இலங்கை பரீட்சைகள் திணைக்களம் எதிர்காலத்தில் தானியங்கி முறையில் பரீட்சை வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறையை பின்பற்றும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர
தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற மோசடிகள் குறையும் என்றும், வினாத்தாள் தயாரிப்பில் தனிநபரின் பங்களிப்பைக் குறைத்து அரை தானியங்கி முறையில் தாள் உருவாக்கம் கணினி மயமாக்கப்படும் என்றும்
அவர் கூறினார்.
இந்த புதிய முறையின் கீழ் மோசடி மற்றும் ஊழலை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களால், வினாத்தாள்கள் தயாரிக்கும் பணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக
இந்தப் புதிய முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர்
கூறினார். பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் பணியை
தனி நபர்களை கொண்டு மேற்கொள்ளும் வரை 100 வீதம் மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க முடியாது எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் பொறிமுறையில் கடந்த காலங்களில் வினாத்தாள்கள் பிரச்சினை இல்லையெனவும், தனிநபர்களின் நம்பிக்கை தொடர்பான பிரச்சினையே இந்த பிரச்சினைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பொதுத் தேர்வுச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்ட விதிகளின்படி, பரீட்சை மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதாகவும், பிடியாணையின்றி
கைது செய்ய அனு
மதிக்கும் பொதுத் தேர்வுச் சட்டம், முற்றிலும் கிரிமினல் குற்றங்களைக் குறிப்பிடும் சட்டம். குறிப்பிடத்தக்கது என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக