வெள்ளி, 14 ஜூன், 2024

நாட்டில் கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்கா டொலருடன் மூன்று பேர் கைது

நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேரை 
நேற்றிரவு (13-06-2024) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத்தாள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான ஆவணங்கள் என்பன பொலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து 13.06.2024.அன்றிரவு  .00 மணியலவில் உந்துருளியில் பயணித்த இருவரை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து பொலீஸார் சோதனையிட்ட போதே இவர்கள் கைது -
செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அமெரிக்க நாணயத்தாளை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகும்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் தடையப்பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.