சனி, 31 ஆகஸ்ட், 2024

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கை

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு 
வாக்களிக்குமாறு நாட்டை நேசிக்கும் உண்மையான ஐ.தே.க.ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
 சற்று முன்னர் பண்டாரவளையில் நடைபெற்ற "
இயலும் ஶ்ரீலங்கா" வெற்றிப் பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதை தெரிவித்தார்.குறிப்பிடத்தக்கது  என்பதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

நாட்டில் கொழும்பில் புதிய கூட்டணி தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 
புதிய கூட்டணி எதிர்வரும் 5ஆம் திகதி
 உருவாக்கப்படவுள்ளது.
 இதனை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
 அத்துடன், ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (29) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
 அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இந்த புதிய 
கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (29) பிற்பகல் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன், இதில் சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
 எதிர்வரும் 5ஆம் திகதி பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் புதிய கூட்டணியை அறிவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தனவும், 
செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவும்
 நியமிக்கப்படவுள்ளனர். 
 ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நியமிக்கப்பட உள்ளனர். அத்துடன், இந்த புதிய கூட்டணி எதிர்காலத்தில் நடக்கவுள்ள தேர்தல்களில் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்கது  என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 29 ஆகஸ்ட், 2024

நாட்டில் PAYE வரி திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் PAYE வரி திருத்தம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், அது எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க 
தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அஹலியகொடவில் 28.08.2024 அன்று .இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
 மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "இன்னொரு பிரச்சனை நீங்கள் சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரி. அதுவும் ஒரு பெரிய பிரச்சனை. ஐஎம்எப் மற்றும் நாங்களும் அதை திருத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டோம். 
அடிப்படை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு முன்மொழிவைச் செய்துள்ளோம், அவர்கள் மற்றொரு திட்டத்தை முன்வைத்துள்ளனர். எனவே இந்த இரண்டு முன்மொழிவுகளும் விவாதிக்கப்பட்டன, 
நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டியதும், சரியான தொகையை இங்கே அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 28 ஆகஸ்ட், 2024

அடிப்படை சுதந்திரத்திற்கு இலங்கையில் அச்சுறுத்தல் ஐ.நா அறிக்கையில் தெரிவிப்பு

இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஐநா அறிக்கையை மேற்கோள் காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
குறித்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டு 
ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இலங்கையில் வறுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை ஆராய்வதற்கும் சாட்சியங்களை சேகரிப்பதற்கும் பல்வேறு முறைகளின் ஊடாக ஏற்பட்டுள்ள தடைகளை ஆராய்ந்து சர்வதேச சமூகத்தின் தலையீட்டிற்கான தற்போதைய பிரேரணையை புதுப்பிக்குமாறு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் சபையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை
 விடுத்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், தற்போதுள்ள தீர்மானத்தை புதுப்பிப்பதற்கு மேலதிகமாக இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென 
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

தற்காலிகமாக கனடாக்கு குடிபெயரும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்

தற்காலிகமாககனடாவுக்குக் குடிபெயரும்  வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக பிரதமர் நேற்று 
தெரிவித்துள்ளார்.
பருவகால பழங்கள் பறிக்கும் பணி, கட்டுமானம் மற்றும் சுகாதாரத்துறைக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு 
அளிக்கப்படுகிறது.
தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகமானோர் அங்கு தற்காலிகமாக குடியேறி 
வருகின்றனர்.
இந்நிலையில் இதன்மூலம் கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் மற்ற சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் அந்த திட்டத்தில் திருத்தம் செய்து குடிபெயர்வோரை தடுக்கும் முடிவை 
அரசு எடுத்துள்ளது.
இதைத்தவிர்த்து நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்கவும் கனடா அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கட்டுப்பாடு, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் சர்வதேச மாணவர்களுக்கும் பொருந்தும்  குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 26 ஆகஸ்ட், 2024

கொழும்பு துறைமுகத்தில் .சீனாவில் இருந்து வருகை தந்துள்ள இராணுவ கப்பல்கள்

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் மூன்று போர்க்கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
"HE FEI", "WUZHISHAN" மற்றும் "QILIANSHAN" ஆகிய மூன்று போர்க்கப்பல்களும் 26-08-2024இன்று காலை வந்துள்ளதாக கடற்படை
 தெரிவித்துள்ளது.
அந்தவகையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Destroyer ரக போர்க்கப்பலான "HE FEI" 144.50 மீற்றர் நீளம் கொண்டதுடன் 267 பணியாளர்களைக் கொண்டது.
Landing Platform Dock வகையின் "WUZHISHAN" போர்க்கப்பல் 210 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 872 பணியாளர்களைக் 
கொண்டுள்ளது.
Landing Platform Dock வகையின் "QILIANSHAN" போர்க்கப்பல் 210 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 334 பணியாளர்களைக் 
கொண்டுள்ளது.
ஒரு பயிற்சிக்குப் பிறகு, கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஆகஸ்ட் 29 அன்று தீவிலிருந்து புறப்பட உள்ளது.
குறிப்பிடத்தக்கது. என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் ஐ.நா பேரவை வெளியிட்ட அறிக்கை

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஆறு மாதம் முதல் அடுத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மாத்திரம் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட 3,000 குற்றச்சாட்டுக்களை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் தொடரும் துஷ்பிரயோகங்கள் குறித்த இந்த விவரங்கள் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையரின் சமீபத்தைய விரிவான அறிக்கையில் வெளியாகியுள்ளது.
"பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை மற்றும் மோசமாக நடத்தப்படுவது இலங்கையில் தொடர்ந்து
 இடம்பெறுகிறது " என செப்டெம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத் தொடருக்கான அறிக்கை தெரிவிக்கின்றது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் வோகர் டர்க் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “நாட்டில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அனுபவிப்பதில் தொலைநோக்கு
 பார்வையில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய
 சில கவலையான போக்குள் காணப்படுகின்றன,” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வடக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமக்கு அளித்த தகவல்களின் அடிப்படையில் இவை கண்டறியப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அந்த அறிக்கை கூறுகிறது.
”கடந்த ஜனவரி 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலப்பகுதியில் சித்திரவதை குறித்த 2,845 முறைப்பாடுகளும், இழிவாக நடத்தப்படுவது குறித்து 675 குற்றச்சாட்டுகளும் தமக்குக் கிடைத்ததாக 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியது ” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"ஜனவரி 2023 மற்றும் மார்ச் 2024க்கு இடையில், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பான 21 வழக்குகள், தடுப்புக் காவலிலிருந்த போது 26 பேர் உயிரிழந்த வழக்குகள் மற்றும் தன்னிச்சையான
 கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக 1,342 முறைப்பாடுகளும் தமக்கு கிடைத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
 தெரிவித்துள்ளது. அரச தரப்பிலிருந்து தடுப்புக் காவலில் 2023இல் 14 பேரும் 2024இல் மூவரும் உயிரிழந்தனர் எனவும், மேலும் தடுப்புக் காவல் மற்றும் சுட்டுக்கொல்லப்படுவது ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் 2747/2023 இலக்கமிடப்பட்டு பொலிசாரால் விடுக்கப்பட்ட அறிக்கையும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.”
”அண்மையில் பிரதானமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில், இலங்கை பாதுகாப்பு படையினரால் தமிழர்கள் கடத்தப்படுவது, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படுவது, மோசமாக நடத்தப்படுவது 
மற்றும் பாலியல் வன்செயல்களுக்கு ஆளாக்கப்படுவது ஆகிய அண்மைய குற்றச்சாட்டுகளை ஆராய்ந்தோம். இவை ஜனவரி 2024 முதல் கிடைத்தவை” என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின்
 உயர்ஸ்தானிகர் அலுவலகம் கூறுகிறது. அரசியல் எதிரிகள், நியாயத்திற்காகப் போராடுபவர்கள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில்
 விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரே பிரதான இலக்காக இருந்துள்ளனர் என்பதை 
பலதரப்பிலிருந்து உறுதியாகியுள்ளதைக் காட்டும் ‘தெளிவான ஒரு பாணி வெளியாகியுள்ளது’ என அந்த அறிக்கை கூறுகிறது.
”தமிழர்கள், பிரதானமாகக் காணாமல் போனோர், காணி/சுற்றுச்சூழல் உரிமைகள் அல்லது போரில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் 
முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு
 கொண்டவர்கள் என
 நம்பப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டனர் அல்லது
 புகைப்படம் எடுக்கப்பட்டனர், பின்னர் பொலிஸின் குற்றத் தடுப்பு பிரிவினர் அல்லது பயங்கரவாத விசாரணைப் பிரிவின் உத்தியோகத்தர்கள் என தங்களை வாய்மொழியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்களால் கைது
 செய்யப்பட்டார்கள்.”
அந்த வகையில், கண்கள் கட்டப்பட்டு அடையாளம் தெரியாத இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர்கள் மூன்று தொடக்கம் ஐந்து நாட்கள் வரை விசாரிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு படையினர் சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற, அல்லது
 இழிவான முறையில் நடத்தப்படுவதற்கு பல்வகையான உத்திகளைக் கையாண்டதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“விசாரணையின் போது அல்லது தடுத்து வைக்கப்பட்டபோதோ தாங்கள் பாலியல் துஷ்பிரயோகம், விதைப்பைகளை அழுத்துவது, பலவந்தமாக நிர்வாணமாக்குவது, மார்பகங்களைக் கடிப்பது 
போன்ற பாலியல் சித்திரவதைகளை அனுபவித்ததாக பலர் கூறினர். அதுமாத்திரமன்றி அப்படியான சித்திரவதை அனுபவிப்பதை நிறுத்துவதற்காக,
 தகவல்களைப் புனைந்து சொல்வது அல்லது ‘ஒப்புக்கொள்வது’, அல்லது அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாசிக்க இயலாத சிங்கள மொழியில் உள்ள ஆவணங்கள் அல்லது வெற்றுத்தாள்களில் கையொப்பமிடச் செய்வது ஆகியவற்றைச் செய்யும் நிலை ஏற்பட்டது 
எனவும் சிலர் கூறினர்.”
“அவ்வகையில் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் காரணமாகத் தவறிழைத்தவர்களின் பைகள் நிரம்பின. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடினர். போர் முடிந்த பின்னர்
 தொடர்ச்சியாக அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் ஆகியவையும் அதைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத சூழலும் தொடர்கின்றன.
என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”இறுதியாக குடும்ப உறுப்பினர் ஒருவர் இடைத்தரகர் மூலம் பாதுகாப்பு படையில் இருக்கும் யாராவது ஒருவருக்கு .லஞ்சம் கொடுத்த பிறகு அவர்கள் இறுதியாக விடுவிக்கப்பட்டனர் என செவ்வி காணப்பட்ட பெரும்பாலானவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் இலங்கையிலிருந்து 
வெளியேறினர்.”
எனினும், அரசாங்கமோ இந்த குற்றச்சாட்டுகளில் போதிய தகவல்கள் இல்லை என பதிலளித்ததாகவும், கடத்தல், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படுவது மற்றும் சித்திரவதை ஆகியவை குறித்த 
குற்றச்சாட்டுகள் குறித்து கவனத்திற்கொள்வதாகவும், விசாரணைகள் மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்படுவது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் கூறியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதேவேளை இலங்கை அரசு “தன்னிச்சையான கைதுகள், சட்டவிரோத கொலைகள், சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் இதர மனித உரிமை மீறல்கள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன, 
என்பதையும் மேலும் அவை தீவிரமாக விசாரிக்கப்படு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும், எவ்விதமான சந்தேகங்களுக்கும் இடமின்றி இராணுவம், புலனாய்வுத்துறை மற்றும் பொலிசாருக்கு வெளிப்படையாக
 அறிவுறுத்தி
 உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.குறிப்பிடத்தக்கது. என்பதாகும் 








 

சனி, 24 ஆகஸ்ட், 2024

நாட்டில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் பேசி எமது பிரச்சனைகளை தீர்க்க முடியும். முன்னாள் போராளிகள் தொடர்பான 5 கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவு ரணில் அவர்களுக்கே என புனர்வாழ்வு 
அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.  
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று (24.08) வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. 
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவித்த அவர், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து இருந்தோம். யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் முன்னாள் போராளிகள் கைவிடப்பட்ட 
நிலையில் உள்ளனர். 
தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் பதிவிக்காக சண்டை பிடிக்கிறார்களே தவிர முன்னாள் போராளிகள் தொடர்பில் பேசுவதில்லை.
 எமது முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்பவர்களும், வெளிநாட்டில் இருந்து எம்மோடு இணைந்து பயணிப்பவர்களும் எம்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்திக்க சொன்னார்கள். 
நாம் சந்தித்து ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க அவர்களுடன் பேசியிருந்தோம். இதன்போது 
எமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், நிச்சயமாக எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக 
தெரிவித்ததன் பிரகாரம் எமது கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவை பிரதமராக இருந்தவர்
. ஜனாதிபதியாக உள்ளார். 
சிறந்த ராஜதந்திரி. எமது போராட்ட வரலாறு தெரியும். தற்போது சாரைப் பாம்பு போன்று நாம் உள்ள நிலையில் நாம் தான் பேச வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுவது தான் பொருத்தமானது. அதனால் நாம் அவரை நம்புகிறோம். வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு 
பாதுகாப்பு வேண்டும். 
வீணாக போராளிகளை அழைத்து விசாரணைகள் என்ற ரீதியில் கைதுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு தங்களூடாக உதவித்திட்டங்கள்
 மற்றும் பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை 
மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட ஐந்து 
கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். 3000 பேரின் பெயர் விபரங்களும் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு முதல் கட்டமாக வேலைத் திட்டங்களை வழங்குவதாக தெரிவித்தார்.  
ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி அவரிடமே நாம் பேச்சுவாதர்த்தை செய்தோம் என பாலா அண்ணை சொனனவர். அந்த வளர்ப்பில் வந்தவர்கள் தான் நாங்கள். அவர் நரியோ, எலியோ, புலியோ, சிங்கமோ பிரச்சனை
 இல்லை. நாங்கள் அவர் மீத நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் புலி. 
அவருக்கு தான் எமது வலி தெரியும். அவருடன் தான் நாம் பேச முடியும். எனவே, தமிழ் மக்களும், முன்னாள் போராளிகளும் சிலின்டர் சின்னத்துக்கு மாத்திரம் புள்ளடியிட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களை 
வெற்றியடைய வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்கது என்பதாகும்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

நாட்டில் விநியோகத்தினை ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலியாவின் பெற்றோலிய நிறுவனம்

நாட்டில்அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனத்தின் கீழ் 2024, ஆகஸ்ட் 28 முதல் இலங்கையில் தங்கள் நடவடிக்கைகளை 
ஆரம்பிக்கவுள்ளது.
 இந்நிலையில், செயல்பாடுகளுக்கான எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே வந்துவிட்டதாகவும், இறக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம், 20 நிரப்பு நிலையங்கள் வழியாக எரிபொருள் விநியோகத்தை 
மேற்கொள்ளவுள்ளது.
 முன்னதாக, யுனைடெட் பெட்ரோலியம் லங்கா பிரைவேட். 
 இலங்கை சந்தையில் பெட்ரோலியப் பொருட்களை
 வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இலங்கை முதலீட்டுச் சபையுடன், 2024 ஜூன் 4 அன்று ஒப்பந்தம் ஒன்றை செய்துக்கொண்டது. 
 இதன்படி, இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 150 நிரப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு எரிபொருள் விநியோகத்துக்காக, யுனைடெட் பெட்ரோலியத்தை
 அனுமதித்துள்ளது.
 அத்துடன் மேலும் 50 புதிய நிலையங்களை, அமைக்கவும் குறித்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 22 ஆகஸ்ட், 2024

நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வது தொடர்பில் மோட்டார் திணைக்களம் புதிய அறிவிப்பு

நாட்டில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன திணைக்களம் தயாராகி வருவதாக
 வெளியான செய்தி தொடர்பிலான உண்மைகளை திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. 
அதன்படி, அவ்வாறான சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் மோட்டார் வாகன திணைக்களமோ 
அல்லது அரசாங்கமோ கொள்கை தீர்மானம் எடுக்கவில்லை என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விரசிங்க தெரிவித்துள்ளார். 
எனினும் போக்குவரத்து அமைச்சுடன் ஆலோசித்து, சாலை பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமத்திற்கு கருப்பு மதிப்பெண் வழங்கும் முறையை அமல்படுத்தும் பணி 
தொடங்கப்பட்டுள்ளது என்றார்.  
அதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அடிப்படை 
நடவடிக்கைகள் தற்போது உருவாக்கப்பட்டு 
வருவதாக இன்று (22.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.  
புதிய முறையின் மூலம் ஒரு ஓட்டுநர் போக்குவரத்து விதிமீறலைச் செய்தவுடன், போக்குவரத்துக் காவலர் வழங்கும் டிக்கெட்டுக்கு
 ஏற்ப அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்த டிஜிட்டல் சிஸ்டம் தயார் செய்யப்பட்டு, அந்தக் குற்றத்திற்கான அபராதப் புள்ளிகள் ஓட்டுநர் உரிமத்தில் சேர்க்கப்படும். 
பிளாக் மார்க் முறை 24 புள்ளிகளை எட்டியதும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறுகிறார். இவ்வாறு ரத்து 
செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை திரும்பப் பெற, ஒரு
 ஓட்டுநர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும். 
இலங்கையில் நாளொன்றுக்கு 7 பேர் நெடுஞ்சாலைகளில் உயிரிழப்பதாலும், வீதி விபத்துக்களினால் முற்றாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், நெடுஞ்சாலைகளில் ஒழுக்கத்தை ஏற்படுத்த 
இந்த முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை 
எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 21 ஆகஸ்ட், 2024

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மலைப்பாம்புகள் மூவர் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில்  கொண்டு வந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளை வத்தளை பொலிஸார் .21-08-2024.இன்று  மீட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது இலங்கையின் முடிச்சு முதலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர். 
வத்தளை பிரதேசத்தில் உள்ள பெட்டிக்கடை ஒன்றின் மாடியில் விலங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இருவரையும் வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
இந்த விலங்குகளை பயணப் பொதிகளில் மறைத்து 
வைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  
முடிச்சு போடப்பட்ட முதலை இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் அமைந்துள்ள ஏரியில் இருந்து பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இந்த விலங்கு ரூ.300,000 விலையில் விற்பனைக்கு தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்த விலங்குகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி அவை பற்றிய அறிக்கையைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை 
எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

ஜேர்மனியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த ஒருவர் கைது

வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி 24 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் கந்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 
119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  
சந்தேக நபர் பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜேர்மனியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணி போன்று நடித்து 24 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
நிதி மோசடி தொடர்பில் கெசல்வத்தை பொலிஸில் 03 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு வெளியான சுற்றறிக்கை

இலங்கையில் ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும்  இடைக்கால கொடுப்பனவொன்றை வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.  
இதன்படி செப்டம்பர் மாத கொடுப்பனவை ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன் வழங்கவுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.  
தேர்தல் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகிய பிரிவுகளுக்கு குறித்த சுற்றறிக்கையின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 17 ஆகஸ்ட், 2024

நாட்டில் கடவுச்சீட்டு விநியோக எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நாட்டில் கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் வரும் 30 பேருக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை
 எடுக்கப்பட்டுள்ளது.
விமான அனுமதிக்கான இ-பாஸ்போர்ட் முறையை உருவாக்க முடிவு செய்ததால், இந்த ஆண்டுக்கு தேவையான புத்தகங்கள் 
வாங்கப்படவில்லை.
ஆனால், ஜூலையில் வரவிருந்த இ-பாஸ்போர்ட் புத்தகங்கள் அக்டோபர் வரை தாமதமானதால், குடிவரவுத் துறைக்குச் சொந்தமான பாஸ்போர்ட் புத்தகங்களின் அளவு குறையத் தொடங்கியது. இதன் 
காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதை 
முடிந்தவரை 
மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமும் சுமார் 1,300 பாஸ்போர்ட்டுகள் அச்சிடப்பட்டாலும், தற்போது அது 250 முதல் 300 வரை குறைந்துள்ளது.
அவசர தேவை இல்லாவிட்டால் ஒக்டோபர் மாதம் வரை கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்த சூழ்நிலை காரணமாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

யாழில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறவுகளிடம் விசாரணை இடம்பெற்றது

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று வெள்ளிக்கிழமை (16) விசாரணைகள் 
இடம்பெற்றது. 
 உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களிடையே விசாரணைகள் இடம்பெற்றது. 
 இவ்விசாரணைகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய 
அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் 
முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 நாளை 17 ஆம் திகதி பருத்திதுறை, மருதங்கேணி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், நாளை மறுதினம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், சங்கானை, 
சண்டிலிப்பாய், காரைநகர் , நல்லூர், சாவகச்சேரி, 
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தோருக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும் விசாணைகள் இடம்பெறவுள்ளன.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 15 ஆகஸ்ட், 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல்

இலங்கை 2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
01. திலித் சுசந்த ஜயவீர 
02. சரத் மனமேந்திர 
03. அபூபக்கர் முகம்மது இன்பாஸ் 
04. ஏ. எஸ். பி. லியனகே 
05. பானி விஜேசிறிவர்தன 
06. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க 
07. அஜந்தா டி சொய்சா 
08. பத்தரமுல்லை சிரலதன தேரர் 
09. சரத் பொன்சேகா 
10. நுவன் சஞ்சீவ போபகே 
11. ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத் 
12. ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க 
13. கே.கே. பியதாச 
14. மையில்வாகனம் திலகராஜா 
15. சிறிபால அமரசிங்க 
16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 
17. சரத் கீர்த்திரத்ன 
18. கே. ஆனந்த குலரத்ன 
19. நாமல் ராஜபக்ஷ 
20. அக்மீமன தயாரதன தேரர் 
21. கே.ஆர். கிஷன் 
22. பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த 
23. விஜயதாச ராஜபக்ச 
24. அனுர சிட்னி ஜயரத்ன 
25. சிறிதுங்க ஜயசூரிய 
26. மஹிந்த தேவகே 
27. முகமது இல்லயாஸ் 
28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ 
29. ஆண்டனி விக்டர் பெரேரா 
30. கீர்த்தி விக்கிரமரத்ன 
31. சஜித் பிரேமதாச 
32. ரணில் விக்கிரமசிங்க 
33. மரக்கலமான பிரேமசிறி 
34. லலித் டி சிலவா 
35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா
36. டி.எம். பண்டாரநாயக்கா 
37. அனுரகுமார திஸாநாயக்க 
38. அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா 
39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான.
என்பதாகும்
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 14 ஆகஸ்ட், 2024

பாடசாலை பரீட்சை வினாத்தாளில் இடம் பிடித்த வைத்தியர் அர்ச்சுனா

இலங்கையில் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட வலய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பரீட்சையில் டாக்டர் அருச்சுனா தொடர்பில் வந்த வினாதாள் சமூகவலைத்தளங்களில்
 வெளியாகியுள்ளது. 
பாடசாலைகளில் இடம்பெற்ற இரண்டாம் தவணை பரீட்சை இடம்பெற்ற நிலையில் குடியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றிலேயே இவ்வாறு மருத்துவர் அருச்சுனா பெயரில் கேள்வி 
இருந்துள்ளது.
அதாவது மாணவர்களிடம் கொடுக்கப்பட்ட அந்த பரீட்சை தாளில், டாக்டர் அர்ச்சுனா ஒளிப்பு மறைப்பு இன்றி மனதில் பட்டதை கூறினார். 
இங்கு ஒளிப்பு மறைப்பு என்ற இணைமொழி தரும் பொருள் என்ன என்பதே அந்த வினா ஆகும். 
 குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் இதன் உண்மைதன்மை உறுதிப்படுத்தமுடியாமல் உள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் கடிதம் மன்னார் விவகாரம் யார் பணம் பெற்றது மோதல் ஆரம்பம்

மன்னார் விவகாரம் சிந்துஜாவுக்கு ஆன போராட்டம் திட்டமிட்ட ரீதியில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு அண்ணன் செந்தூரன்னால் குலைக்கப்படுகிறது.
அன்புள்ள செந்தூரன் அண்ணா. நீங்கள் எதுக்கு மன்னாருக்கு 
வந்து நிக்கிறீங்க என்று பொதுமக்களுக்கு விளங்காத வரைக்கும் நீங்கள்
 அங்க நிக்கலாம்.
நீங்களா வீட்ட போகாட்டி.. இல்லாட்டி அவங்களே பார்சல் பண்ணி இந்தியாவில விட்டுருவாங்க.
கெதியாக கிளம்பவும்.. உங்களுக்கு மனநோயோ என்று சொல்லி இப்படியெல்லாம் என்ன அடிச்சு கேக்குறாங்க.
மன்னார் எனது வீடு அதை நான் பார்த்துக் கொள்வேன்..
இப்படிக்கு அன்பு தம்பி அர்ச்சுனா.எனகுறிப்பிட்டுள்ளார் 
என்பதாகும்





 

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

மருத்துவர் அர்ச்சுனாவின் மன்னார் சம்பவமும் ஏழுபேர் கொண்ட நண்பர்கள் அணி

மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா நண்பர்கள் அணி' (நண்பர்கள் அணி) சென்ற ஓகஸ்ற் மூன்று, ஐந்து மற்றும் ஏழாம் திகதிகளில் அர்ச்சுனா சார்பில் மன்னார் நீதிமன்றில் முன்னிலையான சட்டவாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது.
அவ்வகையில், பின்வரும் சட்டவாளர்கள் (Attorney at Law) மிகுந்த நன்றியுடன் பெயரிடப்படவேண்டியவர்கள்:
அன்ரன் புனிதநாயகம்
றெஜி றோய்ஸ் குரூஸ்
ஜெகநாதன் தற்பரன்
தர்மராஜா வினோதன்
கணபதிப்பிள்ளை கணேஸ்வரன்
அல்வின் கமல்ராஜ்
புராதனி சிவலிங்கம்
சுதர்சனா ஜெயசீலன்
செல்வராஜ் டினேசன்
சுலோக்சினி நாகராஜா
அன்ரனி மடுத்தீன்
அப்துல்ஹுதா பாத்திமா சப்னா
டிலக்சினி றொபின்
போல் ரிறோன்
கௌசல்யா நரேந்திரன்
இவர்களுக்கு ஆதரவாகத் தோள்கொடுத்த மற்றைய 
சட்டவாளர்களுக்கும் நன்றி.
அர்ச்சுனாவின் மன்னார் சட்டத் தேவைகள் குறித்துக் கரிசனையுடன் முயற்சிகளை எடுத்த அஜித், சுசி, கிரி, ஜெராட், இளவேனில், செலஸ்ரின் ஆகியோருக்கு நன்றி. சாவகச்சேரியிலிருந்து
 சட்ட ஆதரவை வழங்க முயற்சித்த அர்ச்சுனா அபிமானிகளையும் நண்பர்கள் அணி அறியும். அவர்களுக்கும் நன்றி... எனப் பதிவிடப்பட்டுள்ளது. 
மன்னார் சம்பவம் 
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மன்னார் மருத்துவமனைக்கு அர்ச்சுனா போன நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சனிக்கிழமை 
காலையில் அவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டதாகத் தகவல் வருகிறது. அஃது ஒரு பொதுவான உரையாடலாக இருக்கும் என்ற நம்பிக்கை தான் எல்லோரிடமும்!
ஆனாலும் அர்ச்சுனா கைது செய்யப்படுவதான செய்திவருகிறது. அவசர அவசரமாக அவருக்கு ஆதரவு தரும் நடவடிக்கைகள் நண்பர்கள் அணியினால் முடுக்கி விடப்படுகின்றன. சாவகச்சேரி 
அபிமானிகள் சிலரும் இயங்குகிறார்கள். சட்டவாளர்கள் மடுத்தீன், சுதர்சனா மற்றும் டினேசன் ஆகியோர் நீதிமன்றுக்கும் நீதிபதியின் வதிவிடத்துக்கும் விரைகிறார்கள். சனியன்றே அர்ச்சுனாவை வெளியே 
வைத்திருக்கும் முன்நகர்வு முயற்சி செய்யப்பட்டாலும், அவரை விளக்கமறியலில் வைக்கும் முடிவு 
தெரியவருகிறது.
சனி முன்னிரவில் நண்பர்கள் அணி மன்னார் சட்டவாளர் மூலமாக வவுனியாவில் இருக்கும் சட்டவாளர் புனிதநாயகத்தைத் தொடர்புகொள்கிறது. ஒரு குடும்ப நிகழ்வில் இருந்த போதிலும் அந்த 
அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் திங்களன்று 
பிணை முன்நகர்வுக்கான முயற்சியை எடுக்கலாம் என்று
 தீர்மானிக்கிறார்.
திங்கள் பகல் இந்த முன்நகர்வு மன்னார் நீதிமன்றத்தாற் கருத்தில் கொள்ளப்படுகிறபோது அர்ச்சுனா சார்பில் ஆறு 
சட்டவாளர்கள் (புனிதநாயகம், மடுத்தீன், சுதர்சனா, டினேசன், சுலோக்சினி, புராதனி) முன்வருகிறார்கள். ஆனால், ஆச்சரியப்படும் வகையில் பெருந்தொகையான சட்டவாளர்கள் பிணை
 விண்ணப்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அர்ச்சுனா மேலும் இரண்டு நாட்களுக்குக் காத்திருக்கவேண்டிய 
நிலை வருகிறது.
புதன் கிழமையன்று சட்டவாளர் புனிதநாயகம் தலைமையில் அர்ச்சுனா சார்பிலான பதினைந்து சட்டவாளர்கள் நீதிமன்றுக்கு 
வருகிறார்கள். மன்னார் மட்டுமன்றி, முல்லைத்தீவு, 
வவுனியா, யாழ்ப்பாணம் என்று வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து அவர்கள் வருகிறார்கள். மற்றைய தரப்பில் ஆறு சட்டவாளர்கள் பிணைக்கு எதிராக வாதாடுகிறார்கள். மருத்துவமனைக்குள் வந்து மரணித்த
 ஓர் இளம் தாய்க்கு வன்முறை இல்லாத வகையில் நீதி கேட்டமைக்காக ஒருவருக்குப் பிணை மறுப்பார்களா என்று வழக்கைப் பார்க்க வந்த பொதுமக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
புதனன்று பிற்பகலில் இறுக்கமான முன்நிபந்தனைகளோடு அர்ச்சுனாவுக்குப் பிணை தரப்படுகிறது. வெளியே வரும் அர்ச்சுனாவுக்காக 
நீதிமன்றுக்கு வெளியே மக்கள் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். ஆனாலும் நீதிமன்றின் அமைதியைக் காக்கும் நோக்கிலும் தேவையற்ற 
குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கிலும் சட்டவாளர்கள் அர்ச்சுனாவைப் பின்பக்கத்தால் நீதிமன்ற வளவுக்கு வெளியே
 கொண்டுபோகிறார்கள். இருந்தாலும், அர்ச்சுனா போய்விட்டார் என்பதை அறிந்து ஏமாற்றம் கொண்ட மக்களின் உணர்வை அறிந்து அர்ச்சுனா மன்னார் விளையாட்டரங்குக்கு அழைத்துவரப்படுகிறார்.
தங்களுக்காகக் குரல் கொடுத்த அர்ச்சுனாவுக்கு நன்றி கூற அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அர்ச்சுனாவின் மனதில் மன்னார் மக்கள் ஆழமாகப் பதிந்து போகிறார்கள்!
குறிப்பு: 'மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா நண்பர்கள் அணி' என்பது உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து அவருடன் தனிப்பட்ட தொடர்பிலுள்ள ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவாகும்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு பணம் வசூலிக்கும் கும்பல்


இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட குழுவினர் வர்த்தகர்களிடம் சென்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு பணம் வசூலிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கிறது.
இவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் இலங்கை பொலிஸில் முறைப்பாடு 
செய்துள்ளது.
இவ்வாறு அறவிடப்படும் தொகைக்கு தாம் பொறுப்பல்ல என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பில்
 தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து வகையான வரிகள் தொடர்பாகவும், வரி வசூல் நிலுவைத் தொகைகள் முறையாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ச
ட்டப்பூர்வமாக மட்டுமே செய்யப்படும் என அனைத்து வரி செலுத்துவோருக்கும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், வரி செலுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அருகில் உள்ள பிராந்திய அலுவலகம் அல்லது உள்நாட்டு இறைவரி
 திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு வந்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் மேலும் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.என்பது  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 10 ஆகஸ்ட், 2024

நாட்டில் தேர்தலில் என்னதான் நடக்கும் நொந்து புண்ணாகப்போவது மக்கள் வாழ்வு மட்டுமே

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளன.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக ஒருவர் களமிறக்கப்படும் முதலாவது
 சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த நிலையில், மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜூம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில், அவர்கள் மலையக தமிழ் சமூகத்தை கவனத்தில் கொள்ளாததை அடுத்தே, தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக மயில்வாகனம் திலகராஜ், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் தமிழ் வேட்பாளர்கள் தனித்து ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும், கணிசமான வாக்குகளை 
பெற முடியவில்லை. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களம் கண்டுள்ள 
தமிழ் வேட்பாளர்கள் முன்னுள்ள வாய்ப்புகள் என்ன? 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து
 தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் வகையில் கடந்த காலங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை
 நடத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதித் தேர்தலின் தமிழ் பொது வேட்பாளராக பா.அரிநேத்திரன் அறிவிக்கப்பட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பா.அரியநேத்திரன், 2004ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
அதனைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ஈட்டி, நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார். பா.அரியநேத்திரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார் என்று 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் 
தெரிவிக்கின்றார்.
தேர்தல் ஆணையகம் வேட்பாளர் நியமனங்கள் செய்யப்பட்டதன் பிறகு அதற்கான சின்னத்தை ஒதுக்கும். "அதுவரை என்ன சின்னம் என்பது எங்களுக்கு தெரியாது" என சுரேஷ் பிரேமசந்திரன்
 தெரிவிக்கின்றார்.
''தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வுகளை கொண்டு வருவதற்கான ஒரு நகர்வை ஏற்படுத்தும் முறையில் அந்த வெற்றியை 
தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என
 கருதுகின்றோம்.
தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒன்றை சர்வதேச வெளிக்கு கொண்டு செல்லும் அளவில் இது மிகப்பெரிய உதவிகளை செய்யும்." என அவர் 
குறிப்பிடுகின்றார்.
தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்காகவே வேட்பாளராக களமிறங்குகின்றேனே தவிர, ஜனாதிபதியாவதற்கு அல்ல என்று தமிழ் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரன் 
தெரிவிக்கின்றார்.
''எதிர் வருகின்ற 9வது ஜனாதிபதித் தேர்தலிலே வடகிழக்கில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்கான ஒரு வேட்பாளராக என்னை நிறுத்தியுள்ளனர். நான் வெறும் அடையாளம். 
அதாவது தமிழ்த் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேனே தவிர, ஸ்ரீலங்கா சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்கு
 அல்ல" என தெரிவித்தார். இனப் படுகொலை 
நிகழ்ந்ததிலிருந்து தமிழ் மக்கள் உரிமையற்ற இனமாக இருப்பதாக கூறிய அவர், தங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திற்கும், ஸ்ரீலங்காவிற்கும் வலியுறுத்துகின்ற ஒரு அடையாளத்திற்காக மாத்திரமே தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான கட்சியாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான இதுவரை தமது இறுதித் தீர்மானத்தை 
அறிவிக்கவில்லை.
இந்தநிலையில், பொது வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை 
வழங்கியுள்ளனர். வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியானது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கியுள்ளது.
மறுபுறம், தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பில், மலையக தமிழர்களை கருத்திற் கொள்ளாததாலேயே, ஜனாதிபதித் தேர்தலில் தாம் களமிறங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் 
தெரிவிக்கின்றார்.
இலங்கையின் 70 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இறுதி 30 வருட காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்னை பேசப்பட்ட அளவிற்கு, மலையக தமிழர் பிரச்னை பேசப்படவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார். "தமிழ் பொது வேட்பாளர் என்ற கோஷம், மலையக தமிழரை
 உள்ளடக்கவில்லை என்பது அந்த பொது வேட்பாளர் கருத்துகளில் இருந்தே
 வெளிப்பட்டது. தமிழ் பொது வேட்பாளர் என பெயரை வைத்துக்கொள்கின்றார்களே தவிர, மலையக மக்கள் தொடர்பில் எதுவும் பேசவில்லை" என திலகராஜ்
 தெரிவித்தார்.
கொள்கை வகுப்பாளர்களும் இந்த மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த மக்களின் பிரச்னைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியே தான் போட்டியிடுவதாக கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் பலவும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், தென் பகுதியிலுள்ள தமிழ் கட்சிகள், தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணப்பாட்டிற்கு ஆதரவை 
வழங்கவில்லை.
மலையகம் உள்ளிட்ட நாட்டின் தென் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்க
 மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி, மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு 
பொருத்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழிடம் கூறினார்.
இந்த காலத்திற்கு பொருத்தமற்ற நகர்வாவே, தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தான் பார்ப்பதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் 
தெரிவிக்கின்றார். தமிழர் தரப்பு அரசியலில் பேசும் தரப்பாக இருக்க வேண்டும். 
ஆனால் துரதிஷ்டவசமாக 30 வருட கால யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர், 2009ம் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் முடிவடைந்தும். வடக்கு, கிழக்கு, மலையகத்தை மையப்படுத்தி
, தமிழர்கள் ஒருமித்த திசையிலே பேரம் பேசும் சக்தியை இழந்திருக்கின்றார்கள் என்ற நிலை கவலைக்குரிய ஒரு விடயம்" என்கிறார் உமாச்சந்திரா பிரகாஷ்.
தமிழர்களின் இருப்பு இலங்கையில் மிக முக்கியமான ஒரு விடயம் என்ற வகையில் காலத்தில் பொருத்தமற்ற ஒரு அரசியல் நகர்வாக பொது வேட்பாளர் நகர்வை பார்ப்பதாக அவர் கூறுகிறார். "இது,
 ஒட்டு மொத்த தமிழ் இனத்தினுடைய இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. 
தமிழர் தரப்பு தற்போது மிக புத்திசாலித்தனமாக சிந்தித்து, அரசியலில் எந்த பக்கமாக இருந்தாலும், வெற்றி கிடைக்கும் பக்கம் பேரம் பேசும் சக்தியாக இருந்து தங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். உரிமையுடன் கூடிய இலக்கத்தை கொள்ள வேண்டும்." என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ்
 தெரிவிக்கின்றார்.
அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்களிடம், தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு கிடையாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.
தமிழர்களின் பலத்தை காண்பிப்பதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவர் களமிறங்குவது இந்த தருணத்தில் பொருத்தமற்றது என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல்
 தெரிவிக்கின்றார்.
''இலங்கை தமிழர்கள் குறிப்பாக நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் விடயங்களில் தீர்க்கமான கட்டங்களில் தங்களின் வாக்குகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்த நிலையில், இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் வடக்கு, கிழக்கு, 
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு 
களமிறங்கியிருந்தாலும், அவர் ஜனாதிபதியாவதற்கு எந்தளவு வாய்ப்புக்கள் இருக்கின்றது 
என்று கேட்டால், அதற்கு மிக தெளிவாக அவரால் ஜனாதிபதியாக
 முடியாது என திட்டவட்டமாக கூறிக்கொள்ள முடியும்" என்றார் ரசூல்.
தமிழ் மக்களின் தனித்துவத்தை அல்லது தமிழ் மக்களின் பலத்தை நிருபிப்பதற்கான தருணம் இதுவென எண்ணி அவர் களமிறங்கியிருந்தால், நிச்சயமாக இது அதற்கான தருணம் கிடையாது
 எனவும் அவர் கூறுகிறார். "காரணம், தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். 
அது நாடாளுமன்றத் தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல்களாக இருக்கலாம். அந்த இடங்களில் தமிழர்களின் பலத்தை 
காட்ட வேண்டும். அதனூடாக உரிமைகளை
 பெற்றுக்கொள்வதற்கான
 வலுவை பெற முடியும். ஜனாதிபதித் தேர்தலில் அந்த பலத்தை காண்பிப்பது, அதற்கான தருணம் கிடையாது என நினைக்கின்றேன்" என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா
 மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக வடக்கு மாகாணம் அமைந்துள்ளது. தேர்தல் காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி 
ஆகிய மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மாவட்டம் எனவும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வன்னி மாவட்டம் எனவும் கருதப்பட்டு வாக்கு 
பதிவு இடம்பெறும்.
இந்த நிலையில், வட மாகாணத்தில் மாத்திரம் 8,99,268 வாக்குகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணத்தை பொருத்தவரை திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல (அம்பாறை) ஆகிய மூன்று மாவட்டங்கள் 
உள்ளடங்குகின்றன.
இந்த மூன்று மாவட்டங்களிலும் 13,21,043 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை தவிர, முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர்.
 குறிப்பிட்ட சில பகுதிகளில் சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர். தென் பகுதியை பொருத்தவரை பெரும்பான்மை சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமையினால் தமிழர்கள் வாக்கு 
எண்ணிக்கையை சரியாக கணிப்பிட முடியவில்லை.
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

தினசரி யாழ் பலாலி சென்னை இடையிலான விமான சேவை

யாழ் பலாலி சென்னை இடையிலான தினசரி விமான சேவையை இன்டிகோ (INDIGO) விமானத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
 தினசரி பிற்பகல் 3.55 மணிக்கு யாழ். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 5.10 PM இற்கு சென்னை சென்றடையும்.
 சென்னை விமான நிலையத்தில் பிற்பகல் 1.55 இற்கு புறப்பட்டு , 3.10 மணியளவில் யாழ். வந்தடையும். பயணியொருவர் 30Kg மற்றும் 7Kg Hand luggage யுமாக மொத்தம் 37Kg கொண்டு செல்ல முடியும்.
 எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி தொடக்கம் பயணத்தை மேற்கொள்ள முடியும் .குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.