திங்கள், 30 மே, 2022

நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களில் பணிபுரியும்ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

நாட்டில் தனியார் துறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களில் இருந்து எட்டு மாதங்களாக பெறப்பட்ட மின்சாரத்திற்காக செலுத்த வேண்டிய 23 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மின்சார சபை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்த தவறியதன் காரணமாக சிறிய மின் உற்பத்தி நிலையங்கள்,...

ஞாயிறு, 29 மே, 2022

வானில் அரிய காட்சி ஒன்று தோன்றவுள்ளதாக யாழ் பல்கலைகழகம் தெரிவிப்பு

நாட்டில்.29-05-2022. இன்று வானில் அரிய காட்சி ஒன்று தோன்றவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார்.செவ்வாய் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றை ஒன்று சந்திப்பது போன்ற காட்சி வானில் 29-05-2022.இன்று தோன்றவுள்ளது.இதனை மக்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி...

வெள்ளி, 27 மே, 2022

இலங்கையில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பின் தகவல்

இலங்கைப்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தன. இந்த செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

வியாழன், 26 மே, 2022

கல்முனையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம்;

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.நாடு பூராகவும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த திங்கட்கிழமை(23) ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றிலே...

நாட்டில் விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களுடம் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும், இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும்...

புதன், 25 மே, 2022

நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக பதவியேற்றார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார்.முன்னதாக நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.எனினும் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் சார்பிலிருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் ரணில் பதவியேற்றுள்ளார்.நாட்டில்...

ஞாயிறு, 22 மே, 2022

மரத்தடிசந்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைகலப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது

திருகோணமலை – மரத்தடிசந்தி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கைகலப்பு சம்பவம் 21-05-2022.அன்று இடம்பெற்றுள்ளது.இதன் போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...

சனி, 21 மே, 2022

இலங்கைக்கு ரணிலின் வருகையால் ஏற்படவுள்ள மாற்றம் அமெரிக்கா தகவல்

இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்களுடன் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகள் குறைவடைந்து பத்திரங்களின் பெறுமதி உயரும் என அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே.பி.மோர்கன் தெரிவித்துள்ளது.அரசியல் ஸ்திரத்தன்மை தற்போதைய குறைந்த மதிப்பை விட பத்திரங்களின் மதிப்பு உயர வழிவகுக்கும் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.இது சர்வதேச நாணய நிதியத்துடனான...

இலங்கையில் இணையத்தில் வைரல் ஆகும் இளைஞரின் பதிவு

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியான நிலையே உள்லூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள்வரை தற்போது பேசுபொருளாகியுள்ளது.மக்கள் அன்றாடம் நீண்டவரிசையின் நின்று பொருகளுக்காக காத்திருக்கும் அவலநிலையும் தோன்றியுள்ளது. எரிபொருள் முதல் அத்தியாவசிய உணவுகளை பெறுவதற்காகவும் இலங்கை மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.இந்நிலையில் எரிபொருளுக்காக...

வெள்ளி, 20 மே, 2022

கடன் நிவாரணம் இலங்கைக்கு வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நாடுகள் அறிவிப்பு

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன.இது குறித்து G7 நாடுகளின் நிதித் தலைவர்கள் ஜேர்மனியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.இதனால் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் செலுத்துவதை...

புதன், 18 மே, 2022

பேரறிவாளனின் 31 ஆண்டுகள் சிறை வாசம் முடிவுக்கு வந்தது விடுதலை காற்றை சுவாசித்தார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம்.18-05-2022. இன்று விடுதலை செய்துள்ளது.முன்னாள் பிரதமரின் கொலை தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுதலை செய்யுமாறு கோரி பேரறிவாளன் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு .18-05-2022.இன்று வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளன்...

செவ்வாய், 17 மே, 2022

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் அனுப்பினால் ஆபத்து

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை (உண்டியல் பறிமாற்றம்) சோதனையிட பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.நாட்டில் டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில்...

திங்கள், 16 மே, 2022

இலங்கையில் பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.நாடடின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த மே மாதம் 9ஆம் திகதி வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.இந்நிலையில், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு...

ஞாயிறு, 15 மே, 2022

நாட்டில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் பிரதமர் ரணிலின் அதிரடி

இலங்கை  அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தன்னெழுச்சியான போராட்டமும் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது.கோட்டா கோ கோம் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படாது என நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.கோட்டா கோ கம போராட்டப் பகுதியை பராமரிப்பதற்கும்...

சனி, 14 மே, 2022

இலங்கையில் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் தென்மேல், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

வெள்ளி, 13 மே, 2022

இலங்கை பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

2022, மே 09 அன்று இலங்கையின் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்; தொடர்பில் பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை கோரியுள்ளது.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இந்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.இதன்படி, பொதுமக்கள் தமது தகவல்களை வழங்குவதற்காக...

வியாழன், 12 மே, 2022

நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம்.12-05-2022. இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தாக்கியிருந்தனர்.ம் என அறிவிக்கப்பட்டிருந்ததுடன், மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும்...

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க பலரின்...

நாட்டில் மேல்மாகாண அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

மேல்மாகாணத்தின் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் இன்று (12) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும்12-05-2022. இன்று மூடப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் தெரிவித்துள்ளார்.சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பாடசாலைகளை நடாத்துவது...

ராஜபக்சக்களுக்கு சொந்தமானதாக தங்காலை மெடில்ல பிரதேசத்தில் ஹோட்டலுக்கு தீவைப்பு

தங்காலை மெடில்ல பிரதேசத்தில் ராஜபக்சக்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஹோட்டலுக்கும் ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் கடந்த ஒரு மாத காலமாக...

புதன், 11 மே, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண நிலை; இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண நிலையை அடுத்து காவல்துறை மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் போராட்டக்காரர்கள் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவும் படைத்தரப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒரு...
Blogger இயக்குவது.