வெள்ளி, 11 நவம்பர், 2022

இளம் தலைமுறை நான்கரை மில்லியன் இலங்கையர்கள் பற்றிய அதிர்ச்சி தகவல்

ஐஸ் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாவனை நாட்டில் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது. நான்கரை இலட்சம் இளம் தலைமுறையினர் அபாயகரமான முறைியில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச
 தெரிவித்துள்ளார்.
ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு முழுமையாக அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டரை வருட காலமாக வரையறுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
தொடர்ந்தும் தெரிவிக்கையில், 
பாடசாலை மாணவர்களும் போதைக்கு அடிமை ஹெரோயின், அபின் உள்ளிட்ட அபாயகரமான போதைப்பொருளைக் காட்டிலும் தற்போது ஐஸ் ரக போதைப் பொருள் மற்றும் பாவனை சடுதியாக 
அதிகரித்துள்ளது.
ஐஸ் ரக போதைப் பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் பெரும்பாலானோர் அடிமையாக உள்ளனர்.  மாணவர்களில் பெண் பிள்ளைகளும் இவ்வாறு ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 10 நவம்பர், 2022

ஒமானுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்களை விற்பனை செய்யும் கும்பல்

இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக ஒமானுக்கு செல்லும் பெண்களை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கைப் பெண்களை விற்பனை செய்வதாக 
கூறப்படும் ஆட் கடத்தல் குழு குறித்து இலங்கையின் 
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தலைமையிலான துப்பறியும் குழு விசாரணை நடத்த ஓமானுக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவவை கோடிட்டு ஊடகம் ஒன்று செய்தி 
வெளியிட்டுள்ளது.
வயது மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் ஏலம்
மத்திய கிழக்கு நாட்டிற்குள் நுழைய சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இளம் பெண்களுக்கு வீட்டு உதவியாளர்களாக வேலை பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விசாரணை குழு ஓமானை அடைந்ததும், அவர்களின் வயது மற்றும் தோற்றம் மற்றும் ஏலம் ஆகியவற்றிற்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டு, பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் விற்கப்படுவதாகவும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு ஆதாரமாக 21 வயதான பெண் ஒருவரின் வாக்குமூலம் அமைந்துள்ளதாக பொலிஸார்  
குறிப்பிட்டுள்ளனர்.
எனவே போலியான முகவர்களிடம் சென்று பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும், குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் 
தெரிவித்துள்ளது.
இதேவேளை ஓமானில் உள்ள தூதரகத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள 90க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் இந்த கடத்தல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 9 நவம்பர், 2022

நாட்டில் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கை

நாட்டில் பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம்
 நீடிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி பயின்ற மாணவர்களே அந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து விண்ணப்பங்களையும் தாங்கள் கல்வி கற்ற பாடசாலையின் அதிபரினால் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் எனவும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட விதத்தில் இந்த பரீட்சைக்கு தோற்ற முடியாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2022 (2023) உயர்தர பரீட்சை நடைபெறும் காலத்தில் இந்தத் பரீட்சை நடத்தப்படாது எனவும் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 8 நவம்பர், 2022

கடும் கோடை வெப்பத்திற்கு ஐரோப்பாவில் 15000 பேர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளில் நடப்பு ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு
 தெரிவித்து உள்ளது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குனர் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இதுவரை கிடைத்த தகவலின்படி, ஐரோப்பாவில் நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் 3 மாதங்களில், கடும் வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் 
உயிரிழந்து உள்ளனர்.
அவர்களில் ஜெர்மனி நாட்டில் அதிக அளவாக 4 ஆயிரத்து 500 பேர், ஸ்பெயின் நாட்டில் 4 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். இங்கிலாந்தில் 3,200 பேரும், போர்ச்சுகல்லில் ஆயிரத்திற்கும் கூடுதலானோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
எனினும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அவர் எச்சரிக்கை தெரிவித்து உள்ளார். ஏனெனில், இன்னும் பல நாடுகள் வெப்ப பாதிப்பிற்கு கூடுதலான மக்கள் உயிரிழந்த தகவல்களை
 அளித்து வருகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு ஆண்டு 2022-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 22-ந்தேதி வரையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என பிரான்ஸ் நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் பொருளாதார படிப்புகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.
இது கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகம். இதற்கு, நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தின் மத்தியில், முதலில் வெப்ப அலை தொடங்கி பின்பு, அது ஜூலை 
மாத மத்தியில் கடும் வெப்ப அலை பரவலானபோது அதனால் மக்களில் பலர் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்து உள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 7 நவம்பர், 2022

நிலத்திற்கு அடியில் தெற்கு ஆஸ்திரேலியாவில் அனைத்து ஆடம்பர பொழுது போக்கு கிராமம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் கிராமம் ஒன்று காணப்படுவதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் கூப்பர் பேடி. இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கு மேற்பட்ட மக்கள் 
வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வீடுகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியம், பார் மற்றும் விடுதி என அனைத்தும் இங்கு காணப்படுகின்றது.
அதேவேளை, இந்த நிலத்தடி கிராமத்தில் இணைய வசதி கூட உள்ளதாம்.
ஒரு காலத்தில் இந்த கிராமம் பாலைவனமாக இருந்ததாகவும், இங்கு காலத்திற்கு ஏற்ப தட்ப வெப்பநிலை சரியாக இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
பின்பு 1915ம் ஆண்டு சுரங்கப்பணி ஆரம்பிக்கப்பட்ட இந்த கிராமத்தில் பின்பு மக்கள் அதில் தங்க ஆரம்பித்துள்ளனர்.
தற்போது கோடை மற்றும் குளிர் காலங்களில் எந்தவாரு கஷ்டமும இல்லாமல் தட்ப வெப்பநிலை சீராக இருப்பதாக 
கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 6 நவம்பர், 2022

நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் பஸ் விபத்தில் - நடந்தது என்ன

வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்திற்கு சிறிது நேரத்துக்கு முன்னரே உணவுக்காக கடையொன்றில் அதிசொகுசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்ஸில் பெரும்பாலானவர்கள் நித்திரை கொள்ளவில்லை.
விபத்து இடம்பெற்றபோது விழித்திருந்தமையால் பஸ்ஸின் கம்பிகளைப் பிடித்து அதிகளவானோர் உயிர்ச் சேதங்கள் இன்றி தப்பித்தனர். என விபத்துக்குள்ளான குறித்த அதிசொகுசு பஸ்ஸில் 
பயணித்துக் காயமடைந்த யாழ்.வடமராட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட அதி சொகுசு பஸ் வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் 05-11-2022.அன்று  அதிகாலை 12.20 மணியளவில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 4 பேர் . 05-11-2022.அன்று 
 மாலை வீடு திரும்பினர்.
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவியான நாவலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் சயாகரி (வயது – 23), பஸ் சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 
எஸ்.சிவரூபன் (வயது 32), இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் 
நிதர்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தனர். உயிரிழந்த முதலாம் வருட மாணவியான சயாகரி, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில்
 உயிரிழந்தார்.
இதேவேளை, நிதர்சன் வெளிநாடு செல்லும் பயண ஏற்பாட்டுக்காகக் கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விபத்துத் தொடர்பில் காயமடைந்த வடமராட்சியைச் சேர்ந்தவர் தெரிவித்ததாவது,
“இரவு 11.45 மணியளவில் கனகராயன்குளத்தில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது. சுமார் 10 அல்லது 15 நிமிடங்களில் அங்கிருந்து 
பஸ் புறப்பட்டது.
தேநீர் அருந்தி, உணவு உண்டமையால் பஸ்ஸில் பெரும்பாலானவர்கள் விழிப்பாகவே இருந்தார்கள். சுமார் 20 நிமிடத்தில் பஸ் வளைவு ஒன்றில் திரும்பியது. இதன்போது பஸ் கொஞ்சம் தளம்பியதை 
உணர முடிந்தது.
அந்த வளைவைத் தொடர்ந்து வந்த மற்றொரு வளைவில் மதகுடன் இதேபோன்று திரும்பும்போதே மோதியது.
அந்த மதகுடன் அமைந்திருந்த நடைபாதை போன்ற ஒற்றையடி பாதையில் பஸ்ஸின் ஒரு சில்லும், மதகின் மற்றைய பக்கத்துடன் பஸ்ஸின் பின்முனையும் மோதி சாரதியின் இருக்கைப் பக்கமாக பஸ் சரிந்து விழுந்தது. பெரும்பாலானவர்கள் விழித்திருந்தமையால் பஸ் சரியும் போதே கம்பிகளைப் பிடித்து தப்பினர்.
சாரதியும், பல்கலைக்கழக மாணவியும் தூக்கி வீசப்பட்டு கல்லுடன் மோதுண்டிருந்தார்கள். மற்றையவர், கண்ணாடி உடைந்து வெளியே விழுந்துள்ளார். அவர் மீதே பஸ்
 சரிந்து வீழ்ந்தது.
பின்னால் இன்னொரு அதிசொகுசு பஸ்ஸும் வந்தது. அதுவும் தளம்பியவாறே வந்தாலும், சாரதியின் சாதுரியத்தால் விபத்திலிருந்து தப்பித்தது. வீதியை விட்டு விலகினாலும் விபத்து ஏற்படவில்லை.
அந்த பஸ்ஸில் வந்தவர்களும் உடனடியாக உதவிகளைச் செய்து எமது பஸ்ஸில் பயணித்தவர்களை மருத்துவமனைக்குக் 
கொண்டு சென்றார்கள்.  
பஸ்ஸின் நடத்துநர் இளைஞர் ஒருவரே. அவர் முதல் தடவையாக இந்த பஸ்ஸில் பணியாற்றினார். அவரும் எங்களுடன் கம்பியைப் பிடித்தே உயிர் தப்பினார். சாரதி உயிரிழந்ததைப் பார்த்ததும் பயத்தால் அவர் அங்கிருந்து ஓடி விட்டார்” – என்றார்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இந்த விபத்து உள்ளடங்கலாக நேற்று மாத்திரம் 3 அதிசொகுசுப் பஸ் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்தில் மாத்திரமே பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.
வவுனியா, நொச்சிமோட்டைப் பாலதுக்கு அருகில் விபத்துக்குளான அதிசொகுசு பஸ்ஸை மீட்கும் பணியில்  05-11-2022.அன்று காலை இராணுவத்தினர் ஈடுபட்ட போது ஏ – 9 வீதிப் போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகப் பாதிக்கப்பட்டது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





சனி, 5 நவம்பர், 2022

ஐந்து இலங்கையர்கள் பிரான்சில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்

ஐந்து இலங்கை குடியேற்றவாசிகளின் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கான கோரிக்கையினை அந்நாட்டு நிர்வாக நீதிமன்றம் ஒன்று 
நிராகரித்துள்ளது.
கடந்த 31 ஆம் திகதி இவர்களின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன் காத்திருப்பு பகுதியில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் 8 புலம்பெயர்வோர் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
ஐந்து இலங்கை குடியேற்றவாசிகளின் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கான கோரிக்கையினை நிர்வாக நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை நிராகரித்தது.
இந்தநிலையில் குறித்த அனைவரும் மிக விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 
குறித்த ஐந்து பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது தாம் அனைவரும் நாடு திரும்பினால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.
எனினும் அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம்
 நிராகரித்தது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




Blogger இயக்குவது.