சனி, 5 அக்டோபர், 2024

நாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற உலக இருதய நாள் விழிப்புணர்வு நிகழ்வு


உலக இருதய நாள் வருடம் தோறும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை நினைவுகூரும் முகமாக, யாழ் போதனா 
வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் கடந்த 3 ஆம் திகதி சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. 
வடக்கு மாகாணத்தின் பிரதான சிகிச்சை அலகாக செயல்படும் இருதய சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை பிரிவுகள், பல சவால்களுக்கிடையே, மக்களுக்கு தேவையான இருதய நோய் சிகிச்சைகளை சிறப்பாக 
வழங்கி வருகின்றன..
இருப்பினும் கடந்த 13 வருடங்களாக இருதய சிகிச்சையை மேற்கொள்ள பயன்படுத்துகின்ற மிக முக்கிய உபகரணமாகிய Cardiac catheterization laboratory machinery புதிதாக மாற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதற்கு பல மில்லியன்கள் செலவாகும்.
மேற்படி தின நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன், விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது
. உலகளவில் இருதய நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய
 நோய்கள் (Cardiovascular Diseases - CVD) குறித்து மக்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை
 குறைப்பதே 
உலக இருதய நாள் கொண்டாட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
2024 உலக இருதய நாளின் கருப்பொருள், இருதய 
நோய்களைத் தடுப்பதில், கண்டறிவதில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது. இதன் மூலம், இருதய ஆரோக்கியத்தை 
பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படுகின்றன.
இன்றைய உலகில் சுகாதாரத் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் சிகிச்சை முறைகள் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றச் செய்வதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.