வெள்ளி, 7 ஏப்ரல், 2023

இலங்கைக்கு சுற்றுலா வந்த இரு நாட்டு பிரஜைகள் அடிதடி ஒருவர் கைது

 இலங்கை உனவட்டுன சுற்றுலாப் பணியகத்தில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒருவரை ஹபராதுவ சுற்றுலா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 ரஷ்ய பிரஜை கைது
அத்துமீறி நுழைந்து தாக்கிய குற்றச்சாட்டில் ரஷ்யர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பிரித்தானிய சுற்றுலா பயணி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ரஷ்ய சுற்றுலா பயணி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 6 ஏப்ரல், 2023

நாட்டில் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் மதிப்பீட்டாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் ரூபா கொடுப்பனவாக செலுத்துவதற்கும்
 போக்குவரத்து 
கொடுப்பனவாக 2 ஆயிரத்தி 900 ரூபா செலுத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்நிலையில் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர் 
இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ள கொள்கையளவிலான தீர்மானத்தின் பிரகாரம் திறைசேரி மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த கொடுப்பனவை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 5 ஏப்ரல், 2023

கேகாலையில் துண்டாக்கிய பெண்ணின் கையை சத்திர சிகிச்சையில் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட வைத்தியர்கள்

இலங்கையில்  உடலில் இருந்து வெட்டப்பட்ட கை 4 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான ஏற்பட்ட தகராறு எல்லை மீறி சென்றதையடுத்து 21 வயதான பெண் மீது மன்னா கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

அந்த தாக்குதலில் பெண்ணின் இடது கையின் கீழ் பகுதி துண்டிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையின் பாகம் ஐஸ் பையில் வைக்கப்பட்டு யுவதி உடனடியாக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ஜயவர்தன உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவினர் உடலிலிருந்து பிரிந்த கையை பொருத்த சத்திர சிகிச்சையை ஆரம்பித்தனர்.
உதவி வைத்தியர்கள், மயக்க மருந்து நிபுணர், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதார உதவிக் குழுக்கள் மற்றும் இரத்த வங்கியின் உதவியினால் யுவதியின் கை வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்தார்.
சத்திரசிகிச்சையின் பின்னர் யுவதி கேகாலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யுவதியின் நிலைமை படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 4 ஏப்ரல், 2023

எலன் மஸ்க் திடீரென ட்விட்டர் லோகோவை மாற்றியுள்ளார்

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். 
அதன்பின் டுவிட்டரில் ஊழியர்கள் பணிநீக்கம் 
உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதோடு டுவிட்டர் புளூ திட்டத்தின் கீழ் பல்வேறு மாற்றங்களை 
அறிவித்தார். 
அந்த வரிசையில், டுவிட்டரில் மற்றொரு அதிரடி நடவடிக்கையை எலான் மஸ்க் எடுத்துள்ளார்
இந்த நிலையில் டுவிட்டரின் லோகோவை எலான் மஸ்க் திடீரென்று மாற்றம் செய்துள்ளார். 
ஏற்கனவே அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்த நீலநிற குருவிக்கு பதில் டாகி சின்னம் தற்போது லோகோவாக மாற்றப்பட்டு
 இருக்கிறது. 
ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் டுவிட்டர் லோகோவாக வைக்கப்பட்டுள்ளது. டாகி காயின் என்று அழைக்கப்படும் கிரிப்டோ கரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் ஏற்கனவே 
பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 3 ஏப்ரல், 2023

கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு

கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை வளாகத்திலும், பாடசாலைக்கு முன்பாகவும் நேற்றைய 
தினம் முறிந்து விழுந்த மரங்களை அகற்றுவதற்கான 
நடவடிக்கை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்ட 18 பாடசாலை வீதியோர மரங்களை அகற்றவும் முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் குறித்த பாதிப்புக்கள்  தொடர்பில் ஆராய்வதற்காக 
அப்பகுதிக்கு
 சென்ற மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச மரக்கூட்டுத்தாபன
 அதிகாரிகள், நீர்பாசன திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நிலைமைகளை 
பார்வையிட்டனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

நாட்டில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது நிறுத்தப்படவில்லை: சியம்பலாபிட்டிய

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது நிறுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 
உறுதியளித்துள்ளார்.
தெஹியோவிட்டவில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முறையற்ற அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை தடுப்பது போன்ற பல விடயங்களில் அமைச்சு செயற்பட்டு 
வருவதாக தெரிவித்தார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், மேலும் விஞ்ஞான முறையின் கீழ் உரிமம் வழங்குவதற்கான அறிக்கையை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் 
கையளிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்
 தெரிவித்தார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 1 ஏப்ரல், 2023

குருநாகல் பேருந்து நிலையத்தில் சந்தித்து இரண்டு மணித்தியாலத்தில் திருமணம் செய்த இளைஞனும் யுவதியும்

இலங்கையில் இளைஞனும் யுவதியும் பேருந்து நிலையத்தில் சந்தித்து இரண்டு மணி நேரத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக பதிவாளர் ஒருவரிடம் சென்ற சம்பவம் ஒன்று
 இடம்பெற்றுள்ளது.
குருநாகல் பேருந்து நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தளை பிரதேசத்தின் வர்த்தக பகுதியில் பணிபுரியும் இந்த யுவதி தங்குமிடத்திற்கு வருவதற்காக குருநாகல் பேருந்து நிலையத்தில் இருந்த போது ​​இளைஞன் ஒருவரை சந்தித்துள்ளார்.பின்னர் 
இருவரும் கட்டுநாயக்க செல்லும் பேருந்தில் ஏறி உரையாடிக்
 கொண்டிருந்த வேலை கொடதெனியவைக் கடக்கும் போது “திருமணம் செய்து கொள்வோம்” என இளைஞன் யோசனை 
முன்வைத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.