புதன், 7 அக்டோபர், 2026

கிளிநொச்சி ரோட்டரி கழகத்தினர் நேர்வேயில் வீதி போக்குவரத்துப் பாதுகாப்பு மாநாட் டில் பங்கேற்பு

..மிகவும்  வளர்ச்சியடைந்த நாடுகளில் மேற்கொள்ளப்படுவது போன்ற வீதிப் பாதுகாப்பு முயற்சிகளை இலங்கையிலும் முன்னெடுக்கும் வகையில், கிளிநொச்சி ரோட்டரி கழகத்தின் Transport Safety Academy நிறுவப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி ரோட்டரி கழக உறுப்பினர்கள் நோர்வேயின் பேர்கன் நகருக்கு அண்மையில் 
சென்றிருந்தனர். 
அங்கு Western Norway University இல் வீதி மற்றும் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டிலும்
 கலந்துகொண்டனர். 
அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான , யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவிக்கையில், 
இந்தப் பயணம், வீதிப் பாதுகாப்புத் துறையில் நோர்வேயின் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் அறிந்துகொள்வதற்கும், அவற்றிலிருந்து இலங்கைக்குப் பொருத்தமான அணுகுமுறைகளை அடையாளம் காண்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக
 அமைந்தது.
வீதி விபத்துகள் தவிர்க்க முடியாதவை அல்ல. சரியான திட்டமிடல், பாதுகாப்பான வீதிக் கட்டமைப்பு, தரமான வாகனங்கள், பொறுப்பான வாகனப் பயன்பாடு மற்றும் ஒவ்வொரு வீதிப் பயனாளரினதும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் அவற்றைக் கணிசமாகக் 
குறைக்க முடியும். 
ஒரு உயிரைக் காப்பாற்றுவது என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதாகும் 
ஒரு விபத்தைத் தடுப்பது என்பது உயிரிழப்பு, அங்கவீனம் மற்றும் பொருளாதார இழப்பு ஆகிய அனைத்தையும் தடுப்பதாகும்.
எனவே, அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புகள், பொலிஸார், சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வீதிப் பாதுகாப்பை ஒரு தேசிய முன்னுரிமையாகவும், ஒவ்வொருவரின் பொறுப்பாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   


சிறுவன் மூன்று மாத குழந்தையாக இருந்ததிலிருந்தே நினைவுகளை கூர்கிறார்.

இந்தச்சிறுவன் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் 16 வயதான சிறுவன் ஒருவரால், தான் 3 மாத குழந்தையாக இருந்த
 காலத்திலிருந்து தனக்கு நடந்த நிகழ்வுகளை நினைவு கூற முடிவதாக தெரிவித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆய்வாளர்கள் அந்த சிறுவனுக்கு KCL என பெயரிட்டுள்ளனர்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகின் 99 சதவீத மக்களை விட, KCL தனது கடந்த கால நிகழ்வுகளை இளம் வயதிலிருந்தே சிறப்பாக
 நினைவுகூர்கிறார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், கிரெனோபிள் ஆல்ப்ஸ் பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆய்வாளர் கிரிஸ்டியன் பார்சிகோவ்ஸ்கிக்கு, தனக்கு அதிகப்படியான நினைவாற்றல் இருப்பதாக அந்த சிறுவனிடமிருந்து மின்னஞ்சல் வந்துள்ளது.
அதன் பின்னர் KCL ன் நினைவாற்றல்களை பரிசோதித்த அந்த குழு, சீரற்ற முறையில் 15 தேதிகளை கொடுத்து, அந்த நாளில் நடந்த ஒரு முக்கியப் பொது நிகழ்வையோ, தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளையோ கூறுமாறு கேட்டுள்ளனர்.
இதில், KCL நடந்த நிகழ்வுகளை 83 சதவீதத் துல்லியத்துடன் நினைவு கூர்ந்தார். 3 மாதக் குழந்தையாக(ஏப்ரல் 2009) இருந்தபோதே தோன்றிய நிகழ்வுகளை கூட அவரால் நினைவு கூற முடிவதாக கூறப்படுகிறது.
அவரது பெற்றோரால் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆரம்பகால குழந்தை பருவ (2010–2011) நினைவுகளும் அவருக்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
KCL-இன் மூளைக்குள் அசாதாரணமாக நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. பிறப்பிலிருந்து அவனது வளர்ச்சி, எந்த மனநல அல்லது கல்வி சார்ந்த பிரச்சினைகளும் இன்றி, இயல்பாகவே இருந்தது என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாசனை, ஒரு சிறு இசைத் துணுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட வாக்கியம் போன்ற மிகச் சிறிய தூண்டுதல்களால்கூட தனது நினைவுகள் அடிக்கடி தூண்டப்படுவதாக KCL கூறியுள்ளார்.
மேலும், ஒரு நாளில் பல மணி நேரங்களில் இது போல் நினைவுகளில் மூழ்கி விடுவதாக தெரிவித்துள்ளார். HSAM பாதிப்புள்ளவர்களிடம் இது பொதுவாகக் காணப்படுகிறது.
மிகவும் மேம்பட்ட சுயசரிதை நினைவாற்றல் (HSAM) என்று அழைக்கப்படும் இந்த நிலை, உலகில் 100க்கும் குறைவான மக்களுக்கே இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
HSAM நோய் குறித்து ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறிவாற்றலில் 
மிகச்சிறந்தவர்கள் அல்ல. அன்றாடத் தகவல்களைக்
 கற்றுக்கொள்வது அல்லது எண்களை மனப்பாடம் செய்வது போன்ற விடயங்களில் பெரும்பாலும் பொதுமக்களுடன் ஒப்பிடத்தக்கவர்களாகவே உள்ளார்கள்.
ஆனால், அவர்கள் கண்ட, வாழ்ந்து அனுபவித்த தன்வரலாற்று நிகழ்வுகளை அவர்கள் நினைவில் கொண்டு அணுகும் விதமே அவர்களை வேறுபடுத்துகிறது.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


செவ்வாய், 6 அக்டோபர், 2026

நாட்டில் அம்பாறையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது ஹெரோயின் மீட்பு போதைப்பொருள் மீட்பு

நாட்டில் அம்பாறை நவகம்புர – தயாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், சந்தேகநபரிடமிருந்து 2,190 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முவங்கல மற்றும் கல்மடுவ பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரிடம் இருந்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ‘டின் மல்லி’ என அழைக்கப்படும் ‘கல்ஹாரா’ என்பவரின் சகோதரர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   


திங்களன்று கனடா கியூபெக் பிரிவினைவாதிகள் வாக்கெடுப்பில் வெற்றி, பொது வாக்கெடுப்புக்கு வாக்குறுதி

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் திங்களன்று நடைபெற்ற தேர்தலில், கனடாவிலிருந்து கியூபெக் சுதந்திரம் பெறுவது குறித்து புதிய பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்துள்ள பிரிவினைவாத பார்ட்டி கியூபெக்வா (PQ) அதிக இடங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான முழுமையான பெரும்பான்மையை அந்தக் கட்சி பெறவில்லை.
49 வயதான பால் செயிண்ட்-பியர் பிளமண்டன் தலைமையிலான PQ, மொத்தம் 127 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் சுமார் 60 இடங்களைப் பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவைப்படும் நிலையில், PQ சிறுபான்மை அரசாங்கமாக ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சட்டங்களை நிறைவேற்றவும், நம்பிக்கை வாக்கெடுப்புகளில் வெற்றி பெறவும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு PQ அரசாங்கத்துக்குத் தேவைப்படும்.
மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுதான் கியூபெக் மக்கள் பார்ட்டி கியூபெக்வாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்தச் செய்தியை நான் கேட்டேன்,” என்று PQ தலைவர் பால் செயிண்ட்-பியர் பிளமண்டன் தெரிவித்தார்.
ஒரு தசாப்தத்துக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு PQ மீண்டும் ஆட்சிக்கு வருவது, கியூபெக்கின் பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் அடையாளம் மற்றும் மாகாணத்தின் எதிர்காலம் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. கியூபெக்கின் மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள்.
கியூபெக்கை ஒரு தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தை வலியுறுத்திய செயிண்ட்-பியர் பிளமண்டன், பொது வாக்கெடுப்பு மூலம் கியூபெக் மக்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க 
முடியும் என்று கூறினார்.
நான் தொடர்ந்து அந்த நாட்டைப் பற்றிக் கனவு காண்கிறேன், அதைக் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்தக் கனவு ஒரு நாள் நனவாகும் என்று அவர் தனது வெற்றி உரையில் தெரிவித்தார்.
எனினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருக்கும் காலத்தில் கியூபெக் சுதந்திரம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படாது என அவர் தெளிவுபடுத்தினார். இந்த விவகாரம் “விவேகமான
 மற்றும் அமைதியான விவாதம் மூலம் அணுகப்பட வேண்டும் என்றும், “கணிக்க முடியாத ஒரு அதிபரின் நாடகங்களால் அது திசைதிருப்பப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.சுதந்திரத்துக்கு தற்போதைய ஆதரவு
PQ-வின் தேர்தல் வெற்றி, கியூபெக் சுதந்திரத்துக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நேரடியாகக் குறிக்கவில்லை.
1995ஆம் ஆண்டு நடைபெற்ற கடைசி சுதந்திர வாக்கெடுப்பில், 50.58 சதவீத வாக்காளர்கள் மட்டுமே கனடாவுடன் இணைந்திருக்க ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளை, சமீபத்திய கருத்துக்கணிப்புகள் கியூபெக் இறையாண்மைக்கான ஆதரவு சுமார் 30 சதவீதமாக
 இருப்பதாகக் காட்டுகின்றன.
19 வயதான அலெக்ஸியா கோமஸ், கியூபெக் சுதந்திரம் பெற்றால் அது அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக மாகாணத்தை பாதிப்புக்குள்ளாக்கக்கூடும் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் 
தெரிவித்தார்.
லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளும் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், PQ-வின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளால் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
இதனிடையே, கியூபெக் மக்களிடையே வரவேற்பைப் பெறக்கூடிய மற்றொரு நடவடிக்கையாக, பிரிட்டிஷ் முடியாட்சியுடனான கியூபெக்கின் உறவுகளை குறைக்கவும் PQ உறுதியளித்துள்ளது.
கனடாவிலிருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்புக்கான செயல்முறையைத் தொடங்குவதை ஆதரிப்பதா என்பதை ஆல்பர்ட்டா வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ள நிலையில், அதற்கு சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு கியூபெக் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   


பிரான்சிஸ் ஹால்சன் நோபல் இயற்பியல் பரிசை வென்றார்

ரோயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி இன்று செவ்வாய்க்கிழமை  பெல்ஜியம் நாட்டின் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசை வழங்கியது.
ஐஸ்க்யூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அவர் ஆற்றிய தீர்க்கமான பங்களிப்புகள் மற்றும் வானியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்று 
அகாடமி தெரிவித்தது.
 இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவருக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று தொடங்கியது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   

திங்கள், 5 அக்டோபர், 2026

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என பொதுமக்களுக்கு உறுதி

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடோ அல்லது விநியோகத் தடைகளோ இல்லை என்று இலங்கை தனியார் எரிபொருள் போசர் உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
 எனவே, பொதுமக்கள் தேவையின்றி பயனற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உரிய நேரத்தில் எரிபொருள் கட்டளைகளை விடுக்கத் தவறியதன் காரணமாகவே 
சில நிலையங்களில் வரிசைகள் காணப்படுவதாக 
அச் சங்கத்தின் தலைவர்
 ஏ.எம்.எச். அதிகாரி தெரிவித்தார். எரிபொருள் போக்குவரத்துக்கான கட்டணங்கள் தொடர்பில் சங்கம் எழுப்பிய கவலைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய சூத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது 
அவசியம் என்றார்.
மலையக மற்றும் தெற்குப் பகுதிகளுக்கான போக்குவரத்து கட்டணங்கள் தற்போதைய சூத்திரத்தில் கருத்திற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சங்கம் கோரிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாகவும், விடுபட்ட கம்பினிஷன் கூறுகளை உள்ளடக்கி சூத்திரத்தைத் திருத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   


சவூதி அரேபியச் சிறையில் அடைக்கப்பட் ட அனோஜனுக்காக உண்ணாவிரதம்

நாட்டில் சவூதி அரேபியச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் சவூதி மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட அமைதி வழி அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெற்றதுபயண
போராட்டத்தின் இறுதியில், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,000 இந்து அமைப்புக்கள் மற்றும் திருக்கோயில்களின் பிரதிநிதிகளிடம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களை உள்ளடக்கிய மகஜர் தயார் செய்யப்பட்டு இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் முறைப்படி கையளிக்கப்படவுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html    

Blogger இயக்குவது.