார்.இந்த நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மாணவியின் வீட்டுக்கு இரவு சென்று முறைப்பாட்டை வழங்க வருமாறு கேட்டுள்ளார்.எனினும் மாணவியின் தாயார் மற்றும் கிராம மக்கள் பொலிஸாரின் செயலைக் கண்டித்ததுடன் முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம்
 செல்ல மறுத்தனர். .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மதவாச்சியில் மது அருந்திய பாடசாலை மாணவிகள் பொலிஸாரால் கைது

 

அனுராதபுரம் மதவாச்சிப் பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 தரத்தில் பயிலும் மூன்று மாணவிகள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு 
அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, மாணவிகள் எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.இந்த 
மாணவிகள் மதவாச்சியில் உள்ள விகாரை 
ஒன்றில் நடத்தப்படும் தனியார் வகுப்பில் கலந்துக்கொள்ளவதற்காக வந்த போது, தண்ணீர் போத்தல்களில் பியர் மது பானத்தை எடுத்து வந்து அருந்திக்கொண்டிருந்த போதே கைது 
செய்யப்பட்டுள்ளனர்.கறுப்பு நிறக் காரில் வந்த நபர் ஒருவர் இந்த மாணவிகளுக்கு மதுபானத்தை கொண்டு வந்து கொடுத்துள்ளதாகவும் அந்த நபரை கைது செய்ய விசாரணைகளை ¨
ஆரம்பித்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மாணவிகள் நீண்ட காலமாக 
மதுபானத்திற்கு அடிமையாகி இருப்பது, பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.