ஞாயிறு, 30 ஜூன், 2024

நாட்டில் மொனராகலையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு

நாட்டில் 20 இலட்சம் சொத்தான காணி உறுதிகளை வழங்கும் "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 41,960 பேரில் 600 பேருக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெல்லவாய மகிந்த ராஜபக்ச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு 
இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகூடிய காணி உறுதிப் பத்திரங்களைக் கொண்ட பிரதேச
 செயலகப் பிரிவில் குளங்களை புனரமைப்பதற்காக மேலதிக ஒதுக்கீடாக 25 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 29 ஜூன், 2024

எம் தமிழ் பொது வேட்பாளர் இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் ச
ந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
 முல்லைத்தீவில்இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2005ம் ஆண்டு ஒருதலைமைத்துவத்திற்கு கீழ் செயற்பட்டு அன்று உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது. 
 சில நாடுகள் அந்த செய்தியை ஜனநாயகத்தை பயன்படுத்த தவறியதாகவும் குற்றம் சுமர்த்துகின்றன. யுத்தம் முடிந்தவுடன் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்து அவர் தோல்வி அடைந்தார். 
அதற்கு பிறகு எங்களுக்காக அவர் எதனையும் இதுவரை கதைக்கவில்லை. மைத்திரி, மஹிந்த தேர்தலில் போட்டியிட்ட போது 
இரண்டும் எதிரி, அதில் யாருக்கு ஆதரவளிப்பது என
 தீர்மானித்து மைத்திரிக்கு ஆதரவளித்தோம். அதிலும் தோற்றோம் அடுத்து சஜீத்துக்கு ஆதரவு அளித்தோம் அங்கும் இராஜதந்திரம் 
தோல்வியடைந்தது. 
 நாட்டில் அரகலய போராட்டத்தைத் தொடர்ந்து டலஸ், ரணில் போட்டியிட்டபோது டலஸ்க்கு ஆதரவு 
அளித்தோம் அங்கும் தோல்வியடைந்தோம். மக்களிடத்தில் அபிவிருத்தி தேவையுள்ளது. மேடையில் அதைப்பற்றி நாங்கள் 
கதைக்கவில்லை. உரிமைக்காகவே மக்கள் என்றும் வாக்களிக்கின்றனர்.எங்கள் சுகபோகத்திற்காக இல்லை. 15வருட வரலாற்றில் அநுர,சஜித், ரணில் பேசிய வரலாறு இல்லை. 
ஆனால் இப்பொழுது பேசுகிறார்கள் அவர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நாங்கள் ஏன் பொது வே
ட்பாளரை இறக்கக்கூடாது.13ஐ நடைமுறைப்படுத்துவது
 தொடர்பாக 
ஜெய் சங்கருடன் கதைத்தோம். இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்த சஜித் 13ஐ தருவதாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது தமிழில் கேட்டார் பொலிஸ் அதிகாரமும் இருக்கின்றதா என்று, 
சஜீத் இங்கே இப்படி சொல்ல மரிக்கார் கொழும்பில் இவ்வாறு சொல்லவில்லை என்கிறார். 
 தமிழ் நாட்டில் பொலிஸ், நிதி அதிகாரங்கள் இருக்கு எமக்கு இல்லை. வடக்கு மாகாண சபை முறைமை தான் 13. இதில் மாகாணத்தில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லை. பொது வேட்பாளரை களமிறக்கும் போது வேட்பாளர்கள் இறங்கி வருவார்கள். 
13ஐ விட மேலதிகமாக ஒன்றை தருகின்றோம் என்று சொன்னால் அதைப்பற்றி யோசிப்போம் ஏற்கனவே உள்ள 13 ஐ தருவோம் என்று 
சொல்கிறார்கள். 34வருடமாக பொலீஸ்
 அதிகாரம் இல்லை
 காணி அதிகாரம் இல்லை மத்திய அரசாங்கம் காணிகளை பிடிக்கிறது. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியபோது அவரை ஒருவரும் கணக்கில் எடுக்கவில்லை. 
குமார் பொன்னம்பலம் ஒரு இலட்சத்திற்கு மேல் கிடைத்தது. சிங்கள மக்கள் கூட வாக்களிக்கவுள்ளனர். எனவே, வரலாறு தந்திருக்கிற சந்தர்ப்பத்தை தவறாது இறுக்கியாக பிடித்து இந்த மண்ணில் நாம் 
யார் என்பதை காட்டலாம் ரணிலுக்கு மஹிந்த ஆதரவு, சஜித் இறங்கி போனால் அநுரவை நம்ப தயாரில்லை எமக்குரிய கருவி தமிழ் 
பொதுவேட்பாளர். 
 தேர்தல் விஞ்ஞானபத்தில் எமக்கான தீர்வை வெளியிட்டால் சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை என்றால் இந்திய, அமெரிக்க,பிரித்தானியா தூதுவருக்கு முன்பாக மறைமுகமாக தீர்வை எழுதித் தாருங்கள் எனவும் சிறிதரன் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 28 ஜூன், 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் ஆளுநர் பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்துள்ளதால், அதற்கான நிதியொதுக்கீடு உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கரிசனையுடன் நடந்து கொள்வதாக ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
 வடமேல் மாகாணத்தில் 1671 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) குருநாகல் நகர மண்டபத்தில், 
ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற
 போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் , சிந்தக அமல் மாயாதுன்ன , அசங்க நவரத்ன, சுமித் உடுகும்புற, அலி சப்ரி ரஹீம் மற்றும் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்தின, மாகாண கல்வி
 அமைச்சு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் 
கலந்து கொண்டனர்
 இங்கு தொடர்ந்தும் பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் மேலும் கூறியதாவது, இலங்கையில் தற்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் கூட கடுமையான தட்டுப்பாடு நிலவியது. மின்சாரம் இன்றி
 மக்கள் மணிக்கணக்கில் அவதிப்பட்டார்கள். ஆனால் இன்று
 அந்த நிலை மாறியுள்ளது. 
அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், தட்டுப்பாடு இன்றி தாராளமாக கிடைக்கின்றது. வரிசை யுகங்கள் மறைந்து நாடு ஓரளவுக்கு சுபீட்சமடைந்துள்ளது மறுபுறத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள சுபீட்ச நிலை காரணமாக தொழில்வாய்ப்புகளை
 வழங்குவதற்கான 
நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக தற்போது தொழில் வரிசைகள் உருவாகியுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே இன்று உங்களுக்கு ஆசிரியர் நியமனம்
 வழங்கப்பட்டுள்ளது. 
கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக நாங்கள் நான்காயிரத்து இருநூறு பேரளவானோருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 
தலைமையிலான 
அரசாங்கத்தினால் இன்னும் சிறிது காலத்திற்குள் தொழில் வரிசைகளும் இல்லாதொழிக்கப்படும். தகுதி வாய்ந்த அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதன் இன்னொரு கட்டமாக 
வடமேல் மாகாணத்தின் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இன்னும் ஆயிரத்து ஐநூறு பேரளவிலானோருக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் வழங்க உள்ளோம். 
 அதற்கான வயது எல்லையை முப்பத்தி ஐந்தில் இருந்து நாற்பது வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டின் எதிர்காலம் கல்வி கற்ற சமூகத்தின் கைகளில் தங்கியுள்ளது என்பது 
அனைவரும் அறிந்த உண்மை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வியின் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்ந்துள்ளார். அதன் காரணமாக கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு தாராளமாக
 நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றார். அவரின் கல்விக் கொள்கையை அடியொற்றி, வடமேல் மாகாணத்தின் கல்வித் தரத்தை 
மேம்படுத்துவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
 வடமேல் மாகாணத்தை , நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் முன்னணி மாகாணமாக முன்னேற்றுவதே எமது இலக்காகும். அதற்கான முக்கிய பொறுப்பு, இன்று பட்டதாரி ஆசிரியர்களாக
 நியமனம் பெறும் உங்கள் கைகளில் தங்கியுள்ளது. எதிர்கால சந்ததியினரை , நாட்டின் எதிர்கால தலைவர்களை தயார்படுத்தும் பாரிய
 பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதனை உரிய 
முறையில் மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் செயற்பட வேண்டும் என்றும் ஆளுநர் நஸீர் அஹமட் வலியுறுத்தினார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 27 ஜூன், 2024

நாட்டில் ஜூலையில் எண்ணாயிரம் பேருக்கு நிரந்தர நியமனம்

நாட்டில் உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு 
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து பிரதமரும், பொதுநிர்வாக, 
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே அனுமதி 
வழங்கப்பட்டுள்ளது.
 இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் பணியாற்றும் 8,435 பேர் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர்.
 நியமனக் கடிதங்களை விரைவாக வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. அதன்படி, அந்த நியமனக் கடிதங்கள் அனைவருக்கும் ஜூலை மாதத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 26 ஜூன், 2024

நாட்டில் மூடப்பட்ட பத்ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் யாருடைய தவறு

இலங்கையில் சம்பள முரண்பாடுகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று(26.06) முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்தது 10,026 அரச பாடசாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைகள், பரீட்சை வினாத்தாள் திருத்த கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
 தொடர் வேலைநிறுத்தத்தால் பள்ளிக்கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டிய அவர், இதனால் 10 ஆயிரம் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை போராட்டத்தின்போதான அரசின் மிலேச்சத்தனமான அடக்குமுறைகளை கண்டித்து நாளைய தினம் (27.06) சுகவீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 25 ஜூன், 2024

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
இந்த உரையில், நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் விளக்கமளிப்பார்.
அத்துடன், சமகால அரசியல் தொடர்பாகவும் அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





திங்கள், 24 ஜூன், 2024

பணத்தாள்களை யாழில் காலால் மிதித்த வர்த்தகரின் வாக்குமூலம்

இலங்கையில் புழக்கத்தில் உள்ள ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை காலில் போட்டு மிதித்த சம்பவம் தொடர்பில் வாமதேவா தியாகேந்திரனிடம் யாழ்ப்பாண பொலிஸார் வாக்கு மூலத்தை 
பதிவு செய்துள்ளனர். தியாகி மகளின் 40ஆவது
 பிறந்த தினத்தினை முன்னிட்டு, கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள  அலுவலகத்தின் முன்பாக வைத்து  வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். 
அதன் போது, ஊடகம் ஒன்றிற்கு தியாகேந்திரன் கருத்து தெரிவிக்கும் போது , 
இன்றைக்கு நிவாரணம் பெறுவதற்கு 
தான் எதிர்பார்த்த
 மக்கள் வரவில்லை எனக் கூறி , தனது சட்டை பையில் இருந்த பெருமளவான ஐந்து ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து நிலத்தில் போட்டு சப்பாத்து காலால் மிதித்த படி நின்று கருத்து தெரிவித்தார். 
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து பெருமளவானோர் கடும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன் கண்டனங்களையும் பதிவு செய்தனர். 
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , தியாகேந்திரனை நேற்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைத்து வாக்குமூலத்தினை பெற்றனர். 
பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 23 ஜூன், 2024

ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்: உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று படகையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை 
கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணைக்கு 
பின்னர்; யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் படகுடன் ஒப்படைக்கப்பட்டனர்.
 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து நேற்று 507 விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான 
மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன் பிடிக்க
 கடலுக்கு சென்றனர். 
 மீனவர்கள் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி
 மீன் பிடித்ததாக ஜஸ்டின், ரெயிமென்ட் மற்றும் கெரின் ஆகியோருக்கு சொந்தமான 3 மீன்பிடி விசைப் படைகளையும் அதில் இருந்த சுரேஷ் பாபு, காளிதாஸ், ரூபின், கண்ணன், நாகராஜ் உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு 
அழைத்துச் சென்று
 அவர்களிடம் முதல் கட்ட விசாரணை செய்து 
பின்னர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒப்படைக்கப்பட்டனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்களுக்கு
 மலேரியா மற்றும் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் மீனவர்கள் அனைவரும் தற்போது யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு 
வருகின்றனர். மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில்
 ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில்
 அடைக்கப்படுவார்கள் என
 மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 60 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒரு வாரம் காலம் மட்டும் முடிவடைந்த
 நிலையில் இலங்கை கடற்படையினர் 22 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறை பிடித்து சென்றது ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை
 கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
வயிற்று பிழைப்பிற்காக மீன்பிடிக்கச் சென்ற 
மீனவர்களை இலங்கை கடற்படை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 22 ஜூன், 2024

யாழில் காலால் பணத்தாள்களை மிதித்தவருக்கு நாளை விசாரணை! நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்

யாழ். நகர்ப்பகுதியில் பலரும் பார்த்திருக்க பணத்தாள்களை காலால் மிதித்துவிட்டு வெளிநாடு சென்றிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர், நாடு திரும்பியிருந்த நிலையில் நேற்று 
 யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் மீது எதிர்வரும். திங்கட்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளதாக
 தெரியவருகிறது.
குறித்த தொழிலதிபர் தனது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு அண்மையில் உதவிகள் வழங்குவதாக அறிவித்திருந்தார் அன்றைய தினம் இராணுவம் மற்றும் பொலிசார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டும் சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த
 முடியவில்லை .
குறித்த சம்பவம் பற்றி கேள்வி எழுப்பியிருந்த ஊடகத்திடம் இந்த நிகழ்வு குறித்து விளக்கமளித்துக் கொண்டிருந்த தொழிலதிபர், ஜனாதிபதி என்றாலும் என்னை தேடித்தான் வரவேண்டும்- 
யாழ்ப்பாணத்தை 
என்னிடம் தாருங்கள், எதிர்வரும் 24 ஆம் திகதி என்னை சந்திக்க வருகிறார். நானாக எங்கும் போகமாட்டேன் என்னை அழைத்தால் தான் போவேன்- என்று தனது கருத்தை பதிவு செய்துகொண்டிருந்தார்.
அவர் நினைத்த அவளவு மக்களுக்கு கொடுக்க 
முடியவில்லை இதனால் கவலையாக உள்ளது என்றார் பின்னர் 
திடீரென தனது 
சட்டைப்பையில் இருந்து லட்சக்கணக்கான காசை 
எடுத்து நிலத்தில் போட்டு 
தன் காலால் மதித்தபடி நின்றார். இதை பார்த்த அனைவரும் சற்று நேரம் அதிர்ச்சியடைந்தனர்.
குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவரின் செயற்பாட்டுக்கு 
எதிர்ப்புக்கள் வலுத்தன.
அநாகரிகமான செயற்பாடு என்றும் நாணயத்தை அவமதிப்பு செய்ததற்கும் தண்டிக்கப்படவேண்டும் என பலரும் கோரிக்கை
 விடுத்துவந்தனர்.
குறித்த நபர் சம்பவம் நடைபெற்று இரு நாட்கள் கழித்து வெளிநாட்டுக்கு பயணமானார். சம்பவம் நடந்து இரண்டாவது நாள் , தான் குறித்த பணியில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுகிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டுச் விட்டுச் சென்றார்.
குறித்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தும் உடனடியாக குறித்த நபர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சட்டம் தன் கடமையை செய்யாமல் இருப்பது ஏன் எனவும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில், உயர்மட்ட அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த நபர் மீது யாழ்ப்பாண பொலிசார் நடவடிக்கையை தற்போது ஆரம்பித்துள்ளனர். அவர் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும். திங்கட்கிழமை மீள யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் எனத்தெரியவருகிறது.
 இவருக்கு இதுதான் தக்கதண்டனை என்பது குறிப்பிடத்தக்கது .




 

வெள்ளி, 21 ஜூன், 2024

இலங்கையில் எந்த அரசாங்கம் பொறுப்பேற்றாலும் இந்தியாவின் திட்டங்கள் தொடரவேண்டும் ஜெய்சங்கர்

 

இலங்கையில் தேர்தல்களின் பின்னர் புதிய அரசாங்கம் பொறுப்பை ஏற்றாலும் இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 இலங்கை தேர்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நேற்றைய தனது இலங்கை விஜயத்தின் போது மீள்சக்தி திட்டங்கள் போன்ற இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி 
திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படுவது அவசியம் என்பதை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
 ஜெய்சங்கர் அவரது சந்திப்புகளின் போது சூரிய சக்தி திட்டங்கள் இந்தியா இலங்கைக்கு இடையே முன்மொழியப்பட்ட பெட்ரோலிய குழாய் திட்டம் போன்றவை குறித்து விசேடமாக 
குறிப்பிட்டுள்ளார்.
 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எந்த அரசாங்கம் பொறுப்பேற்றாலும் இந்தியாவின் நிதி உதவியுடனான திட்டங்கள் தொடரவேண்டும் என ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
 மீண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜெய்சங்கர் எதிர்கட்சி தலைவரை சந்தித்தவேளை தெரிவித்துள்ளார்.
   என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 


வியாழன், 20 ஜூன், 2024

நாட்டில் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி கனிய மணல் அகழ்வு குறித்து எவ்வித உத்தரவும் இல்லை

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.காற்றாலை மின் உற்பத்தி 
மற்றும் கனிய மண் அகழ்வு குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
அரசியல் நலன் சார்ந்தே குறித்த விஜயம் அமைந்துள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் 
தெரிவித்தார்.
 மன்னாரில் உள்ள அலுவலகத்தில்.20-06-2024. இன்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
 இந்திய பிரதமரின் இலங்கை வருகையை ஒட்டி தனது அரசியல் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளும் விவகாரத்திற்காக 
மன்னாரிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
 காற்றாலை உற்பத்தியை இந்தியாவிற்கு 
வழங்குகின்ற விவகாரம் தொடர்பாகவும் தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான தரை வழி பாதை அமைப்பது சம்மந்தமாகவும் உரையாடிச் சென்றுள்ளார். 
 அவருடைய வருகை அரசியல் ரீதியாக நிறைவேறி இருந்தாலும் மன்னார் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைத்ததாக 
தெரியவில்லை. 
 இங்குள்ள காணி விடுவிப்பு குறித்து எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. கலந்து கொண்டிருந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இவ்விடயத்தை வலிமையாக 
வலியுறுத்தவும் இல்லை.அவர்களும் ஆளும் கட்சி போல் ஜனாதிபதியின் நிகழ்வில் ஆசுவாசமாக கலந்து கொண்டு சென்றுள்ளனர். மன்னாரில் இனி புதிதாக குடியேறுவதற்கு எவ்வித 
காணியும் இல்லை. 
 வன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் காடுகளை பாதுகாத்தல் ,விலங்குகளை பாதுகாத்தல், கரையோரத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் சகல இடங்களையும் வர்த்த மணிக்கு
 உட்படுத்தப்பட்டு, மன்னாரில் மக்கள் குடியேறாத வகையில் ஒரு துண்டு நிலம் இல்லாத நிலையில் உத்தரவாதத்தை அரசு மீறி விட்டது.என தெரிவித்தார்.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 19 ஜூன், 2024

நாட்டில் தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் கஜேந்திரன் நேரில் ஆராய்வு

நாட்டில் புதிய மகசீன் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்
 செல்வராசா கஜேந்திரன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் உரையாடினார்.
குறிப்பாக, புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று 15 வருடங்களாக அரசியல் கைதியாக கொடுஞ்சிறையில் விளக்கமறியலில் தடுத்து
 வைக்கப்பட்டுருக்கும் கிருபாகரனுடன் (மொறிஸ்) தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுத்து வருகின்ற நெருக்கடிகள் தொடர்பில்
 கலந்துரையாடி இருந்தார்.
அதன்பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு 15ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கிருபாகரனுடன் 
உரையாடினேன்.
குறிப்பாக கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமைகளே நீடிக்கின்றன.
விசேடமாக,ஒரு வழக்கிற்கு மேலதிகமாக பல வழக்குகளை அவர்கள் மீது தொடுத்து மரணிக்கும் வரையில் அவர்களை சிறைக்குள் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இரட்டை ஆயுள்காலத்தினை சிறையினுள் கழித்துள்ள போதும் அவர்களை 
விடுவிக்காது மேலதிக வழக்குகளை தொடுக்கின்ற நிலைமைகள் துரதிஷ்டமானது.
சர்வதேச சட்டங்களையும், விதிமுறைகளையும் மீறும் வகையிலான பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையும், ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்தியுள்ளபோதும் இலங்கை அரசாங்கம் அதனை கருத்தில் கொள்ளாத நிலைமை
 தொடர்கின்றது. இதனை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள 
வேண்டும் என்றார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 18 ஜூன், 2024

உடலில் பச்சை குத்தி கொள்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

உங்கள்  உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இன்றைய கால இளைஞர்களிடையே, உடலில் பச்சை குத்திக் கொள்ளும் ஆர்வம் 
அதிகரித்து வருகிறது.
பச்சை குத்திக்கொள்வது (tattoo) உங்கள் தோலில் நிரந்தரமாக இருக்கும். ஆனால், ஒரு நபர் எவ்வளவு அதிகமாக மை பூசப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை
 உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் ஒரு புதிய 
ஆராய்ச்சி கூறுகிறது.
உடலில் பச்சை குத்திக்கொள்வதால், லிம்போமா (lymphoma) என்ற இரத்தப் புற்றுநோய் உருவாகும் அபாயம் 21 சதவீதம் வரை இருப்பதாக சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லிம்போமா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2,938 பேர் உட்பட மொத்தம் 11,905 பேர் ஆய்வு செய்யப்பட்டனர்.
 பச்சை குத்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, ​​​​புற்றுநோய் செல்கள் வேகமாக வளரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது




திங்கள், 17 ஜூன், 2024

பிரபலமான தொலை தொடர்பு நிறுவனமான லைக்காவுக்கு பிரித்தானியாவில் பாரிய நெருக்கடி

பிரித்தானியாவின் பிரபலமான தொலை தொடர்பு நிறுவனமான Lycomobile இன் கடன் மற்றும் கணக்கு வழக்குகள் காரணமாக கணக்காய்வாளர்கள் கையொப்பமிட மறுப்பு தெரிவித்துள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஏறக்குறைய  £105 மில்லியனுக்கும் தொடர்புடைய கணக்குகள் தொடர்பில் இந்நிறுவனம் இங்கிலாந்து வரி அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 
அத்துடன் மோசடி செய்ததற்காக லைகாமொபைல் மீது பிரெஞ்சு அதிகாரிகளால் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான விரிவான விளக்கங்கள் பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு சொந்தமான குறித்த நிறுவனத்தால் கடந்த நிதியாண்டில் 25 மில்லியன் 
பவுண்ட்ஸ் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் 
சுட்டிக்காட்டியுள்ளனர். 
இந்த குற்றச்சாட்டு லைகா மொபைலுக்கான ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 16 ஜூன், 2024

நாட்டில் காணி உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும் ரணில்

மரபுரிமை” வேலைத்திட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
 தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த சொத்துக்களின் பெறுமதி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்ட “மரபுரிமை” 
வேலைத் திட்டத்தினால் மீண்டும் உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மன்னார் மாவட்ட மக்களுக்கு 20 லட்சம் இலவச காணி பத்திரம் "பரம்பரை" வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி 
உறுதிகள் வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட மக்களுக்கு 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், 442 காணி உறுதிப்பத்திரங்கள் இன்று ஜனாதிபதியினால் அடையாளமாக வழங்கி
 வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கான பணத்தை வழங்குவது தொடர்பான காசோலைகளையும் ஜனாதிபதி  இதன்போது 
வழங்கி வைத்தார்.
கடந்த மோசமான காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் அழிவடைந்த விவசாய பயிர்களுக்கு விவசாய காப்புறுதி நட்டஈடு வழங்கப்பட்டதுடன் அப்பகுதி மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நினைவுப் பரிசையும்
 வழங்கி வைத்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், கடந்த மாதம் வடக்கிற்கு வந்த போது மன்னாருக்கு வருவேன் என உறுதியளித்தேன். மன்னாரின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் சுமார் 90,000 குடும்பங்கள் காணி உரிமை கோருகின்றனர். 45,000 குடும்பங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி பத்திரப்பதிவு வழங்கும் திறன் கொண்டது. ஏனைய 45,000 குடும்பங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மற்றும் வடமாகாண சபைக்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.
1935ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையில் பெதுருதுடுவ தொடக்கம் தௌந்தர துடுவ வரையிலான சகல சமூகங்களுக்கும் காணி உரிமமாக மட்டுமே வழங்கப்பட்டது. எனவே, இந்த உரிமங்கள் எப்போது
 வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம். உரிமம் பெற்ற நிலங்களுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகள் விவசாயம் செய்தாலும் அவர்களுக்கு நில உரிமை கிடைக்கவில்லை.
சில விவசாயிகள் 85 ஆண்டுகளாக நிலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்டில் காணி உரிமை இல்லாத குடும்பங்கள் சுமார் 20 இலட்சம் உள்ளன. உறுமய அவர்கள் சார்பாக இலவச காணி உரிமைத் திட்டத்தை நடை முறைப்படுத்தியது.
கோவிட் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டது சாமானியர்களே. நாடு திவாலான நிலையில் இருந்து மீண்டு வரும்போது அதன் பலன்களை மக்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக உறுமய வேலைத்திட்டம் மீண்டும் மக்களின் சொத்துக்களை பெருக்கி வருகிறது.
ஆசியாவில் எந்த நாட்டிலும் மக்களுக்கு இலவச நில உரிமை வழங்கப்படவில்லை. எனவே உறுமய வேலைத்திட்டத்தை நாட்டில் ஒரு புரட்சியாக அறிமுகப்படுத்த முடியும்.
மேலும், மேல் மாகாணத்தில் உள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமையை
 வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் பொருளாதார சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் முடிந்த அனைத்தையும் 
செய்து வருகிறது.
அப்போது யுத்தம் காரணமாக வடக்கு மக்கள் வீடு, உடைமை, காணிகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வாழ்நாளில் முதல் தடவையாக இலவச காணி உரிமையுடன் சாதாரணமாக வாழும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது. உங்களுக்குக் கிடைக்கும் 
இந்த நிலத்தை 
பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அப்போது நீங்களும் நாடும் பொருளாதார ரீதியாக முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்
மக்களின் காணி உரிமைப் பிரச்சனையை தீர்க்க இங்கு வந்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையைப் பெறுவது 
ஒவ்வொரு குடிமகனின் கனவு என்று சொல்ல வேண்டும். இனிமேல் அந்த கனவு நனவாகும்.
ஜனாதிபதி தெளிவான பார்வையுடன் அனைத்து திட்டங்களையும் தயாரிக்கிறார். இந்த நாட்டின் உடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே.
 அரசியல் இலக்குகளை தவிர்த்து நாட்டு மக்களின் நலனுக்காக ஜனாதிபதி செயற்படுகின்றார். எனவே, நாம் அவரை மதிக்க வேண்டும். அதற்காக அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்” எனத்
 தெரிவித்துள்ளார். 
இதனைத் தொடர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கருத்து வெளியிட்டிருந்தார். 
நாட்டை இருண்ட யுகத்தில் இருந்து காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களின் காணிப் பிரச்சனைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண செயற்பட்டு வருகின்றார். பிரச்சினைகளை பேசி தீர்வு காணக்கூடிய ஜனாதிபதி ஒருவர் எமக்கு
 கிடைத்துள்ளார்.
மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக இன்று இங்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்படுவது
 அவசியமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து 60 மில்லியன் ரூபா கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு கேட்டுக் 
கொள்கின்றோம்.
அத்துடன் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் மன்னார் மாவட்டத்தில் பல காணிப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்று இப்பிரதேசத்திற்கு வருகை தந்து அது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றோம். எனக்கூறியுள்ளனர்   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 15 ஜூன், 2024

நாட்டில் வாகன இறகுமதி தொடர்பில் விசேட குழுவொன்று நியமனம்

நாட்டில் எதிர்காலத்தில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் நிதி விவகாரங்களில் வழிகாட்டியாக மாறியுள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் பல நிதி விடயங்கள் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்படும் 
என குறிப்பிட்டார்.  
இதன்படி, வாகன இறக்குமதியானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக அரசாங்கம் வீதி வரைபடத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.  
சாலை வரைபடத்தின்படி, பொது போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் இருந்து குறிப்பிட்ட முறையின் கீழ் ஒரு வரிசையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
 அந்த குறிப்பிட்ட திட்டத்தை தயாரிப்பதற்காக, நிதி அமைச்சகத்தின் வர்த்தக மற்றும் கொள்கைத் துறை, மோட்டார் போக்குவரத்துத் துறை, மத்திய வங்கி, புதிய மற்றும் பயன்படுத்திய கார்களை இறக்குமதி
 செய்யும் இரு குழுக்களின் பிரதிநிதிகள், வாகன 
சங்கத்தின் பிரதிநிதிகள் அசெம்பிளர்கள், கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு போன்றவற்றில் பாதிக்கப்பட்ட அனைத்து
 குழுக்களையும் உள்ளடக்கி இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்
 அமைச்சர் கூறினார்.  
மேலும், இந்த வாகனங்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது, ​​பொது மக்களின் போக்குவரத்துத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும்
 கார்கள் மற்றும் அதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகளை அமைச்சர் தளர்த்தினார். சொகுசு 
வாகனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 14 ஜூன், 2024

நாட்டில் கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்கா டொலருடன் மூன்று பேர் கைது

நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேரை 
நேற்றிரவு (13-06-2024) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத்தாள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான ஆவணங்கள் என்பன பொலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து 13.06.2024.அன்றிரவு  .00 மணியலவில் உந்துருளியில் பயணித்த இருவரை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து பொலீஸார் சோதனையிட்ட போதே இவர்கள் கைது -
செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அமெரிக்க நாணயத்தாளை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகும்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் தடையப்பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வியாழன், 13 ஜூன், 2024

நாட்டு bஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

அரசாங்கத்தின் நலன்புரி திட்டங்களின் பலன்களை மக்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க மாகாண ஆளுநர்கள் தலையிட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். 
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலத்திட்டங்களை வினைத்திறனாக்கி அதன் பலன்களை மக்களுக்கு 
வழங்குவதற்கு ஆளுநர்கள் தலையிட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.  
மாகாண ஆளுநர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  
பரம்பரை இலவச காணி பரிமாற்றத் திட்டத்தின் வினைத்திறன், மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை 
அவசரமாக தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது
 நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 
மாகாண மட்ட ஆசிரியர் பற்றாக்குறையை 
விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த, தேசிய பாடசாலைகளுக்கு 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை மாதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 மேலும், ஆங்கில வழி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தற்போது ஓய்வு பெற்ற ஆங்கில வழி ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் கேட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் பணி நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
உயர்கல்வி கற்கும் குறைந்த வருமானம்
 பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 2000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஆலய மண்டபத்தில் நடைபெற உள்ளதாகவும் இங்கு கூறப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 12 ஜூன், 2024

நாட்டில் வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

நாட்டில் சுற்றுலா துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக 
அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்படி, இலங்கைக்கான மோட்டார் வாகனங்களை 
இறக்குமதி செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 ஆனால் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால்
 முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம், 250 சிறிய பேருந்துகள் மற்றும் 75 வேன்களை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
 விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குமுறைகள் 
மற்றும் மேற்படி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் பாராளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 11 ஜூன், 2024

அவுஸ்திரேலியா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் பக்ரீரியாவினால் கையை இழந்துள்ளார்

தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பக்ரீரியா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளார். வலி தாங்க 
முடியாதவாறு கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
74 வயதான கார்மெல் ரொத்ரிகு தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.
மெல்பேர்னில் வசித்த அவர்களுடன் சில மாதங்கள் தங்கியிருந்த அவள் திடீரென்று இப்படி நோய்வாய்ப்பட்டாள். கார்மெலின் இடது கை வீங்கி நீல நிறமாக மாறியிருந்த நிலையில், அவளுடைய மகள் தன் தாயை முதலில் குடும்ப வைத்தியரிடம் அழைத்துச் சென்றாள்.
எனினும், நிலைமை தீவிரமனதால், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு குடும்ப வைத்தியர் 
அறிவுறுத்தியிருந்தார்.
அவரது உயிரைக் காப்பாற்ற, வலியை ஏற்படுத்திய 
இடது கையை துண்டிக்க வேண்டும் என்று வைத்தியர்கள்
 தெரிவித்தனர். அவரது இடது கை துண்டிக்கப்பட்ட பிறகு, வைத்திய பரிசோதனையில் அவருக்கு அரிதான பற்றீரியா தொற்று இருப்பது தெரியவந்தது.
இது தோலுக்கு அடியில் உள்ள செல்கள், சிறிய இரத்த நாளங்கள், கொழுப்பு ஆகியவை அழிந்து, தோல் மற்றும் சதையை கரைக்கும் நிலைமையை ஏற்படுத்தும் பற்றீரியா என வைத்தியர்கள் 
தெரிவிக்கின்றனர்.
நுளம்புகள் மற்றும் விலங்குகளால் பரவும் இந்த பக்ரீரியா நிலை புருலி அல்சர் என்று அழைக்கப்படுவதாக அவுஸ்திரேலிய வைத்தியர்கள் 
கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, அந்நாட்டின் பல மாநிலங்களில் இந்த தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்ட கார்மெல் உயிருக்கு போராடி வரும் நிலையில், மெல்போர்னில் உள்ள சன்ஷைன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கையை அகற்றியதால் ஏற்பட்ட கடுமையான வலியை உணராமல் இருக்க, மயக்க நிலையில் அவரை வைக்க வைத்தியர்கள் நடவடிக்கை
 எடுத்துள்ளனர்.
கார்மெல் ரொத்ரிகுவின் சிகிச்சைக்கு 200,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது, எனவே அதற்காக நிதியம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 என்பது குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 10 ஜூன், 2024

நாட்டில் கைவிடப்பட்ட ரயில்வே சாரதிகளின் வேலை நிறுத்த போராட்டம்

நாட்டில்போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள்
 தீர்மானித்துள்ளன.
 போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
 இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, குறித்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 9 ஜூன், 2024

இலங்கையில் வாகன இறக்குமதிக்கான தடையால் ஏற்பட்ட மாற்றம்

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  
உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதி
 அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில்  38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 
அத்துடன் இந்த சந்திப்பின்போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டதுடன் உள்ளூர் வாகன 
உற்பத்தியாளர்கள் இறக்குமதி கட்டுப்பாடுகளை
 நீக்குவதில் தங்கள் உள்ளூர் சட்டசபை வணிகங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  
இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை இலங்கையில் வாகன உற்பத்திக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது என அவர்கள்
 தெரிவித்துள்ளனர். 
எவ்வாறாயினும், உள்ளூர் வர்த்தகங்களை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 5 ஜூன், 2024

யாழில் பல வருடங்களின் பின்னர் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணியில் கண்ணிவெடி

யாழ்  தெல்லிப்பளையில்பல வருடங்களாக இராணுவம் ஆக்கிரமித்திருந்த தமிழர்களுக்குச் சொந்தமான இருநூறு ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் காணி 
உரிமையாளர்கள் அதற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 குறித்த நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியே ஜனாதிபதியின் வடக்குப் பிரதிநிதி 
இந்தத் தடையை
 விதித்துள்ளார். மார்ச் 22ஆம் திகதி இராணுவத்தினால், தெல்லிப்பளையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணியில் 55,000 சதுர 
அடி பரப்பளவில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக மே 30ஆம் திகதி முதல் ஜூன் 10ஆம் திகதி வரை வடமாகாண ஆளுநர் அலுவலகம் முழு காணிக்குள் நுழைய பொது மக்களுக்கு 
தடை விதித்துள்ளது.
 காணி விடுவிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களின் பின்னர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் மே 7ஆம் திகதி பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து, காணிகளுக்குள் செல்லும் வகையில் பாதைகளை 
திறக்குமாறு கோரிக்கை முன்வைத்தார். காணிகள் விடுவிக்கப்படும்போது, கண்ணிவெடிகள் அற்ற வலயமாக 
அந்த பிரதேசத்தை
 பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தியிருந்தார்களா? என்பதை வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவிக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் பூநகரி மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடிகளை 
அகற்றும் பணிகள் மேலும் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
 காணி விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், கண்ணிவெடிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தெல்லிப்பளை, ஒட்டகப்புலம் காணிகளின் தொழில்நுட்ப பரிசோதனை ஏற்கனவே 
மாவட்ட செயலகத்தினால் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள்
 தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உறுமய திட்டத்தின் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியுடன் இணைந்ததாக பலாலி விமானப்படை தளத்தில் மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில், வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை ஒட்டகப்புலம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 234.8 ஏக்கர் காணியை 
இராணுவத்திடம் இருந்து விடுவித்திருந்தார். யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை அன்றைய தினம் ஜனாதிபதியிடம் 
கையளித்ததோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தார்.
 இதற்கமைய வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி 
பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டதோடு, குறித்த காணி அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்துடன் இணைந்து விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் என 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. வசாவிளான் கிழக்கு (ஜே/244), வசாவிளான் மேற்கு (ஜே/245), பலாலி வடக்கு (ஜே/254), பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி தெற்கு (ஜே/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 234.8 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.
 இங்கு வசிக்கும் 327 குடும்பங்கள் தமது காணி உரிமையை கோரி பதிவு செய்துள்ளதாகவும் அவர்களில் 171 குடும்பங்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி துப்புரவு பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் வடமாகாண சபையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 உலக கண்ணிவெடி தின தேசிய நிகழ்வு 2028இல் இலங்கை கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக மாறுமென, கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரி 
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற உலக உலக கண்ணிவெடி தின தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு நகர அபிவிருத்தி 
மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 23 சதுர 
கிலோமீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆனால் அந்த பகுதிகள் என்ன என்பது குறித்து 
விளக்கமளிக்கவில்லை.
 கண்ணிவெடிகள் இருந்த முழு நிலத்திலிருந்து 1340.87 கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் 2,492,081 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, 2030 ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையை கண்ணிவெடி 
அற்ற நாடாக 
பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்ததாகவும், எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான வகையில் 
கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய 
குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் 
பி.எஸ்.எம். சாள்ஸ் குறிப்பிட்டார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.