வியாழன், 13 ஜூன், 2024

நாட்டு bஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

அரசாங்கத்தின் நலன்புரி திட்டங்களின் பலன்களை மக்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க மாகாண ஆளுநர்கள் தலையிட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். 
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலத்திட்டங்களை வினைத்திறனாக்கி அதன் பலன்களை மக்களுக்கு 
வழங்குவதற்கு ஆளுநர்கள் தலையிட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.  
மாகாண ஆளுநர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  
பரம்பரை இலவச காணி பரிமாற்றத் திட்டத்தின் வினைத்திறன், மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை 
அவசரமாக தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது
 நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 
மாகாண மட்ட ஆசிரியர் பற்றாக்குறையை 
விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த, தேசிய பாடசாலைகளுக்கு 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை மாதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 மேலும், ஆங்கில வழி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தற்போது ஓய்வு பெற்ற ஆங்கில வழி ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் கேட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் பணி நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
உயர்கல்வி கற்கும் குறைந்த வருமானம்
 பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 2000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஆலய மண்டபத்தில் நடைபெற உள்ளதாகவும் இங்கு கூறப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.