ஊடகத்துறையில் புகழ்பெற்றவர் ரூபர்ட் முர்டாக். கடந்த ஆண்டு இவர் ஃபாக்ஸ் அண்ட் நியூஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து வெளியேறினார்.
ஊடகத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரூபெர்ட் கடந்த 5- வது முறையாக திருமணம் செய்துக்கொண்டார். இந்த முறை எலினா சுகோவா- வை ரூபெர்ட் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ரூபெர்ட் மற்றும் எலினாவின் திருமணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மொராகா வைன் யார்ட் எஸ்டேட்டில் நடைபெற்றது. ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்ட ரூபெர்ட் முர்டாக்கிற்கு
வயது 93 ஆகும்.
இவர் தற்போது திருமணம் செய்து கொண்ட சுகோவாவிற்கு 67 வயது ஆகிறது. சுகோவா அழகிய ஆங்கில் லெந்த் கவுனை அணிந்து
இருந்தார், மணமகன் முர்டாக் கருப்பு நிறகோட் சூட் அணிந்திருந்தார்.
இவர்கள் திருமண விழாவில் நியூ இங்கிலாந்து
பாட்ரியாட்டின் உரிமையாளரான ராபர்ட் கே கிராஃப்ட் மற்றும் நியூஸ் கார்ப்பரேஷனின் சி.இ.ஓ.-வான ராபர்ட் தாமஸ் கலந்துக் கொண்டனர்.
சுகோவா ஒரு ஓய்வு பெற்ற மாலிக்யுலர் பயாலஜிஸ்ட் ஆவார். இதற்கு முன் சுகோவா பில்லியனர் எனர்ஜி இன்வஸ்டரான சுகோவை
திருமணம் செய்தார்
காதலிப்பதும், கல்யாணம் செய்துக் கொள்வதற்கும் வயது வரம்பே இல்லை என்பதை இந்த ஜோடி நிருப்பித்துள்ளனது. என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக