புதன், 18 நவம்பர், 2026

யாழ் நீர்வேலி டெங்கு சோதனையில் சிக்கிய பதின் ஆறு பேருக்கு நீதிமன்ற உத்தரவு

யாழ்  நீர்வேலிப் பகுதியில் டெங்கு நுளம்பு பரவலுக்கு ஏதுவாகக் குடம்பிகள் இனங்காணப்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வேலைத் தளங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்
 குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேருக்குத் தலா ரூபா பத்தாயிரம் வீதம் தண்டம் விதிக்கப்பட்டதோடு, தண்டத்தைச் செலுத்தத் தவறின் ஒரு மாதகால சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். உதயபாலா தலைமையில், பொது சுகாதார பரிசோதகர்கள் இலங்கை செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலீசார் இணைந்து நீர்வேலி பகுதியில் இம் மாதம் 14 ம் திகதி டெங்கு தரிசிப்பை மேற்கொண்டனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்று திருகோணமலையிலிருந்து 650 கிலோமீற்றர் தூரத்தில் அக்வான் புயல் மையம்

தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள "அக்வான்" (Akvan) சூறாவளியானது, இன்று (18) அதிகாலை 2.30 அயளவில் வட அகலாங்கு 12.6° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.6° இற்கு அருகில், திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்தத் தொகுதியானது மேலும் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் “வலுவான
 சூறாவளியாக” மேலும் தீவிரமடையக்கூடிய அதிக 
சாத்தியக்கூறுகள் உள்ளது.
அதனைத் தொடர்ந்து, இத்தொகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (19) பி.ப 05.30 அளவில் ‘’கடுமையான புயலாக” மேலும் தீவிரமடையும் என்பதுடன், நாளை மறுதினம் (20)கடுமையான புயலாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரை ஊடாக இந்தியாவுக்குள் 
நுழையக்கூடும்.
எனவே, வடக்கு அகலாங்கு 06 முதல் 19 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையிலும் உள்ள கடல் பகுதிகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில்
 வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல்
 பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இக்கடல் பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால எதிர்வுகூறல்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழைோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய கடல் பகுதிகளில் பிரதானமாக மழை வீழ்ச்சியற்ற காலநிலை நிலவும்.
நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று மேற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 - 40 கி.மீ வரை இருக்கும்.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது​ இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 கி.மீ வரை அதிகரிக்கலாம்.
நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 கி.மீ வரை 
அதிகரிக்கக்கூடும்.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் இடைக்கிடையே சற்று கொந்தளிப்பாகக் 
காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் 
இக்கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் (மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ வேகத்தில்), அப்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
 பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது  

 
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 17 நவம்பர், 2026

நாட்டில் தரம் ஆறுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிப்பு

நாட்டில் 2026ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
.இதற்கமைய, குறித்த பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைக் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.moe.gov.lk ஊடாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், மாணவர்களுக்குக் கிடைத்துள்ள பாடசாலை 
எது என்பதை https://g6application.moe.gov.lk எனும் வலைத்தளம் ஊடாகப் பரிசோதித்துப் பார்க்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது  

 
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



யாழ் செம்மணியில் ராஜ் சோமதேவவின் உருவபொம்மையை எரித்து போராட்டம்

யாழ்  செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு
 எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், அரியாலை தபால்கட்டைச் சந்திக்கு அருகில் இன்று காலை ஆரம்பமான போராட்டம், அங்கிருந்து பேரணியாகச் செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள சிந்துபாத்தி மயானம் வரை 
சென்றடைந்தது. அங்கு போராட்டக்காரர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எமக்குத் தேவையானது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் அறிக்கை மட்டுமல்ல. அந்த எலும்புக்கூடுகளுக்குப் பின்னால் புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் அடையாளங்களையும், அவர்களின் மரணத்திற்கான காரணங்களையும், அவர்களுக்கு என்ன 
நடந்தது என்பதையும் வெளிப்படுத்தும் நேர்மையான விசாரணையாகும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வாசிக்கப்பட்ட அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,
மனிதப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ, அனுஷா வன்னிநாயக்கே ஆகியோரால் நீதிமன்றத்துக்கு 
சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்த அறிக்கையை இறுதியானதும் முழுமையானதுமான தடயவியல் முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் 
தெளிவுபடுத்துகின்றோம்.
செம்மணி என்பது வெறுமனே சில மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட ஓர் இடமல்ல. அது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் நீண்டகாலமாகத் தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், படுகொலைகள், அரச வன்முறைகள், நீதிமறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புபட்ட மிக முக்கியமான
 நீதிக்கான களமாகும்.
இங்கே நடந்தது தமிழினவழிப்புத்தான் என்பதை நிரூபிக்கும் சாட்சியமாகும். தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா, கொல்லப்பட்டார்களா, எங்கே புதைக்கப்பட்டார்கள் என்ற கேள்விகளுடன் பல 
தசாப்தங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் தாய்மார்களினதும் குடும்பங்களினதும் உணர்வுகளையும் நீதிக்கான எதிர்பார்ப்புகளையும் கருத்திற்கொள்ளாமல் இவ்வாறான ஒரு 
முக்கியமான 
விசாரணையை வெறுமனே தொல்லியல் அகழ்வாய்வு - எலும்புக்கூடுகளின் ஆரம்பநிலை அவதானிப்புகளுக்குள் மட்டுப்படுத்திவிட முடியாது.
அறிக்கையில் பல எலும்புக்கூடுகள் தொடர்பில் மரணத்திற்கு முன்பான அல்லது மரணத்தின் போது ஏற்பட்ட காயங்களுக்கான
 தெளிவான தடயங்கள் கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால், அதே அறிக்கை இந்த மதிப்பீடுகள் களத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பநிலை அவதானிப்புகள் மட்டுமே என ஒப்புக்கொள்கின்றது.
விரிவான ஆய்வகப் பரிசோதனைகள், எலும்புகளைச் 
சுத்தப்படுத்துதல், மறுசீரமைத்தல், கதிரியக்கப் பரிசோதனைகள் மற்றும் நுண்ணோக்கிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும்
 குறிப்பிடுகின்றது.
இத்தகைய வரையறைகளைக் கொண்ட ஆய்வின் அடிப்படையில் காயங்களுக்கான தடயங்கள் இல்லை எனக் கூறுவதை இறுதியான அறிவியல் முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாது.
அத்துடன் ஒருவரின் எலும்புக்கூட்டில் வெளிப்படையான காயங்கள் காணப்படவில்லை என்பதனால் அவர் இயற்கையாக 
இறந்தார் என்று முடிவெடுக்க முடியாது. மென்மையான திசுக்களில்
 ஏற்பட்ட காயங்கள், மூச்சுத்திணறல், விஷமூட்டல், சில வகையான தாக்குதல்கள், எலும்புகளில் தடயங்களை விட்டுச் செல்லாத பல மரணக் காரணங்களை எலும்புக்கூடுகளை மட்டும் கொண்டு நிராகரிக்க முடியாது.
எனவே, மரணத்திற்கான காரணம், மரணத்தின் தன்மை, மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் ஆகியவை தொடர்பில் விரிவான மருத்துவ மற்றும் தடயவியல் விசாரணைகள் அவசியமாகின்றன.
இந்த இடைக்கால அறிக்கையில் 574 தனிநபர்களுக்குரிய என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 51 இடங்களில் சிதறிய மனித எலும்புகளின் குவியல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவ்வளவு பெருந்தொகையான
 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யார்? 
எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தவர்கள்? எந்தச் சூழ்நிலையில் உயிரிழந்தார்கள்? அவர்களின் குடும்பத்தினரை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் என்ன? என்ற அடிப்படையான கேள்விகளுக்கு முழுமையான பதில்கள் 
வழங்கப்படவில்லை.
குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடமிருந்து DNA மாதிரிகளைப் பெற்று ஒப்பிட்டுப் பார்க்கும் 
விரிவான மரபணு அடையாளப்படுத்தல் அகழ்வாய்வுப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டமை, விலங்குகளின் உடல்கள் புதைக்கப்பட்டமை, குழிகள் தோண்டப்பட்டமை போன்ற பல்வேறு மனிதச் செயற்பாடுகளால் நிலத்தின் அடுக்குகளும் எலும்புக்கூடுகளின் அமைவிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.
இத்தகைய இடையூறுகள் எப்போது, யாரால், எதற்காக மேற்கொள்ளப்பட்டன? அவை மனித எச்சங்களின் ஆதாரங்களை அழித்துள்ளனவா? தடயங்களை மறைக்கும் நோக்கத்துடன் ஏதேனும் செயற்பாடுகள் இடம்பெற்றனவா? என்ற கேள்விகளுக்கும் சுயாதீனமான விசாரணை 
அவசியமாகின்றது.
கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதைத் துல்லியமாக நிர்ணயிப்பதற்கான அறிவியல் பரிசோதனைகள் முக்கியமானவை.
இப்பேராசிரியரால் ஏற்கனவே முடித்துவைக்கப்பட்ட மன்னார் சதொச மனிதப்புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி போல முறையான அதேவேளை வெளிப்படைத்தன்மையற்ற ஆய்வு முடிவுகளை செம்மணி - சித்துப்பாத்தி விடயத்தில் ஒருபோதும் 
ஏற்கமுடியாது.
அத்துடன், செம்மணி பகுதியில் முன்னர் வெளிப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியங்கள், நீதிமன்ற ஆவணங்கள், மனித உரிமை அமைப்புகளின் பதிவுகள், வரலாற்று ஆதாரங்கள் ஆகியவற்றுடன் இங்கு கண்டெடுக்கப்பட்ட எச்சங்களை ஒப்பிட்டு ஆராய வேண்டும்.
ஒரு மனிதப் புதைகுழியின் உண்மையான பின்னணியை அறிய எலும்புக்கூடுகளின் அமைவிடத்தை மட்டும் ஆராய்வது போதுமானதல்ல. செம்மணி மனிதப்புதைகுழியோடு தொடர்புபட்ட இராணுவத்தினர் இன்றும் உயிரோடுள்ளனர். கட்டாயமாக அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படல் வேண்டும்.
அறிக்கையின் தலைப்பிலேயே இது இடைக்கால அறிக்கை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அறிக்கையின் பல இடங்களில் ஆய்வுகள் ஆரம்பநிலையிலேயே இருப்பதாகவும் மேலதிக ஆய்வுகள் அவசியம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறிருக்கையில், இவ்வறிக்கையில் காணப்படும் ஆரம்பநிலை அவதானிப்புகளை வைத்து செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் முழுமையான உண்மையைத் தீர்மானிக்க முடியாது. எனவே, இந்த அறிக்கையை இறுதியான அறிவியல் முடிவாக ஏற்றுக்கொள்வதை நாம் நிராகரிக்கின்றோம்.
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்காகப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்,
பேராசிரியர் ராஜ் சோமதேவ, அனுஷா வன்னிநாயக்கே ஆகியோரால் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கையை இறுதியான தடயவியல் முடிவாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதன் குறைபாடுகள் சுயாதீனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடயவியல் தொல்லியல் நிபுணர்கள், தடயவியல் வைத்தியர்கள், மனித எலும்பியல் நிபுணர்கள், மரபணு ஆய்வாளர் கள் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த நிபுணர்கள் அடங்கிய சுயாதீன சர்வதேச நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்.
அத்தரப்பினர் செம்மணி - சித்துப்பாத்தி தொடர்பான ஆய்விலும், அகழ்விலும் பார்வையாளர்களாக அல்லாமல் நேரடிப்பங்கேற்பாளர்களாக ஈடுபடல் வேண்டும்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் சர்வதேச தரத்திலான தடயவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மரணத்திற்கான காரணம், காயங்களின் தன்மை, மரணத்தின் காலப்பகுதி மற்றும் புதைக்கப்பட்ட சூழ்நிலைகள் தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடமிருந்து DNA மாதிரிகள் பெறப்பட்டு, சர்வதேச தரத்திலான மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
செம்மணி - சித்துப்பாத்தி அகழ்வாய்வின் அனைத்து கட்டங்களும் முழுமையான காணொளி, புகைப்படம், வரைபடம், ஆவணப்படுத்தல் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், அவற்றுடன் தொடர்புடைய பொருட்கள், ஏனைய ஆதாரங்கள் அனைத்தும் உரிய சட்டப் பாதுகாப்புடன் பேணப்பட வேண்டும். அவை அழிக்கப்படுவதையோ, மாற்றப்படுவதையோ, ஆதாரங்கள் பாதிக்கப்படுவதையோ தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னர் வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சர்வதேச விசாரணைக்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும். இதுபோன்று அறிக்கைகளில் விளையாடும் உள்ளக நீதிவிசாரணையை நாம் முற்றாக 
நிராகரிக்கின்றோம்.
அகழ்வாய்வுப் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலதிக மனிதப் புதைகுழிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய விரிவான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக 
மாணவி கிருஷாந்தி உள்ளிட்டவர்களை படுகொலை செய்த குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச 1998 ஆம் ஆண்டில் செம்மணி வெளியில் தாம் கொன்று புதைத்ததாக அடையாளம் காட்டிய 21 இடங்களும் அகழ்வு செய்யப்படல்
 வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பும் அவர்களது கருத்துகளும் விசாரணையின் அனைத்து கட்டங்களிலும் மதிக்கப்பட வேண்டும். உள்வாங்கப்படல் வேண்டும்.
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் அரசியல் தலையீடுகள் - அரச நிறுவன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
கண்டறியப்படும் உண்மைகள் அனைத்தும் பொதுமக்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் புரியும் வகையில் தமிழில் வெளியிடப்பட வேண்டும். விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான காலமுறை அறிக்கைகளும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
இவ்விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச பங்கேற்பு - சர்வதேச நீதிப் பொறிமுறைகளின் பங்களிப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் உறவினர்கள் எமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்வதற்காகப் பல தசாப்தங்களாகப் போராடி வருகின்றோம்.
எமது பிள்ளைகள் எங்கே? எமது கணவன்மார் எங்கே? எமது உறவினர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் எமது வாழ்நாளையே நீதிக்கான போராட்டத்தில் கழித்துக்கொண்டிருக்கும் எம்போன்ற தாய்மார்களுக்கு செம்மணி - சித்துப்பாத்தி ஒரு மிக முக்கியமான நீதிக்கான களமாகும்.
எங்களின் வலியையும் எதிர்பார்ப்புகளையும் புறக்கணித்து, மனித எச்சங்கள் தொடர்பான முழுமையற்ற ஆரம்பநிலை அவதானிப்புகளைக் கொண்டு உண்மையைத் தீர்மானிக்க முடியாது. நாம் அறிவியல் ஆய்வுகளுக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக, அறிவியலின் பெயரால் முழுமையற்ற ஆய்வுகள் இறுதி உண்மையாக முன்வைக்கப்படுவதையே 
எதிர்க்கின்றோம்.
எமக்குத் தேவையானது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் அறிக்கை மட்டுமல்ல. அந்த எலும்புக்கூடுகளுக்குப் பின்னால் புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் அடையாளங்களையும், 
அவர்களின் மரணத்திற்கான காரணங்களையும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளிப்படுத்தும் நேர்மையான விசாரணையாகும் என 
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, செம்மணி சிந்துபாத்தி மயானத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் உருவப்பொம்மையை எரித்ததுடன், அவர் நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையையும் தீயிட்டுக் கொளுத்தினர் மேலும், அங்கு ஒப்பாரி வைத்து தமது எதிர்ப்பையும் வேதனையையும் வெளிப்படுத்தினர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது  

 
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சக்திவாய்ந்த நிலநடுக்கம்-இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இந்து சமுத்திரத்தில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது.17-11-2026- இன்று அதிகாலை 2.41 மணியளவில் ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் பண்டா 
கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில்
 இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை
 வௌியாகவில்லை.
எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள
                                                   என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                                                                                                                                                                                        
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 16 நவம்பர், 2026

நடைபெற்ற வித்தியாசமான தூக்கப் போட்டியில் அறுபது நாட்களில் லட்சாதிபதியான பெண்

இவர் தூங்குவதற்கே சம்பளம் கிடைத்தால் எப்படி இருக்கும் இது வெறும் கற்பனை அல்ல, உண்மையாகவே இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், 60 நாட்கள் நடைபெற்ற வித்தியாசமான தூக்கப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.9.63 லட்சம் பரிசுத் தொகையையும் இலவச சுற்றுலா பேக்கேஜையும் வென்றுள்ளார். இந்த
 வினோதப் போட்டியை இந்தியாவின் பிரபல மெத்தை தயாரிப்பு நிறுவனமான Wakefit நடத்தியது. 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஐந்தாவது சீசனில், நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு 10 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகினர்.
இந்தப் போட்டியின் முக்கிய விதி, தினமும் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதுதான். இதற்காகப் போட்டியாளர்களுக்கு மெத்தை, தலையணை மற்றும் தூக்கத்தைக் கண்காணிக்கும் கருவிகள் 
வழங்கப்பட்டன.
அவர்களின் தூக்க நேரம், தரம் மற்றும் தினசரிச் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டன.ஆனால், தூங்குவது மட்டுமே போட்டியாக இருக்கவில்லை.
வாரந்தோறும் திரைப்படக் காட்சிகளை நகைச்சுவையாக மீண்டும் நடித்துக் காட்டுவது, தூக்கப் பழக்கங்களைப் பதிவு செய்வது, உரையாடல்களில் 'போர்வை', 'தலையணை' போன்ற வார்த்தைகளை இயல்பாகப் பயன்படுத்துவது எனப் பல சுவாரஸ்யமான சவால்களும்
 நடத்தப்பட்டன.
60 நாட்கள் போட்டிக்குப் பிறகு நான்கு பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிப் போட்டியில், படுக்கையறையைப் படத்தின் அடிப்படையில் மீண்டும் அமைப்பது, தூக்கத்திற்குத் தேவையான பொருட்களை ஏலம் மூலம் தேர்வு செய்வது உள்ளிட்ட சவால்கள்
 இடம்பெற்றன.
இறுதியாக, தங்களுக்கென அமைக்கப்பட்ட படுக்கையறையில் ஒரு இரவு தூங்கிய போட்டியாளர்களின் தூக்கத் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் மும்பையைச் சேர்ந்த ஜினியா சாட்டர்ஜி வெற்றியாளராக 
அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு ரூ.9.63 லட்சம் பரிசுத் தொகையுடன் Wakefit நிறுவனத்தின் இலவச சுற்றுலா பேக்கேஜும் வழங்கப்பட்டது. தூக்கத்தைப் போட்டியாக மாற்றி, அதையே வருமானமாகவும் மாற்றிய இந்த முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அடுத்த சீசனில் பங்கேற்க விரும்புவோர் Wakefit நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும்                                                 என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                                 
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

பிரிட்டிஷ் நடிகர் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ராபர்ட் பேட்டின்சன் தேர்வு

டேனியல் கிரேக்கைத் தொடர்ந்து 007 கதாபாத்திரத்தில் புதிய அவதாரம் உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடரின் அடுத்த கதாநாயகனாக பிரிட்டிஷ் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் தேர்வு 
செய்யப்பட்டுள்ளார். 
டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக பேட்டின்சன் நடிக்கவுள்ளதாக அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் திங்களன்று சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிவித்துள்ளது.
1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடர், ஹாலிவுட் வரலாற்றில் நீண்டகாலமாகத் தொடரும் மற்றும் அதிக வசூலை ஈட்டிய திரைப்படத் தொடர்களில் ஒன்றாக விளங்குகிறது. ரகசிய உளவாளியான 007-இன் சாகசங்கள், அதிரடி நடவடிக்கைகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மர்மங்கள் ஆகியவை இத்தொடரின் தனிச்சிறப்புகளாகும்.
இதன்மூலம் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஏழாவது நடிகர் என்ற பெருமையை ராபர்ட் பேட்டின்சன் பெறுகிறார். இக்கதாபாத்திரத்திற்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாகப் பரவிய வதந்திகளுக்கு தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்புக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பேட்டின்சன், ஜேம்ஸ் பாண்ட் சினிமா உலகின் மிகப் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒருவர் என்றும், 007 கதாபாத்திரத்தில் நடிப்பது தனது வாழ்நாள் பெருமை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தக் கதாபாத்திரம் தனது கனவு நனவான தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் டெனிஸ் வில்லென்யூ இயக்கவுள்ளார். 'பீக்கி பிளைண்டர்ஸ்' தொடரின் படைப்பாளியான ஸ்டீவன் நைட் இப்படத்திற்கான திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.
பேட்டின்சன் நடிக்கும் திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் தொடரின் 26ஆவது திரைப்படமாக அமையவுள்ளது. 2021ஆம் ஆண்டு வெளியான 'நோ டைம் டு டை' திரைப்படத்திற்குப் பின்னர் உருவாகும் அடுத்த பாண்ட் திரைப்படம் 
இதுவாகும்.
புதிய நடிகர், புதிய இயக்குநர் மற்றும் புதிய படைப்புக் குழுவுடன் ஜேம்ஸ் பாண்ட் தொடர் புதிய கட்டத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பாண்ட் திரைப்பட ரசிகர்கள் அடுத்த படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                               
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.