செவ்வாய், 11 ஜூலை, 2023

உலகம் முழுவதும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக 14 மில்லியன் பேர் வேலைகளை இழக்கும் அபாயம்

பொருளாதார சிக்கல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக அடுத்த 05 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 14 மில்லியன் வேலைகள் இழக்கப்படும் என எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு, 69 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும், ஆனால் சுமார் 83 மில்லியன் வேலைகள் இழக்கப்படும்.
உலகம் முழுவதும் உள்ள சுமார் 800 நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உலக பொருளாதார மன்றம் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது.
இழக்கப்படவுள்ள 14 மில்லியன் வேலைகள் தற்போதைய உலக பணியாளர்களின் 02 வீதத்திற்கு சமம் என்று 
கூறப்படுகிறது.
 செயற்கை நுண்ணறிவு காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவாக்கப்படும் வேலைகள் மட்டுமின்றி வேலைகளும் இழக்கப்படலாம் என்றும் இது கணித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 10 ஜூலை, 2023

மருதானை பகுதியில் அதிவேகத்தில் வாகனத்தை செலுத்திய யுவதிகள் பொலிஸார் அதிரடி

டிபெண்டர் ரக வாகனத்தை கவனமின்றி ஆபத்தான முறையில் செலுத்திய 19 வயதுடைய யுவதிகள் மூவரை பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
கொழும்பு - மருதானை பகுதியில் அதிக வேகத்துடன் வாகனத்தில் பயணித்தவர்களை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.

இருப்பினும், அதனை செலுத்திய யுவதி, பொலிஸாரின் சமிக்ஞையை பொருட்படுத்தாது சென்றுள்ளார்.
பின்னர் பொலிஸார் ஏனைய அவசர சேவைகளுக்கு அறிவித்தமையை தொடர்ந்து பிரிதொரு இடத்தில் வாகனம் 
சுற்றிவளைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குறித்த டிபெண்டர் ரக வாகனத்தை செலுத்திய யுவதி பொலிஸாரிடம் சொல்லாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வாகனத்தை செலுத்தியவர் மற்றும் அவரோடு பயணித்த இருவர் ஆகிய மூவரும் பொலிஸாரினால் கைது
 செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகள் கொழும்பில் வசிப்பவர்கள் என்பதோடு, பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 9 ஜூலை, 2023

ஸ்பெயினில் பாரம் காரணமாக சில பயணிகளை இறக்கிவிட்டு சென்ற விமானம்

ஸ்பெயினில் இருந்து லிவர்பூல் நகருக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஈசி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் கடந்த 5-ம் தேதி புறப்பட தயாராக இருந்தது. விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் அங்கு தட்பவெப்ப நிலை மாறியதால் கடும் 
காற்றும் வீசியது. 
அதிவேகமாக வீசிய காற்று மற்றும் குறுகிய ரன்வே கொண்ட விமான நிலையம் என்பதால் அங்கு விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. பயணிகள் முழுவதுமாக இருந்தநிலையில், அங்கு நிலவிய காலச்சூழலுக்கு விமானம் இவ்வளவு எடையுடன் டேக் ஆப் ஆவது கடினம் என்பதை 
விமானி உணர்ந்தார். 
இதையடுத்து விமான நிறுவனத்திடம் பேசிய விமானி, விமானத்தில் உள்ள பயணிகளில் 20 பேர் இறங்கினால் எடை குறைந்து விமானம் சிக்கலின்றி டேக் ஆப் ஆகிவிடும் என்றார்.
விமானத்திலிருந்து யார் இறங்க வேண்டும் என்பதை பயணிகளே முடிவுசெய்து கொள்ளலாம் என வலியுறுத்தினார். பயணிகளிடம் விமானி கோரிக்கை வைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் 
வைரலாக பரவியது.
விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும், ஊக்கத்தொகையாக 500 யூரோக்கள் அளிக்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது. 
இதையடுத்து பயணிகளில் 19 பேர் விமானத்தில் இருந்து இறங்க சம்மதம் தெரிவித்தனர். அதன்பின், 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் பத்திரமாக டேக் ஆப் ஆகி புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து விமானம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வானிலை நிலைக்கு ஏற்றவாறு விமானத்தின் எடையில் சில வரைமுறைகள் கொண்டு வருவது வழக்கமான நடைமுறைதான். 
பாதுகாப்பு காரணங்களுக்காக இதே முறையைதான் அனைத்து விமானங்களும் பின்பற்றுகின்றன என தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 8 ஜூலை, 2023

நாட்டைவிட்டு இந்த ஆண்டு 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்

இலங்கையிலிருந்துவெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது.
கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மேலும் சுமார் 300,000 இலங்கையர்கள் 
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பாக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 7 ஜூலை, 2023

கேரளாவில் புது மணமக்களை முட்டிப்பார்த்த உறவினருக்கு நேர்ந்த கதி

புதுமண தம்பதியினரின் தலையை முட்ட வைத்து ரசித்த உறவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, பாலக்காட்டை சேர்ந்தவர்கள் சச்சின் - சஜ்லா. இவர்களுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்து , மணமகன் வீட்டிற்கு மணமக்கள் சென்றபோது, மணமகனின் உறவினர் மணமக்களின் தலையை வேகமாக முட்ட வைத்துள்ளார்.
இதனால் வழிதாங்க முடியாத மணப்பெண் அழுதுக்கொண்டே மணமகன் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானதை அடுத்து மகளிர் ஆணையம்   விசாரணைக்கு உத்தரவிட்டது.
பெண்மையை அவமதித்ததுடன், அனாவசியமாக தொல்லை கொடுத்ததாகவும் மணமகனின் உறவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். .என்பதும் குறிப்பிடத்தக்கது       

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 6 ஜூலை, 2023

கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின்கொக்குளாய் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் மனித எச்சங்களைக் கொண்ட உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி T.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வு பணி 
முன்னெடுக்கப்படுகிறது.
 ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
 கடந்த 29.06.2023 அன்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
 இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர் . 
இது தொடர்பாக 30.06.2023 நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
 இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் இன்றைய தினம் அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிசாருக்கு பணிப்பு விடுத்திருந்தமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 5 ஜூலை, 2023

நாட்டில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாமல் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய 
வாகனங்களுக்கு சலுகை அடிப்படையில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து 
ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க 
தெரிவித்தார்.
மீள் பதிவுக்காக பெரும் அபராதம் செலுத்த வேண்டியிருப்பதால் சில வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கிணங்க பதிவை புதுப்பிப்பதற்கு நிவாரணம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் 
தெரிவித்தார்.
இந்த முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என நிஷாந்த அனுருத்த வீரசிங்க மேலும் தெரிவித்தார்
..என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.