இலங்கையின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் இன்று (24.10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு. சம்பந்தப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பை விரைவாக உறுதிசெய்ய நாங்கள்
பணிபுரிந்தோம்.
அதுமட்டுமின்றி, புலனாய்வு அமைப்புகள் தகவலின் பேரில் விரைவாகச் செயல்பட்டன, அதற்காக நாங்கள் சந்தேகத்திற்குரிய பலரைக் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இலங்கையில் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்று இன்று கூற விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக