சனி, 1 ஜூன், 2024

ஐம்பத்தி ஐந்து அடி நீளமுடைய இராட்சத மீன் வியட்நாமில் கரையொதுங்கியுள்ளது

இயற்கை பேரிடர்களை முன்னறிவிப்பதாக கூறப்படும் ஆழ்கடலில் மீன் ஒன்று கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த மீனை பார்த்து வியந்த மக்கள் பலர் அதனை
 புகைப்படம் எடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன.
வியட்நாமில் உள்ள Huế நகருக்கு அருகே கடல் உயிரினம் கரையொதுங்கியுள்ளது. குறித்த மீனானது பாரிய இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன் இவ்வாறு கரையொதுங்குவது வழமையான நிகழ்வு என மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு துருப்பு மீனைப் பார்ப்பது இயற்கை பேரழிவுகளை, குறிப்பாக பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளைக் குறிக்கிறது என்பது மிகவும் பிரபலமான புராணங்களில் ஒன்றாகும் என உள்ளுர் வாசி ஒருவர் 
தெரிவித்துள்ளார்.
 குறித்த மீன் கடலில் உள்ள மிக நீளமான மீன்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன மற்றும் 55 அடி நீளம் மற்றும் 440 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.