வியாழன், 8 அக்டோபர், 2026

இலக்கிய நோபல் பரிசு 2026 கனடாவைச் சேர்ந்த ஆன் கார்சனுக்கு வழங்கப்பட்டது

நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த கவிஞரும் கட்டுரையாளருமான ஆன் கார்சனுக்கு 2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடன் அகாதமி வியாழக்கிழமை அறிவித்தது.
கார்சனின் துணிச்சலான மற்றும் புதுமையான படைப்புகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அகாதமி தெரிவித்தது. அவரது படைப்புகள் செவ்வியல் இலக்கிய மரபுடன் விளையாட்டுத்தனமான உரையாடலை
 உருவாக்கி, சமகால இலக்கியத்துக்குப் புதிய வடிவங்களை உருவாக்கியுள்ளதாக அகாதமியின் நிரந்தரச் செயலாளர் இங்க்ரிட் கார்ல்பர்க் பாராட்டினார்.
76 வயதான கார்சன், இலத்தீன் மற்றும் கிரேக்க செவ்வியல் இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். மெக்கில் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் செவ்வியல், படைப்பிலக்கியம் மற்றும் ஒப்பிலக்கியத் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
1950ஆம் ஆண்டு டொராண்டோவில் பிறந்த கார்சன், 1986ஆம் ஆண்டு வெளியான ‘Eros the Bittersweet’ என்ற தனது முதல் திறனாய்வு நூல் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். பின்னர் கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து படைப்புகளை
 வெளியிட்டார்.
அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ‘The Beauty of the Husband’ கவிதைத் தொகுப்பும் அடங்கும். சாஃபோ மற்றும் சோஃபோக்ளீஸ் உள்ளிட்ட பண்டைய கிரேக்க எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர் 
மொழிபெயர்த்துள்ளார்.
டி.எஸ். எலியட் பரிசு, மெக்கார்தர் ஆய்வு உதவித்தொகை, PEN/நபோகோவ் விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை கார்சன் ஏற்கனவே பெற்றுள்ளார். 2026 இலக்கிய நோபல் பரிசைப் பெறும் 123வது விருதாளர்களில் இவர் 19வது பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய நோபல் பரிசுடன் 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. டிசம்பரில் நடைபெறும் அதிகாரப்பூர்வ விழாவில் பதக்கம் மற்றும் பட்டயத்தைப் பெறுவதுடன், நோபல் விரிவுரையையும் கார்சன் ஆற்ற உள்ளார்.
நோபல் பரிசுகளின் அறிவிப்புத் தொடரில், அமைதிக்கான பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதார அறிவியல் பரிசு அடுத்த திங்கட்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளன.இதுவரை வேறு யார் நோபல் பரிசு பெற்றுள்ளனர்
ஒளியைக் கொண்டு நரம்பு செல்களைக் கட்டுப்படுத்தும் முறையான ஆப்டோஜெனெடிக்ஸ் துறையில், மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வழிவகை செய்ததற்காக, கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகெமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு
 மருத்துவத்திற்கான நோபல் பரிசு திங்களன்று
 வழங்கப்பட்டது.
வானியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்த, அரிதான நியூட்ரினோக்கள் குழுவின் மர்மத்தை அவிழ்க்க உதவிய முயற்சிகளுக்காக, பெல்ஜியத்தில் பிறந்த வானியற்பியலாளரான பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமை
 வழங்கப்பட்டது.
புதன்கிழமை அன்று, உயிரினங்களில் காணப்படும் ஹோமோகைராலிட்டி எனும் நீண்டகால மர்மத்திற்குத் தீர்வு கண்டதற்காக, பிரான்சின் ஹென்றி பி. ககன் மற்றும் ஜப்பானின் கென்சோ சோய் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   


உங்கள் தொப்பையைக் குறைக்க எளிய வழி: தயாரிக்க கூடிய இயற்கை பானம்

உங்கள் உடலினுள் அதிகரித்துள்ள கொழுப்புக்கள் ஒருவரது தோற்றத்தை மட்டும் பாதிப்பதில்லை அந்த கொழுப்புக்களானது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தையும்

 அதிகரிக்கும். குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடல் எடையில் முக்கியமாக தொப்பையை குறைப்பதில் கணிசமான மாற்றத்தைக் காணலாம். அவை என்ன என்பவை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   



புதன், 7 அக்டோபர், 2026

தனது கடைசி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணிக்காக ஆடி விடை பெற்றார் மெஸ்ஸி

.அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது நாட்டுக்காக விளையாடிய சர்வதேச கால்பந்து பயணத்தை உணர்ச்சிகரமாக முடித்துக்கொண்டார். இதன் மூலம் உலக கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயம் நிறைவுக்கு 
வந்துள்ளது.
பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனின் அணியை 3–0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட்டி மெஸ்ஸிக்கு அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய 208வது போட்டியாக அமைந்தது. மேலும், அவர் தனது 126வது சர்வதேச கோலையும் இந்த ஆட்டத்தில் பதிவு செய்தார்.
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரத்துடன் அந்த தருணத்தை கொண்டாடினர். மெஸ்ஸியின் சக வீரர்களும் அவரை கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியை 
வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்ததுடன் மட்டுமல்லாமல், தனது சக வீரர்களான நிக்கோலஸ் ஒட்டமெண்டி மற்றும் நிக்கோ பாஸ் ஆகியோர் கோல் அடிக்கவும் உதவினார்.
போட்டி முடிந்ததும் ரசிகர்களிடம் பேசிய மெஸ்ஸி, அர்ஜென்டினா அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடியதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார். மேலும், இனி தேசிய அணிக்காக திரும்பி விளையாட முடியாது என்பது தனக்கு வேதனையாக இருப்பதாகவும் கூறினார்.
மெஸ்ஸிக்கு மரியாதை செலுத்தும் வகையில், போட்டி முடிந்தபின் மைதானத்திற்கு மேலே ட்ரோன்கள் மூலம் “Gracias, Leo!” என்ற வாசகம் உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த ட்ரோன் காட்சி மெஸ்ஸியின் முகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் மெஸ்ஸியின் சர்வதேச பயணம் பல ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது. குறிப்பாக, 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோல்வி, 2015 மற்றும் 2016 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டிகளில் சிலியிடம் தோல்வி ஆகியவை அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை 
ஏற்படுத்தின
தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு மெஸ்ஸி சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் அர்ஜென்டினா அணிக்காக விளையாடத் தொடங்கினார்.
அதன் பின்னர் அவரது சர்வதேச வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகள் வந்தன. 2021ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மெஸ்ஸி முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் நீண்டகாலமாக தொடர்ந்த அர்ஜென்டினாவின் கோப்பை வெற்றிக்கான காத்திருப்பு 
முடிவுக்கு வந்தது.
அதன் உச்சமாக 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மெஸ்ஸி தனது அணியை சாம்பியனாக்கினார். பிரான்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டி 3–3 என்ற கோல் கணக்கில் முடிந்த நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன் மூலம் மெஸ்ஸியின் நீண்டகால உலகக் கோப்பை கனவு நனவானது.
கிளப் கால்பந்தில் பார்சிலோனாவுக்காக ஏராளமான சாதனைகளை படைத்த மெஸ்ஸி, தனது சொந்த நாட்டிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடினார். ஆரம்ப காலங்களில் விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் அர்ஜென்டினாவுக்காக முக்கியமான கோப்பைகளை வென்று தனது விமர்சகர்களுக்கு பதிலளித்தார்.
சர்வதேச கால்பந்தில் இருந்து மெஸ்ஸி விடைபெற்றாலும், அவரது கால்பந்து பயணம் இன்னும் முடிவடையவில்லை. அவர் தற்போது விளையாடி வரும் அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் அணியான இன்டர் மியாமியுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
அர்ஜென்டினா ஜெர்சியில் மெஸ்ஸியின் கடைசி கோல், அவரது சர்வதேச கால்பந்து பயணத்திற்கு ஒரு உணர்ச்சிகரமான முடிவாக அமைந்துள்ளது. கால்பந்து ரசிகர்களின் நினைவில் மெஸ்ஸியின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   

கிளிநொச்சி ரோட்டரி கழகத்தினர் நேர்வேயில் வீதி போக்குவரத்துப் பாதுகாப்பு மாநாட் டில் பங்கேற்பு

..மிகவும்  வளர்ச்சியடைந்த நாடுகளில் மேற்கொள்ளப்படுவது போன்ற வீதிப் பாதுகாப்பு முயற்சிகளை இலங்கையிலும் முன்னெடுக்கும் வகையில், கிளிநொச்சி ரோட்டரி கழகத்தின் Transport Safety Academy நிறுவப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி ரோட்டரி கழக உறுப்பினர்கள் நோர்வேயின் பேர்கன் நகருக்கு அண்மையில் 
சென்றிருந்தனர். 
அங்கு Western Norway University இல் வீதி மற்றும் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டிலும்
 கலந்துகொண்டனர். 
அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான , யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவிக்கையில், 
இந்தப் பயணம், வீதிப் பாதுகாப்புத் துறையில் நோர்வேயின் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் அறிந்துகொள்வதற்கும், அவற்றிலிருந்து இலங்கைக்குப் பொருத்தமான அணுகுமுறைகளை அடையாளம் காண்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக
 அமைந்தது.
வீதி விபத்துகள் தவிர்க்க முடியாதவை அல்ல. சரியான திட்டமிடல், பாதுகாப்பான வீதிக் கட்டமைப்பு, தரமான வாகனங்கள், பொறுப்பான வாகனப் பயன்பாடு மற்றும் ஒவ்வொரு வீதிப் பயனாளரினதும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் அவற்றைக் கணிசமாகக் 
குறைக்க முடியும். 
ஒரு உயிரைக் காப்பாற்றுவது என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதாகும் 
ஒரு விபத்தைத் தடுப்பது என்பது உயிரிழப்பு, அங்கவீனம் மற்றும் பொருளாதார இழப்பு ஆகிய அனைத்தையும் தடுப்பதாகும்.
எனவே, அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புகள், பொலிஸார், சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வீதிப் பாதுகாப்பை ஒரு தேசிய முன்னுரிமையாகவும், ஒவ்வொருவரின் பொறுப்பாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   


சிறுவன் மூன்று மாத குழந்தையாக இருந்ததிலிருந்தே நினைவுகளை கூர்கிறார்.

இந்தச்சிறுவன் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் 16 வயதான சிறுவன் ஒருவரால், தான் 3 மாத குழந்தையாக இருந்த
 காலத்திலிருந்து தனக்கு நடந்த நிகழ்வுகளை நினைவு கூற முடிவதாக தெரிவித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆய்வாளர்கள் அந்த சிறுவனுக்கு KCL என பெயரிட்டுள்ளனர்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகின் 99 சதவீத மக்களை விட, KCL தனது கடந்த கால நிகழ்வுகளை இளம் வயதிலிருந்தே சிறப்பாக
 நினைவுகூர்கிறார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், கிரெனோபிள் ஆல்ப்ஸ் பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆய்வாளர் கிரிஸ்டியன் பார்சிகோவ்ஸ்கிக்கு, தனக்கு அதிகப்படியான நினைவாற்றல் இருப்பதாக அந்த சிறுவனிடமிருந்து மின்னஞ்சல் வந்துள்ளது.
அதன் பின்னர் KCL ன் நினைவாற்றல்களை பரிசோதித்த அந்த குழு, சீரற்ற முறையில் 15 தேதிகளை கொடுத்து, அந்த நாளில் நடந்த ஒரு முக்கியப் பொது நிகழ்வையோ, தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளையோ கூறுமாறு கேட்டுள்ளனர்.
இதில், KCL நடந்த நிகழ்வுகளை 83 சதவீதத் துல்லியத்துடன் நினைவு கூர்ந்தார். 3 மாதக் குழந்தையாக(ஏப்ரல் 2009) இருந்தபோதே தோன்றிய நிகழ்வுகளை கூட அவரால் நினைவு கூற முடிவதாக கூறப்படுகிறது.
அவரது பெற்றோரால் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆரம்பகால குழந்தை பருவ (2010–2011) நினைவுகளும் அவருக்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
KCL-இன் மூளைக்குள் அசாதாரணமாக நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. பிறப்பிலிருந்து அவனது வளர்ச்சி, எந்த மனநல அல்லது கல்வி சார்ந்த பிரச்சினைகளும் இன்றி, இயல்பாகவே இருந்தது என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாசனை, ஒரு சிறு இசைத் துணுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட வாக்கியம் போன்ற மிகச் சிறிய தூண்டுதல்களால்கூட தனது நினைவுகள் அடிக்கடி தூண்டப்படுவதாக KCL கூறியுள்ளார்.
மேலும், ஒரு நாளில் பல மணி நேரங்களில் இது போல் நினைவுகளில் மூழ்கி விடுவதாக தெரிவித்துள்ளார். HSAM பாதிப்புள்ளவர்களிடம் இது பொதுவாகக் காணப்படுகிறது.
மிகவும் மேம்பட்ட சுயசரிதை நினைவாற்றல் (HSAM) என்று அழைக்கப்படும் இந்த நிலை, உலகில் 100க்கும் குறைவான மக்களுக்கே இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
HSAM நோய் குறித்து ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறிவாற்றலில் 
மிகச்சிறந்தவர்கள் அல்ல. அன்றாடத் தகவல்களைக்
 கற்றுக்கொள்வது அல்லது எண்களை மனப்பாடம் செய்வது போன்ற விடயங்களில் பெரும்பாலும் பொதுமக்களுடன் ஒப்பிடத்தக்கவர்களாகவே உள்ளார்கள்.
ஆனால், அவர்கள் கண்ட, வாழ்ந்து அனுபவித்த தன்வரலாற்று நிகழ்வுகளை அவர்கள் நினைவில் கொண்டு அணுகும் விதமே அவர்களை வேறுபடுத்துகிறது.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


செவ்வாய், 6 அக்டோபர், 2026

நாட்டில் அம்பாறையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது ஹெரோயின் மீட்பு போதைப்பொருள் மீட்பு

நாட்டில் அம்பாறை நவகம்புர – தயாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், சந்தேகநபரிடமிருந்து 2,190 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முவங்கல மற்றும் கல்மடுவ பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரிடம் இருந்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ‘டின் மல்லி’ என அழைக்கப்படும் ‘கல்ஹாரா’ என்பவரின் சகோதரர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   


திங்களன்று கனடா கியூபெக் பிரிவினைவாதிகள் வாக்கெடுப்பில் வெற்றி, பொது வாக்கெடுப்புக்கு வாக்குறுதி

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் திங்களன்று நடைபெற்ற தேர்தலில், கனடாவிலிருந்து கியூபெக் சுதந்திரம் பெறுவது குறித்து புதிய பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்துள்ள பிரிவினைவாத பார்ட்டி கியூபெக்வா (PQ) அதிக இடங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான முழுமையான பெரும்பான்மையை அந்தக் கட்சி பெறவில்லை.
49 வயதான பால் செயிண்ட்-பியர் பிளமண்டன் தலைமையிலான PQ, மொத்தம் 127 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் சுமார் 60 இடங்களைப் பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவைப்படும் நிலையில், PQ சிறுபான்மை அரசாங்கமாக ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சட்டங்களை நிறைவேற்றவும், நம்பிக்கை வாக்கெடுப்புகளில் வெற்றி பெறவும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு PQ அரசாங்கத்துக்குத் தேவைப்படும்.
மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுதான் கியூபெக் மக்கள் பார்ட்டி கியூபெக்வாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்தச் செய்தியை நான் கேட்டேன்,” என்று PQ தலைவர் பால் செயிண்ட்-பியர் பிளமண்டன் தெரிவித்தார்.
ஒரு தசாப்தத்துக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு PQ மீண்டும் ஆட்சிக்கு வருவது, கியூபெக்கின் பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் அடையாளம் மற்றும் மாகாணத்தின் எதிர்காலம் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. கியூபெக்கின் மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள்.
கியூபெக்கை ஒரு தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தை வலியுறுத்திய செயிண்ட்-பியர் பிளமண்டன், பொது வாக்கெடுப்பு மூலம் கியூபெக் மக்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க 
முடியும் என்று கூறினார்.
நான் தொடர்ந்து அந்த நாட்டைப் பற்றிக் கனவு காண்கிறேன், அதைக் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்தக் கனவு ஒரு நாள் நனவாகும் என்று அவர் தனது வெற்றி உரையில் தெரிவித்தார்.
எனினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருக்கும் காலத்தில் கியூபெக் சுதந்திரம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படாது என அவர் தெளிவுபடுத்தினார். இந்த விவகாரம் “விவேகமான
 மற்றும் அமைதியான விவாதம் மூலம் அணுகப்பட வேண்டும் என்றும், “கணிக்க முடியாத ஒரு அதிபரின் நாடகங்களால் அது திசைதிருப்பப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.சுதந்திரத்துக்கு தற்போதைய ஆதரவு
PQ-வின் தேர்தல் வெற்றி, கியூபெக் சுதந்திரத்துக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நேரடியாகக் குறிக்கவில்லை.
1995ஆம் ஆண்டு நடைபெற்ற கடைசி சுதந்திர வாக்கெடுப்பில், 50.58 சதவீத வாக்காளர்கள் மட்டுமே கனடாவுடன் இணைந்திருக்க ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளை, சமீபத்திய கருத்துக்கணிப்புகள் கியூபெக் இறையாண்மைக்கான ஆதரவு சுமார் 30 சதவீதமாக
 இருப்பதாகக் காட்டுகின்றன.
19 வயதான அலெக்ஸியா கோமஸ், கியூபெக் சுதந்திரம் பெற்றால் அது அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக மாகாணத்தை பாதிப்புக்குள்ளாக்கக்கூடும் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் 
தெரிவித்தார்.
லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளும் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், PQ-வின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளால் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
இதனிடையே, கியூபெக் மக்களிடையே வரவேற்பைப் பெறக்கூடிய மற்றொரு நடவடிக்கையாக, பிரிட்டிஷ் முடியாட்சியுடனான கியூபெக்கின் உறவுகளை குறைக்கவும் PQ உறுதியளித்துள்ளது.
கனடாவிலிருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்புக்கான செயல்முறையைத் தொடங்குவதை ஆதரிப்பதா என்பதை ஆல்பர்ட்டா வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ள நிலையில், அதற்கு சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு கியூபெக் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   


Blogger இயக்குவது.