இலங்கையில் தேர்தல்களின் பின்னர் புதிய அரசாங்கம் பொறுப்பை ஏற்றாலும் இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை தேர்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நேற்றைய தனது இலங்கை விஜயத்தின் போது மீள்சக்தி திட்டங்கள் போன்ற இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி
திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படுவது அவசியம் என்பதை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெய்சங்கர் அவரது சந்திப்புகளின் போது சூரிய சக்தி திட்டங்கள் இந்தியா இலங்கைக்கு இடையே முன்மொழியப்பட்ட பெட்ரோலிய குழாய் திட்டம் போன்றவை குறித்து விசேடமாக
குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எந்த அரசாங்கம் பொறுப்பேற்றாலும் இந்தியாவின் நிதி உதவியுடனான திட்டங்கள் தொடரவேண்டும் என ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜெய்சங்கர் எதிர்கட்சி தலைவரை சந்தித்தவேளை தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக