ஞாயிறு, 27 அக்டோபர், 2024

நாட்டில் மீகஹஜதுர பிரதேசத்தில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது துப்பாக்கி பிரயோகம்

 

நாட்டில் சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம்.27-10-2024. இன்று அதிகாலை 
இடம்பெற்றுள்ளது.
 லுனுகம்வெஹரவில் இருந்து சூரியவெவ நோக்கி லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் லொறியை ஓட்டிச் சென்ற போதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 பின்னர், லொறியின் டயர் மீது துப்பாக்கி ரவை பாய்ந்ததையடுத்து லொறி நிறுத்தப்பட்டது.
 இதன்போது, லொறியின் சாரதி சூரியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 லொறியில் 17 மாடுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.