இலங்கை அகதிகள் இந்திய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டமை தொடர்பிலான விசாரணையின் போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இரண்டு இலங்கை
பிரஜைகளையும் கடவுச்சீட்டுகளை வழங்கிய இந்திய முகவர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியா தர்மலிங்கத்துடன் வெளிநாட்டைச் சேர்ந்த வருணியா திருநாவுக்கரசு மற்றும் சஞ்சிகா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக சிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
"பிரியா ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு, 21 இலங்கைப் பிரஜைகளுக்கு பாஸ்போர்ட் முகவர்களுடன் ஒத்துழைத்து இந்திய கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு வசதி செய்துள்ளதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஜனவரியில் விசாரணை தொடங்கிய போதிலும் இதுவரை, 16 முகவர்கள், 6 போலீசார், பாஸ்போர்ட் சேவா கேந்திர ஊழியர் மற்றும் மூன்று இலங்கை பிரஜைகள் என 26 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக