சனி, 18 மார்ச், 2023

சுமார் நாற்பது அரச நிறுவனங்களை இலங்கையில் மூட திட்டம்

இலங்கையில் சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.  
பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக 
அவர் கூறினார். 
செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க 
தெரிவித்தார். 
இவ்வாறான நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது, அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டார். 
குறித்த நிறுவனங்களை நிதியமைச்சின் கீழ் கொண்டு வந்து, தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 17 மார்ச், 2023

குலபடா கிராமத்தில் தலை மற்றும் வாயின்றி பிறந்த விசித்திரக் குழந்தை;

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தலை மற்றும் வாய் இல்லாத அபூர்வ மற்றும் விசித்திரமான குழந்தை 
ஒன்று பிறந்துள்ளது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சரஸ்கானா பிளாக்கிற்கு உட்பட்ட குலபடா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் பெற்றோர் சுடாமணி ஹன்ஸ்தா (Chudamani Hansda) மற்றும் பப்லு மகாரானா (Bablu Maharana) என அடையாளம் 
காணப்பட்டனர்.
ஆதாரங்களின்படி, சுடாமணி பிரசவ வலியால் துடித்ததை அடுத்து ஆம்புலன்ஸில் பாங்கிரிபோசி மருத்துவமனைக்கு அழைத்துச் 
செல்லப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் வாகனத்திலேயே அவர் தனது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
குழந்தை வாயும் தலையும் இல்லாமல் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. சுடாமணி பாங்கிரிபோசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன்போது தலையின்றி குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 16 மார்ச், 2023

தலைநகர் பாரிஸ்சில் குவிந்த குப்பைகளால் குறைக்கூறும் சுற்றுலாப்பயணிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் குப்பைகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது. பாரிஸிற்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலரின் 
கனவாக இருக்கலாம்.
ஆனால் அந்தக் கனவு நகரம் தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர சபை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இந்நிலையில் குப்பைகளைச் சேகரிக்கும் நகர சபை ஊழியர்கள் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். எதிர்வரும் திங்கட்கிழமை வரை வேலை நிறுத்தம் நீடிக்கும் என தெரியவந்துள்ளது.
அதனால் நகரின் நடைபாதைகளில் 6,600 டன் குப்பைகள் கிடக்கின்றன. பிரான்ஸில் ஓய்வு வயதை 57லிருந்து 59க்கு உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்பள உயர்வு கேட்டும் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்கும் குப்பைகள் நிரம்பிக் கிடப்பதால், ஒரு சில சுற்றுப்பயணிகள் துர்நாற்றம் குறித்துக் குறை கூறுகின்றனர். இன்னும் சிலர் அது ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் குறிப்பதாகத் தெரிவித்தனர்.  


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 15 மார்ச், 2023

டெல்லி பொலிஸ் சைபர் குற்றங்களைத் தடுக்க ட்ரூகோலர் செயலியுடன் ஒப்பந்தம்

 

சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ‘ட்ரூகோலர் செயலி’ நிறுவனத்துடன் இந்தியாவிலுள்ள டில்லி பொலிஸ்
 ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து டில்லி பொலிஸ் சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங் கூறியதாவது, ட்ரூகோலர் செயலி ஒரு ஐடி சரிபார்ப்பு தளமாகும். தற்போது இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
இந்நிலையில் செல்போன் மூலமாக இணைய வழி மோசடிகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் விதமாக ட்ரூகொலர் செயலியுடன் டெல்லி பொலிஸ் ஒப்பந்தம் 
செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி மோசடி அல்லது பிற பதிவு செய்யப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக புகார்களை பெற்ற டில்லி பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களை இனி ட்ரூகோலர் 
செயலி காண்பிக்கும்.
எந்த வித புகாரிலும் சிக்காத உண்மையான அழைப்பாளர்களுக்கு பச்சை பேட்ஜ் மற்றும் நீல டிக் வழங்கப்பட்டு இவர்களுக்கு அரசாங்க இலட்சிணையும் வழங்கப்படும். மேலும், செல்போனில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் வகையில் ஒப்பந்தம் 
போடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 14 மார்ச், 2023

ஜெர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்

ஜெர்மனியில், ஊதிய உயர்வு வழங்கக்கோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், விமான 
சேவை முடங்கியது.
இதனால் இரவு நேரம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியம் வழங்கக் கோரி, பெர்லின், பிரிமென், ஹம்பெர்க் விமான நிலைய ஊழியர்கள் வேலை 
நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தலைநகர் பெர்லினில் மட்டும் 200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 45,000 பயணிகள் பாதிப்புக்கு 
உள்ளாகினர்.
மேலும் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு, விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 13 மார்ச், 2023

ஏழு வாரங்களில் சென்னையில் சுமார் ரூ.6 கோடி அபராதத்தல் வசூல்

சென்னையில் கடந்த ஏழு வாரங்களில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டிய வழக்குகளில் சுமார் 6 கோடி ரூபாய் 
அபராதம் வசூல்
அபராதம் செலுத்தாதவர்களின் வாகனம் மட்டுமின்றி அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறக்கப்படும் என போலீசார் தகவல்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 12 மார்ச், 2023

கொரோனா மீண்டும் பரவும்அபாயம்: எதனால் தெரியுமாஆராய்ச்சியில் அதிர்ச்சி

அமெரிக்கா - நியூயார்க் நகரத்தில் எலிகள் கொரானா தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கன் சொசைட்டி பார் மைக்ரோபயாலஜியின் இதழில் வெளியான அறிக்கையில் நியூயார்க் நகரின் எலிகள் 3 விதமான கொரானா தொற்றால் பாதிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 9ம் திகதி வெளியான அறிக்கையில் அமெரிக்க நகரிலுள்ள எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வில் SARS-CoV-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரோன் வகை கொரானா வைரஸ் எலிகளுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் கழிவுநீர் பாதையிலுள்ள எலிகளுக்கு இந்த வகை கொரானா வைரஸ் வர வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
உயிரியலாளர்கள் 79 எலிகளில் 13க்கு நேர்மறை சோதனை செய்ததைக் கண்டறிந்துள்ளனர். எங்கள் கண்டுபிடிப்புகள் எலி மக்கள் தொகையில் SARS-CoV-2 ஐ மேலும் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தைக் 
கூறுகின்றன,
வைரஸ் விலங்குகளில் புழக்கத்தில் உள்ளதா மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனையாக உருவாகிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டத்திலிருக்கிறோம் என மருத்துவர் 
வான் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக, இந்த இடத்தில் எங்கள் ஆராய்ச்சி மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்களில் விலங்குகள் ஒரு பங்கைக் கொண்டிருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது, எனவே மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று
 தெரிவித்துள்ளார்.
எனவே இதன் மூலம் பொதுமக்களுக்கு எலிகள் மூலம் கொரானா தொற்று பரவும் அபாயம் இருக்கிறது என இந்த ஆராய்ச்சி
 தெரிவிக்கிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.