வெள்ளி, 16 ஜனவரி, 2026

சிறப்பாக யாழ். போதனாவில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வு

 யாழ்.  போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் .15-01-2026.அறைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.
வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற
 பொங்கல் நிகழ்வில் , வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள் ,
 வைத்தியர்கள் தாதிய உத்தியோகஸ்தர்கள் , கணக்காளர்கள், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகஸ்தர்கள் , வைத்திய சாலை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



யாழ் வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா இடம்பெற்றது

யாழ் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் 15.01.26.வியாழக்கிழமை .அன்று  இடம்பெற்றது.
இதில் முதலாம் இடத்தை யோ. பிரகாஷின் அச்சுலேட்டர் பட்டம் பெற்றது. இரண்டாம் இடத்தை லோ.கோபிசாந்தின் விண்ணில் சிதறிய ரத்தினங்கள் பட்டமும், மூன்றாம் இடத்தை யோ.பிரகாஷின் சாகசம் காட்டும் விமானம் பட்டமும் பெற்றது.
இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர்  எம்.கே சிவாஜிலிங்கம்,
 யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதிபராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

இலங்கையில் வரி செலுத்த தயாராகும் 12 மில்லியன் மக்கள்

இலங்கையில்  18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் TIN இலக்கத்தை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஏறக்குறைய 12 மில்லியன் மக்களுக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) ஆணையர் நந்தன குமார இது தொடர்பில் அறிவித்துள்ளார். 
இதன்படி டிசம்பர் 31, 2023 அன்று 18 வயதை எட்டியவர்களுக்கும், ஜனவரி 1, 2024 க்குப் பிறகு 18 வயதை எட்டும் நபர்களும் TIN இலக்கம் பெறுவது கட்டாயம் எனக் குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை சுமார் 17 மில்லியன் மக்கள் இந்த வரி இலக்கங்களை பெறுவதற்காக பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 15 ஜனவரி, 2026

இன்று யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா.15-01-2026. இன்று 
கோலாகலமாக நடைபெறவுள்ளது.

 இன்று பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

 இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

 நாட்டில் நிலவும் போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு அறுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நாடே ஒன்றாக”தேசிய செயற்திட்டத்தின் வடக்கு மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனவரி 16ஆம் தேதி பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

 ஜனவரி 16 அன்று நடைபெறவுள்ள இந்த விசேட திட்டத்தின் மூலம், போதைப்பொருள் பரவலால் ஏற்படும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து வடக்கு மாகாண மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. 

அத்துடன், இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நேர்மறையான பங்களிப்பை பெற்றுக்கொள்வதும், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



உங்கள் உடல் எடையை குறைக்க எளிய வழிமுறை

உங்கள் உடல் எடைக் குறைக்க உதவும் யோகா பயிற்சி தொடர்பில் இந்த பதிவில் அறிந்துக் கொள்ள முடியும். சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 ஆசனங்களைக் கொண்டது. வேலை காரணமாக
 காலையில் யோகா செய்ய நேரம் இல்லாதவர்கள் இந்த ஒரு ஆசனத்தையாவது தினமும் செய்யுங்கள்.
 இந்த சூர்ய நமஸ்காரத்தைச் செய்வதால் நுரையீரலின் செயல்பாடுகள் மேம்படுகிறது. டயபெட்டீஸ் வருதற்கான 
காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுபெறச் செய்கிறது. ஹைபர் டென்ஷன் ஆகாமல் இருக்க உதவுகிறது. பெப்டிக் அல்சர் வருவதைத் தடுக்கிறது. 
சியாடிகா எனும் கீழ் முதுகு வலி, மூட்டு வலி ஆகியவற்றை தடுக்கிறது. மாதவிடாய் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இதனைச் செய்ய 
வேண்டாம்.மூச்சுப் பயிற்சி:
 இந்த மூச்சுப் பயிற்சியை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். தினமும் 10 நிமிடங்களாவது இதில் குறிப்பிட்டதுபோல மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் மனது ஒருநிலை அடையும். தேவை இல்லாத தவறான எண்ணங்கள் தோன்றுவதைக் குறைக்கும். மூளை 
சுறுசுறுப்படைவதோடு, நீங்கள் செய்யும் வேலையில் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துகிறது.
 மேலும் கோவம், பயம், பதட்டம் அனைத்தையும் குறைத்து மனதை அமைதிப்படுத்த நிச்சயம் இந்த மூச்சுப்பயிற்சி உதவும். மாடிப்படிகட்டுகளில் ஏறினால் மூச்சு வாங்குகிறதா, கண்டிப்பாக இதனை முயற்சி செய்து பாருங்கள். மூச்சுவாங்குவது கண்டிப்பாகக் குறையும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

இன்று முதல் இலங்கையின் வானிலையில் மாற்றம்

 

இலங்கையில்  காணப்படும் மழையுடனான வானிலை.15-01-2026. இன்று முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது. 
கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ
 பெய்யக் கூடிய 
சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். 
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான 
கரையோரத்திற்கு
 அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 
 கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட 
கடற்பரப்புகளும் 
அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




புதன், 14 ஜனவரி, 2026

நாட்டில் கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்களின் வேலைநிறுத்தம்; நோயாளர்கள் பாதிப்பு

 

 நாட்டில்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீதான நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை
 முன்னிறுத்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம்.14-01-2026. இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.​
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி மற்றும் நிர்வாக ரீதியிலான மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
நேற்று (13) ஆரம்பமான இந்தப் போராட்டமானது இன்று மாகாணம் தழுவிய ரீதியில் வலுப்பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா தள வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் நேற்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதன் காரணமாக இன்று காலை வைத்தியசாலைக்கு வருகை தந்த வெளிநோயாளர் பிரிவு (OPD) நோயாளர்கள் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதைக் 
காண முடிந்தது.​
இருந்தபோதிலும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய வைத்தியப் பிரிவுகள் வழமை போன்று இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. தூர இடங்களிலிருந்து வைத்திய சேவைகளுக்காக மற்றும் கிளினிக்களுக்காகவும் வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 
குறித்த வைத்தியசாலையில் அவசர வைத்திய பணிகள் மாத்திரம் இடம் பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சனி தெரிவித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




Blogger இயக்குவது.