திங்கள், 30 செப்டம்பர், 2024

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள்


நாட்டில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை நேரடியாகப் பங்கேற்காமல் இருக்க 
முடிவெடுத்துள்ளது. 
அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பயன்படுத்திய சங்கு சின்னத்தை இந்த 
நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் தமிழ் மக்கள் பொதுச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
 தமிழ் மக்கள் பொதுச் சபையின் கலந்துரையாடல் நேற்றையதினம்(29.09) திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது என்ற யோசனையை முன்வைத்தது. 
 இந்நிலையில், இது தொடர்பில் முடிவெடுப்பதற்குத் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபை இரண்டு நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தது.
 இது தொடர்பில் முடிவை எடுக்கும் முகமாக தமிழ் மக்கள் பொதுச் சபையின் கலந்துரையாடல் நேற்று திருகோணமலை, உப்புவெளியில் அமைந்துள்ள ஆயர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.
 கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபையும், தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ஒரு தமிழ்த் தேசியப் பொதுக் 
கட்டமைப்பை உருவாக்கி, பொது வேட்பாளரைக் களம்
 இறக்கின.  எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பதில்லை 
என்று தமிழ் மக்கள் பொதுச் சபை முடிவு எடுத்துள்ளது.
 மேலும், பொதுச் சின்னமாகிய 
சங்கு சின்னத்தை 
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு
 தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் கேட்பது என்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை தீர்மானித்துள்ளது..
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான நிதி உரிமத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி

இலங்கையில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக 
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க
 தெரிவித்துள்ளார். 
 எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 நேற்று (28) பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க விடயங்கள் தொடர்பான இரண்டு கலந்துரையாடல்கள் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றன. 
 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதி மாவட்ட செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் முதலாவது கலந்துரையாடல் 
இடம்பெற்றுள்ளன. 
 இதேவேளை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி ஆணையாளர்கள், பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 28 செப்டம்பர், 2024

நாட்டில் பாடசாலை நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் பாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற விசேட நிகழ்வுகளுக்காகப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடுவது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெறுவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 27 செப்டம்பர், 2024

நாநூற்ரி பதின்எட்டு கோடியில் மனைவி குளிப்பதற்காக தனி தீவு வாங்கிய கணவர்

துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதிஅல்நடக் (வயது 26). 
இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்டிருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
மனைவி மீது மிகவும் அன்பு கொண்ட ஜமால் அல்நடக், அவருக்காக ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி உள்ளார். இந்நிலையில் தனது 
மனைவி நீச்சல் (பிகினி) உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்ட நிலையில் அவருக்காக ஜமால் அல்நடக் ஒரு தீவையே விலைக்கு 
வாங்கியுள்ளார்.
இதுதொடர்பாக சவுதி அல்நடக் அந்த தனியார் தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
இந்த வீடியோ 24 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக 
தீவின் சரியான இருப்பிடத்தை வெளியிட சவுதிஅல்நடக் மறுத்து விட்டடார். 
ஆனால் தனக்காக தனது கணவர் ஜமால் அல்நடக் தீவை வாங்குவதற்காக 418 கோடி செலவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சவுதிஅல்நடக் கூறுகையில், எனது
 கணவர் வாங்கிய தீவு ஆசியாவில் உள்ளது. தனியுரிமை காரணங்களுக்காக 
நாங்கள் தீவின் சரியான இடத்தை பகிர்ந்து கொள்ள 
விரும்பவில்லை என்றார்.
 ஏற்கனவே சவுதிஅல்நடக் தனது ஆடம்பர வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தவர் ஆவார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 26 செப்டம்பர், 2024

உலக வங்கி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு கைக்கொடுக்கும்

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கு உலக வங்கி குழு தனது அர்ப்பணிப்பை 
வெளிப்படுத்தியுள்ளது.
உத்தியோகபூர்வ கடிதத்தில், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் மற்றும் 
சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டி ஆகியோர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்துக்களைத்
 தெரிவித்தனர்.
நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்கு மாநிலத்தின் தொடர் கவனம் தேவை என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், 'வளர்ச்சி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தவை'
 என்று கடிதம் கூறுகிறது.
புதிய நிர்வாகத்தின் தலைமையின் கீழ் உள்ளடங்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் உலக வங்கி 
குழுவின் உறுதிப்பாட்டை இந்தக் கடிதம் உறுதிப்படுத்துகிறது
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 25 செப்டம்பர், 2024

ஜனாதிபதி அனுரவுடன் தொடர்ந்து பயணிப்பதற்கு தயார்: சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
 தற்போது செயற்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் உள்ளிட்ட இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு
 இலக்குகளை அடைவதற்கு நிலையான 
பங்காளியாக
 தொடர்ந்து பணியாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 24 செப்டம்பர், 2024

ஜனாதிபதி அனுர உறுதி அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன்

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
 இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை (23) பதவிப் பிரமாணம் செய்து
கொண்டார். இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது.
 இதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் 
உரையாற்றுகையில், 
 தேர்தலை நடத்துவதும் , அரச தலைவரை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல, எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக 
பாதுகாப்பேன்.
 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன். சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன். அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம்.
 நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 23 செப்டம்பர், 2024

இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம்
 செய்துகொண்டார்.
23-09-2024.இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

நாடு ரணிலை மீண்டும் தேடுமா மக்கள் தீர்ப்பு தவறாகுமா அடுத்து நடக்கபோவது என்ன

முன்னாள் ஜனாதிபதி ரணில் என்னும் இராஜதந்திரம் பொறுமையுடன் செல்கிறது! மக்கள் ஆணையை ஏற்று கையில் தூக்கிச் செல்வதற்கு எதுவும் இல்லை ! அதனை மீள அழைப்பது அழைக்காமல் விடுவது
 ஆட்சியாளர்களின் கையிலே! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதிக்கு வளிவிட்டு தனது உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.
ரணில் விக்கிரமசிங்க சிறந்த இராஜதந்திரி அவரிடம் இருக்கும் அரசியல் அறிவும் அணுகுமுறையும் புதிய ஜனாதிபதி அநுர குமாரவிடம் போதாது போனாலும் மக்கள் ஆணை அவருக்கு 
வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளாத சந்தர்ப்பத்தில் அநுர ஆட்சியை பொறுப்பெடுத்துள்ளார்.
IMF கடன் நிபந்தனையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அநுர தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதில் உள்ள சவால் என்னவெனில் முன்னாள் ஜனாதிபதி IMF இடம் கடன் பெறுவதற்கான திட்ட வரைபுகளை தானகவே தயார் செய்து சுமார் 8 மாதங்கள் கடந்தே ரணில் விக்கிரமசிங்க நிதியைப் பெற்றார்.
தற்போதைய ஜனாதிபதி அநுர பதவி ஏற்றதன் பின் பல்வேறு சவால்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்படும் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை நாட்டை நடாத்திச் செல்லும் 
பொறுப்பு சவாலானது. ஊழல் அல்லாத நபர்களை அமைச்சரவையில் 
நியமிக்க வேண்டும்.
 தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பெரும்பான்மை பலத்துடனான ஆட்சியை அமைக்க வேண்டும் . சீனா விசுவாசம் இந்திய அமெரிக்க இராஜதந்திர போட்டித் தன்மையை சமப்படுத்தல் ரணில் விக்கிரமசிங்கவை 
வெளியில் வைத்துவிட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதும்
 சவாலான விடையம் .
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரணில் ராஜபக்ச கூட்டு கைப்பற்றப்போகும் பாராளுமன்ற ஆசனங்கள் பதவி ஏற்கவுள்ள புதிய ஜனாதிபதி அநுரவுக்கு எதிர்காலம் சவாலானதே!
ஆட்சி அதிகாரங்களை தந்திரமாகவும் நட்பு நாடுகளுடனா
 இராஜதந்திர உறவுகளை தந்திரமாக பயன்படுத்த
 தவறின் ரணில் என்கின்ற இராஜதந்திரியின் மீள் வருகை எதிர்பார்த்த ஒன்றாக அமைந்துவிடும். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 21 செப்டம்பர், 2024

நாட்டில் தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள்!மக்களிடம் வேட்பாளர்கள் வேண்டுகோள்

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ 
ஆகியோர் வாக்களித்தனர். 
வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள். வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தினார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு . 21-09-2024.இன்று சனிக்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் காலை வேளையில் வாக்களித்தனர்.
 சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதல் பெண்மணி மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் கொழும்பு 
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று 
வாக்களித்தனர்.
 வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
 வாக்களிப்புக்கான வரிசையை நானே தோற்றுவித்தேன். அன்றைய ஸ்திரமற்ற நிலை நீடித்திருந்தால் வாக்களிப்பு இடம் பெற்றிருக்காது. அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்றது. புதிய பயணத்தை
 நோக்கி செல்வோம்.
 வன்முறையற்ற வகையில் அமைதியாக செயற்படுங்கள். போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
 தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க வாக்களித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றியமைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் காணப்பட்டது. இலங்கையில் காலம் காலமாக 
அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும் மாற்றுதற்கு தேர்தல் இடம்பெற்றுள்ளது.
 இந்த தேர்தல் தான் முறைமை மாற்றத்துர்க்காக இடம்பெற்றுள்ளது. வெற்றியை அனைவரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும். ஜனநாயக ரீதியில் தமது விரும்பும் அரசியல் தரப்பினருக்காக
 செயற்படவும், வாக்களிக்கவும் அனைவருக்கும் உண்டு
 அதனை பாதுகாக்க வேண்டும். நாட்டுக்கு புதிய அரசியல் கலாச்சாரம் அவசியம்.
வெற்றி யாருடையதாக இருந்தாலும் அதனை அமைதியாகவும், வன்முறையற்ற வகையிலும் கொண்டாட வேண்டும் என்றார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமாச
 மற்றும் அவரது பாரியாரான ஜலனி பிரேமதாச 
ஆகியோர் ராஜகிரிய பகுதியில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனநாயக முறையில் தேர்தல் இடம்பெற்றது.ஆகவே ஜனநாயக அம்சங்களை பாதுகாக்க வேண்டியவது அவசிமானது. 
வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள். வன்முறையற்ற சூழலை தோற்றுவிக்கும் பொறுப்பு அனைத்து 
அரசியல் தரப்பினருக்கும் உண்டு என்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி
 வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வீரகெடிய மெதமுல்ல வித்தியாலயத்தில் வாக்களித்தன் பின்னர், யாருக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். 
மக்களாணையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அமைதியான முறையில் வெற்றியை கொண்டாட வேண்டும் என்றார்.
 குறிப்பிடத்தக்கது  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 20 செப்டம்பர், 2024

நாட்டில் வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச் சென்ற சாரதி கைது

நாட்டில் தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுடன் தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பயணித்த வேன் சாரதி கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 இதன்போது, வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 19 செப்டம்பர், 2024

விக்கினேஸ்வரன் அறைகூவல் தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்ற சங்குக்கு தமிழ் மக்கள் வாக்களியுங்கள்!


நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை,
 தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும்
 நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு 
தமிழ் மக்கள் 
அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் அறைகூவல்
 விடுத்துள்ளார்.
 நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல்.21-09-2024. சனிக்கிழமை  நடைபெறவிருக்கும் நிலையில், 18-09-2024.புதன்கிழமை நள்ளிரவுடன் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகள் முடிவுக்கு 
வந்தன. அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு 
தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என
 வலியுறுத்தி.18-09-2024. புதன்கிழமை  கொழும்பிலுள்ள 
வெஸ்டேர்ன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
 ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் 
மேலும் கூறியதாவது:
 நாம் எதிர்பார்த்ததை விடவும் தற்போது தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. எமது நாட்டில் பாராளுமன்றத்தேர்தல், மாகாணசபைத்தேர்தல், உள்ளுராட்சிமன்றத்தேர்தல் ஆகியவற்றில் அந்தந்தப் பகுதிகளைச்சேர்ந்த மக்களின் தெரிவுகளுக்கே 
இடமளிக்கப்படும். ஆனால் ஜனாதிபதித்தேர்தலில் மாத்திரமே ஒட்டுமொத்த நாட்டுமக்களும் ஒரே தளத்தில் பங்கேற்பர். இதுவரையில் ஆட்சிபீடமேறிய சிங்கள பௌத்த அரசாங்கங்கள் எமக்கான தீர்வைப்
 பெற்றுத்தரவில்லை.
 வட, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்ச்சியாகக் கைப்பற்றப்பட்டுவருகின்றன. 
குறிப்பாக குச்சவெளியில் 431 ஏக்கர் நிலப்பரப்பு 
அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதன் விளைவாக வட, கிழக்கில் தமிழ் மக்களின் நிலத்தொடர்ச்சி அற்றுப்போயிருக்கிறது. 
இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக இன ரீதியாகப் பிரச்சினைகள் கட்டவிழ்த்துவிடப்படும்போது நாமும் அதனை
 முறியடிப்பதற்குரிய நடவடிக்கைகளை 
முன்னெடுக்கவேண்டும். 
இவ்வாறானதொரு பின்னணியில் எமது பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துக்குச் சொல்லும் நோக்கிலும், வட, கிழக்கில் தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கிலும் இம்முறை
 தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கும் அரியநேத்திரனுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்றார். அதேவேளை இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட புவிதரன், உண்மையிலேயே 
கடந்த 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதுடன் தமிழ்த்தேசிய அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டதாகவும்
, எனவே 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற 
ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
 இருப்பினும் அப்போது பொதுவேட்பாளர் 
களமிறக்கப்படாத நிலையில், தற்போதேனும் அதற்குரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது 
எனவும், ஆகவே தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்துக்குக் கூறுவதற்கு பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களிக்கவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
 அதேபோன்று சமகாலத்தில் தமிழ் மக்களைப் பிளவுபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அவற்றைத் தோற்கடித்து தமிழ் மக்கள் அனைவரையும் 
ஒற்றுமைப்படுத்துவதற்காகவே பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சசிகலா ரவிராஜ் சுட்டிக்காட்டினார்.
 மேலும் ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளை செயலாளர் மிதிலைச்செல்வி, இம்முறை
 ஜனாதிபதித்தேர்தலில் வெல்லும் நோக்கில் தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டதுடன், 
அவ்வேட்பாளர் தமிழ் மக்களின் ஒற்றுமையின் ஊடாக எதிர்பார்க்கப்படும் 
வாக்குகளைப் பெறுவார் எனவும், அவ்வாறு
 பெறாவிட்டாலும் அடுத்தடுத்த ஜனாதிபதித்தேர்தல்களிலும் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்ற 
செய்தி இதன்மூலம் சொல்லப்படும் எனவும் தெரிவித்தார்
.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 18 செப்டம்பர், 2024

நாட்டில் இனப்பிரச்சினை தீர்வுக்குள் மாத்திரம் குறுகிவிடாது நாட்டின் பொருளாதாரத்தினையும் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்

நாம் எமது ஜனாதிபதித்தெரிவினை மேற்கொள்ளும்போது தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார சூழ்நிலை குறித்துப் பகுத்து ஆராய்வது அவசியமாகும். 
தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் 
அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
 இதுகுறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலாநிதி ஏ.அந்தோனிராஜன், கலாநிதி எஸ்.அறிவழகன், பேராசிரியர் பி.ஐங்கரன், கலாநிதி எஸ்.ஜீவசுதன், கலாநிதி ஏ.கதிர்காமர், 
பேராசிரியர் ஆர்.கபிலன், கலாநிதி என்.ராமரூபன், கலாநிதி எம்.சர்வானந்தன், என்.சிவகரன், பேராசிரியர் ஆர்.ஸ்ரீகரன், கலாநிதி ஆர்.தர்ஷன், கலாநிதி எம்.திருவரங்கன், கலாநிதி என்.வரதன், பேராசிரியர் கே.விக்னரூபன் மற்றும் எஸ்.விமல் ஆகிய 15 புத்திஜீவிகள் இணைந்து 
வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
 எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது 
ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக உருவான மக்கள் எழுச்சிப்போராட்டங்களின் பின்னர் நாடு 
சந்திக்கும் முதலாவது மிகமுக்கிய தேர்தல் இதுவாகும். கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இந்நாட்டில் வாழ்க்கைச்செலவு கடந்த இரு வருடங்களில் பன்மடங்காக 
உயர்வடைந்திருக்கிறது. 
வறுமையும், வேலையின்மையும் மக்களை வாட்டுகிறது. உரம் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான மானியக்குறைப்பின் காரணமாக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வட்டிவீத அதிகரிப்பு சிறு
 முயற்சியாளர்களின் வருமானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. கட்டடத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியினால் நகர்ப்புற முறைசாரா மற்றும் கிராமப்புற மக்களின் தொழில்வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து, எரிபொருள், மின்கட்டண அதிகரிப்பினால் சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். 
 இந்த நிலைமைகளை நாம் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான வாழும் நாட்டின் வட, கிழக்குப் பகுதிகளிலும் அவதானிக்கிறோம். போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆயுதக்கலாசாரம், வன்முறைகள், இந்திய
 இழுவைப்படகுப் பிரச்சினை போன்றனவும் வடக்கை வெகுவாகப் பாதித்திருக்கின்றன.
 இவ்வாறு நிலைமை மோசமடைந்து செல்கையில் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஊழலில் ஈடுபட்டு
 நாட்டின் வளங்களையும், செல்வத்தையும் கொள்ளையிட்டவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றால் மக்கள் வெகுவாக அதிருப்தியுற்றிருக்கிறார்கள். இத்தகு பின்னணியில் 2022 இல் மக்கள் எழுச்சியின் அடிப்படையாகக் காணப்பட்ட 'கட்டமைப்பு மாற்றம்' என்ற கோஷம் தற்போது குறிப்பாக தென்னிலங்கையில் ஓங்கி ஒலிப்பதனைக் காணமுடிகிறது. 
போராட்டத்தின் மூலம் ஏற்படாத மாற்றங்களைத் தேர்தலின் மூலமாகவேனும் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தெற்கு மக்கள் ஆர்வமாக
 இருப்பதை உணரமுடிகிறது. இத்தகைய வரலாற்று
 முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் மிகக்கவனமாகவும், புத்திசாதுரியமாகவும் கையாளவேண்டியது
 அவசியமாகும். தென்னிலங்கையில் பல 
தசாப்தங்களின் பின்னர் இனவாதத்தினை முன்னிறுத்தாத தேர்தல் பிரசாரத்தினை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்து
வருவதாக அறிகிறோம். மக்களின் நலனை முன்னிறுத்தும் பொருளாதார ரீதியான மாற்றங்கள், ஆட்சி முறைமையில் மாற்றம், ஊழல் ஒழிப்பு போன்ற கோஷங்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் பின்னால் தென்னிலங்கை மக்கள் பெருமளவில் திரள்வதையும் நாம் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பார்க்கிறோம். 
 எனவே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் மாற்றத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் மக்களுடன் இம்முறைத்தேர்தலில் பயணிப்பது குறித்து ஆராயவேண்டும். அதேவேளை கடந்த 5 ஆண்டுகளில்
 நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளியவர்களைத் தோற்கடிப்பதும் அவசியம்.
 இனப்பிரச்சினைக்கான தீர்வு, மதச்சார்பற்ற அரசினை
 உருவாக்குதல், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை 
மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் பிரதான வேட்பாளர்கள் 
முற்போக்கான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாமை 
குறித்து நாம் சுட்டிக்காட்டுகின்றோம். அதேவேளை
 பொருளாதார நெருக்கடியும், ஊழலினால் ஏற்படும் பொருளாதார, அரசியல் சீர்கேடுகளும் சிறுபான்மை சமூகங்களையும் மோசமாகப் பாதித்துள்ளன என்பதை மனதிலிருத்தி இம்முறைத் தேர்தலில் நாம் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது அவசியம். 
 சர்வதேசத்தினால் தான் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை குறித்து நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் நாம் எமது தேர்தல் தெரிவுகளை மேற்கொள்வது அரசியல் ரீதியாக உள்நாட்டில் எம்மை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.
 இவ்வாறான காரணங்களால் தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய 
அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். பொருளாதார ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எமது சமூகங்களும், ஊழல் மற்றும் ஏனைய சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள எமது
 பொது நிறுவனங்களும் முன்னேறுவதற்கு இந்தத் தேர்தல் ஏதாவதொரு வழியில் சந்தர்ப்பங்களைத் திறக்குமா என நாம் சிந்திக்கவேண்டியது அவசியம். தென்னிலங்கையில் இனவாதம் சற்று அடங்கியிருக்கும் இவ்வேளையிலே, ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனநாயகத்தன்மை
 மிக்க, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இந்தத் தேர்தலை நோக்குவது பொருத்தமானதாக இருக்கும் என 
நாம் கருதுகின்றோம். 
 அதன்படி தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, முற்போக்கானதும், ஊழலுக்கு எதிரானதும், பொருளாதார மீட்சியில் அக்கறை கொண்டதும், முற்போக்கான அரசியல், பொருளாதார 
மாற்றங்களுக்கான
 கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியதும், நம்பகத்தன்மை வாய்ந்ததும், இனங்களை ஒற்றுமைப்படுத்தக்கூடியதுமான ஒரு வேட்பாளருக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிப்பது
 பொருத்தமானதாக இருக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்கது  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 17 செப்டம்பர், 2024

நாட்டில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் கட்டண அதிகரிப்பு தொடரும்

நாட்டில்வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 
தெரிவித்துள்ளார்.
 பம்பலப்பிட்டியில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலேயே கட்டண விகிதங்கள் அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 150,000 முதல் 500,000 ரூபா வரை சம்பளம் பெறுவோருக்கு விதிக்கப்படும் வரியை 15 முதல் 23 சதவீதமாக குறைக்கும் யோசனையை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அடுத்த
 வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
 அரசாங்கம் 17 வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடன்களை செலுத்தவில்லை என்றும், உள்நாட்டு கடன்கள் அனைத்தும் செலுத்தப்படுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
 சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் அமெரிக்க மத்திய வங்கிகளில் கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 5.2 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 16 செப்டம்பர், 2024

நாட்டில் தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் தமிழர்கள் அழிந்து போகும் ஆபத்து

கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழ் மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாது அழிந்து போகக் கூடிய ஆபத்து இருக்கிறது ஆகவே இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக 
இருந்தால் தமிழர் தேசம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட 
தீர்வு எட்டப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.
 தமிழர்களுடைய தலை நகரமான திருகோணமலை இன்று தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் கபளீகரம் செய்யப்பட்டு, 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 32 விகாரைகள் அமைக்கப்பட்டு மிகப் பெரிய பௌத்த மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
 என்றும் குறிப்பிட்டார்.
 மட்டக்களப்பில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
 இவ்வாறு தெரிவித்தார்.
 ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகவும் அனுரா குமார திசாநாயக்க வலிமையான ஒரு எதிரணியின் உடைய கட்சி தலைவராகவும் பாராளுமன்றத்தில் இருந்து 
கொண்டிருக்கும் போது தான் இந்த பௌத்தமயமாக்கல் இடம்பெற்றுக் 
கொண்டி ருக்கின்றது.
 அதேபோல் மட்டக்களப்பு எல்லைப் பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் 3 லட்சம் மாடுகள் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பேரினவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு
 அபகரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது இவை எல்லாம் நடைபெறுகிறது சஜித்தோ, அனுரவோ, ரணிலோ இதனை தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். இன்று
 அம்பாறை மாவட்டம் முற்றாக பறிபோய்விட்டது அதேபோல் திருகோணமலை மாவட்டமும் கிட்டத்தட்ட மிகப் பெயரளவில் பறிபோய்விட்டது. 
மட்டக்களப்பு மாவட்டம் பறிபோக தொடங்கிவிட்டது இந்த நிலையில் கிழக்குடன் வடக்கு இணைந்தால் மாத்திரம் தான் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வடக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இணையும்போது 
தங்களுடைய இருப்பை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும் என்றார். இந்த இணைவு நடை பெறவில்லை என்றால் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழ் மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாது அழிந்து
 போகக் கூடிய ஆபத்து இருக்கிறது. 
 ஆகவே, இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமாக இருந்தால் இந்த இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தமிழர் தேசம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட வேண்டும் என்றார்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

 நாட்டில்   இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொழும்பு – 13 பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குறித்த நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 
வந்துள்ளார்.  
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120,400 சிகரெட்டுகள் அடங்கிய 602 அட்டைப்பெட்டி சிகரெட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 14 செப்டம்பர், 2024

ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள் சிவி.விக்னேஷ்வரன் கோரிக்கை

தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு இன்னும் 6 நாட்களே உண்டு. அனைவரும் தவறாமல் சங்கு சின்னத்திற்கு 21ந் திகதியன்று காலை வாக்களிக்க வேண்டும் என சிவி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்  .அரியநேத்திரனின் ஆதரவுக் கூட்டம் நெல்லியடியில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு 
கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் உங்களுக்கு வாக்குரித்து இருந்தால் நீங்கள் கட்டாயமாக இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்தத் தேர்தலுக்கும் மற்றைய தேர்தல்களுக்கும் என்ன 
வித்தியாசம் என்று கேட்பீர்கள்.    
வித்தியாசங்கள் இருக்கின்றன. முதலாவதாக நாங்கள் முதன் முறையாகத் 'தமிழ்ப்பேசும் மக்கள் நாம்' என்ற அடிப்படையில் இந்தத் தேர்தலில் கலந்து கொள்கின்றோம். இதுவரை 'இலங்கையர் நாம்' என்று 
கலந்து கொண்டோம்.  
அது எமக்கு எந்த நன்மைகளையுந் தரவில்லை. நாம் இதுவரை வாக்களித்த நபர்கள் நாம் வாக்களித்தோம் என்ற நன்றியறிதல் கூட இல்லாது பதவிக்கு வந்ததும் சிங்கள பௌத்த சிந்தனையில் மூழ்கிவிட்டார்கள். அரசியல் யாப்பில் இருப்பவற்றைக் கூடத் தர மறுத்தார்கள்.  
வட கிழக்கு தமிழ்ப்பேசும் மக்கள் வடகிழக்கில் பெரும்பான்மையினர் என்பதை மறந்து எம்மை வெறும் சிறுபான்மையினராகக் கருதி சிங்கள பௌத்த இனவாட்சியின் கனலை எம்மீது படர விட்டார்கள்.  
அதனால்த்தான் நாம் இம்முறை 'நாம் யார்' என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதத்தில் 'நாம் தமிழர் - நமக்கு நாம்' என்ற 
சங்குக் குரலை
 எழுப்பியுள்ளோம்! 'சங்கே முழங்கு' என்று சகல தமிழரையும் சங்குக்கு வாக்களிக்குமாறு கோருகின்றோம். இரண்டாவதாக நாம் கட்சி சார்ந்து இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. கட்சிகள் கடந்து 
தேர்தலில் நிற்கின்றோம். 
 தமிழ்ப் பேசும் மக்களாக நாம் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றோம். கட்சிகள் வேற்றுமையை வலுப்படுத்துவன. சுயநலத்தை உறுதிப்படுத்துவன. ஆனால் இந்தத் தேர்தல் கட்சிகள் கடந்து தமிழ்ச் சமூகமாகச் சிந்தித்து
 ஒற்றுமையை மையமாக வைத்து நாம் நடத்தும் தேர்தல். ஆம்! நாம் தான் இந்தத் தேர்தலை நடத்துகின்றோம். அரசாங்கம் இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க ஜனாதிபதித் தேர்தலை நியமித்தது.
 நாம் அதனை மாற்றி தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தும் ஒரு தேர்தலாக இதனை மாற்றியுள்ளோம். தமிழ் மக்களின் அல்லல்களை அறிவிக்கும் ஒரு தேர்தலாக மாற்றியுள்ளோம். மூன்றாவதாக எமது
 ஒற்றுமையை உறுதிப்படுத்த இந்தத் தேர்தலைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு. 
பாராளுமன்றத் தேர்தலானது தேர்தல் தொகுதிகளில் நடைபெறும். அங்கு உள்ளூர் மக்களே வாக்களிப்பார்கள்; தேர்ந்தெடுக்கவும் படுவார்கள். மாகாணசபைத் தேர்தலும் அவ்வாறே தான். உள்ளூர் மக்களே
 தேர்தலில் நின்று தமது உள்ளூர் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். உள்ளூராட்சி தேர்தல்களும் அவ்வாறே தான் நடைபெறுவன. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே முழு நாட்டையும் மையப்படுத்தி 
நடைபெறுந் தேர்தல். 
இந்தத் தேர்தலில்த்தான் 'குற்றாலத்தில் இடி இடித்தால் கோயம்புத்தூர் விளக்கணையும்!' இங்கு நாம் தேர்தலில் வாக்களிக்கும் விதம் தெற்கு மக்களை கடுப்புக்குள் தள்ளிவிடும். இவ்வாறு நாம் செய்வது 
இதுவரை காலமும் தெற்கு எம்மை ஏமாற்றி வந்ததற்குப் பதிலடியாகும். எம்மைக் கிள்ளுக்கீரையாக இதுவரை பாவித்த தென்னவரை 
சிந்திக்க வைக்கும் தேர்தலாக இம்முறை மாற்றியுள்ளோம். நாடு நலம் பெற வேண்டுமென்றால் எம்மையும் சேர்த்துப் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை நாங்கள் இம்முறை வலுவாக வெளிப்படுத்தியுள்ளோம். கோதாபய சிங்களவரிடம் இருந்து மட்டும் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக முடியும் என்று காட்டினார். 
உயிர்த்த ஞாயிறு அவரின் சிந்தனைக்கு உரம் ஊட்டியது. இம்முறை 'நாமில்லாமல் நீங்களா?' என்ற கேள்வியை தென்னவர் முன் நாம் வைத்துள்ளோம். நான்காவதாக இந்தத் தேர்தலில் சுயநலம் களைந்து நாம் யாவரும் ஈடுபட்டுள்ளோம். எமது வேட்பாளர் 
தேர்தலில் தோற்பார். அது எமக்குத் தெரியும். அவருக்குந் தெரியும். அப்படியிருந்தும் தனது கட்சியுடன் பகைத்துக் கொண்டு அரியநேத்திரன் அவர்கள் எமது கட்டமைப்பின் அழைப்பை ஏற்று 
தேர்தலில் நிற்கின்றார். 
 தேர்தலில் தோற்பது மட்டுமல்ல வருங்காலத் தேர்தல்களில் அவர் ஈடுபட முடியாத சூழலில் கூட தனது சுயநலம் களைந்து தமிழ் மக்களின் அடையாளமாக அவர் பவனி வருகின்றார். நாம் கூட பொது நலம் கருதியே அவருக்காகப் பாடுபடுகின்றோம். அவருக்கு வாக்களித்தால் எமக்கு அமைச்சர் பதவி அல்லது அரச பதவி ஏதும் கிடைக்குமா? கிடைக்காது.
 தேர்தல் முடிந்ததும் அவர் யாரோ நாம் யாரோ? அப்படியிருந்தும் நாம் யாவரும் சேர்ந்து அவருக்காகப் பாடுபடுகின்றோம். 
 ஏன்? எமது வருங்காலத் தமிழ்ப்பேசும் சந்ததியினரை மனதில் வைத்து நாம் இந்த வேட்பாளருக்காக உழைக்கின்றோம். தமிழினத்திற்காக உழைக்கின்றோம். தமிழ் மொழிக்காக உழைக்கின்றோம். தமிழரின் தாயக பூமி பறிபோகின்றதே என்பதற்காக உழைக்கின்றோம். இந் நாட்டின் தமிழ் மக்கள் பறங்கியர்களின் கதிக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக
 உழைக்கின்றோம். 
ஆகவே தமிழ் மக்கள் ஆகிய நாம் யாவரும் சுயநலம் களைந்து தமிழர் தம் பொது நலம் கருதி இந்தத் தேர்தலில் கட்சி கடந்து கடமையாற்றுகின்றோம். தமிழரசுக் கட்சி அரியநேத்திரன் அவர்களுக்கு 
தமிழ் மக்கள் கூட்டணி மணிவண்ணன் அவர்கள் குரல் கொடுக்கின்றார். நுPசுடுகு திரு.சுரேஷ; பிரேமச்சந்திரன் அவர்கள் குரல் கொடுக்கின்றார். தமிழ்த் தேசியக் கட்சியின் திரு.ஸ்ரீகாந்தா அவர்கள் குரல் கொடுக்கின்றார். நாம் யாவரும் தமிழர் என்ற ரீதியில் எமது வருங்கால 
வம்சத்தவரை நினைத்து இன்று வேற்றுமை களைந்து ஒற்றுமையாகப் போராடுகின்றோம். 
ஐந்தாவதாக இவ்வாறு நாம் சேர்ந்து பயணிக்கும் போது எம்முள் இருக்கும் காட்டிக் கொடுக்கும் பகையாளிகளை நாம் அடையாளப்படுத்துகின்றோம். எட்டப்பர்களை அடையாளப்படுத்துகின்றோம். 
அவர்களைத் தவிர்த்து நாம் எம் பவனியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழ் பொது
 வேட்பாளருக்கு வாக்களிக்கப்படாது என்று மேடையேறி முழங்குவேன் என்றவர் இன்னமும் அந்தக் கூட்டத்தைக் கூட்டவில்லை. அடுத்த பாhரளுமன்றத் தேர்தலில் தெற்கத்திய கட்சி ஒன்றில் இருந்து
 அவர் நியமனம் பெறுவதே அவருக்குச் சாலச் சிறந்தது. இன்னுமொருவர் தேர்தலைப் பகிஷ்கரிப்போம் என்றார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 13 செப்டம்பர், 2024

நாட்டில் திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்

நாட்டில் யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது.
 வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றாக அழிப்பதே இந்த நில அபகரிப்பு
 முயற்சிகளின் பிரதான இலக்காகும் என த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்டினால் வெளியிடப்பட்டுள்ள நில அபகரிப்பு தொடர்பான புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கிவரும் 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' என்ற கல்வியகத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப்பணிப்பாளருமான அனுராதா மிட்டால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கிவரும் 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' என்ற கல்வியகத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் 
இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள் தொடர்பான தரவுகளையும், ஆவணப்படுத்தல்களையும் உள்ளடக்கிய 'ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை: இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைக்கும் நில அபகரிப்பு' எனும் தலைப்பிலான 32 பக்க ஆய்வறிக்கையொன்று
 வெளியிடப்பட்டுள்ளது.
 இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டு குடியேற்றங்கள் நிறுவப்பட்டிருப்பதாகவும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதிலிருந்து இக்குடியேற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் அந்த
 ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வலுவற்றவர்களாக்கும் பொருட்டு அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தினரால் கையாளப்பட்டுவரும் பலதரப்பட்ட உத்திகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
 'யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற 
கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றாக அழிப்பதே இந்த நில அபகரிப்பு முயற்சிகளின் பிரதான இலக்காகும்' என த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்டின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப்பணிப்பாளருமான அனுராதா மிட்டால் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
 இந்த ஆய்வறிக்கையின் பிரகாரம், நில அபகரிப்புக்களின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தற்போது 27 சதவீதமாக இருக்கும் சிங்கள மக்கள், அந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 சதவீதத்தைத் தம்வசம் வைத்திருக்கின்றனர். அங்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட
 நிலப்பரப்பு (41,164 ஏக்கர்) அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 10 வருடங்களில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 
நீர்ப்பாசனத்திட்டங்கள், துறைமுக நவீனமயமாக்கல், சக்திவலு உற்பத்தி, சுற்றுலாத்துறை மேம்பாடு என்பன உள்ளடங்கலாக 'அபிவிருத்தி' எனும் போர்வையில், 'சிங்களமயமாக்கல்' நடவடிக்கையின் ஓரங்கமாக இந்த நில அபகரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன. அதேபோன்று 
தொல்லியல் திணைக்களம், வன இலாகா, மகாவலி
 அதிகாரசபை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு அரச கட்டமைப்புக்கள் இந்த நில அபகரிப்பின் மூலம் இடம்பெறும் 'சிங்களமயமாக்கல்' நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் 'ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை' என்ற ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
 'தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதானது பௌத்தமயமாக்கலை 
மேற்கொள்வதற்கும், குடித்தொகைப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசார சின்னங்களை அழிப்பதற்கும் வாய்ப்பேற்படுத்துகின்றது.
 2009 ஆம் ஆண்டிலிருந்து குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 3887 ஏக்கர் நிலப்பரப்பில் 26 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இலங்கை இராணுவத்தின் 7 பிராந்திய தலைமையகங்களில் ஐந்தை 
வட, கிழக்கு மாகாணங்களில் நிறுவியிருப்பதன் மூலம்
 இம்மாகாணங்கள் தொடர்ந்து உச்சளவில் இராணுவமயமாக்கப்பட்டுள்ளன. 
இது அப்பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கும், சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கும், நிலங்களை அபகரிப்பதற்கும் உதவுகின்றது' எனவும் த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட் தெரிவித்திருக்கிறது.
தமிழரின் கலாசாரத்தை அழிப்பதே பிரதான நோக்கம் அமெரிக்க ஆய்வறிக்கை
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 12 செப்டம்பர், 2024

இலங்கை இருவது வருடங்களில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் ஜனாதிபதி ரணில் உறுதி

இலங்கை  இன்னும் 20 வருடங்களில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்பதில் இளைஞர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க
 தெரிவித்துள்ளார். 
திருக்கோவிலில் 11-09-2024.அன்று  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு 
தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார திஸாநாயக்க எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர்கள் 
ஆட்சிக்கு வந்தால் தற்போதுள்ள பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் எனவும் 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் 
தெரிவித்துள்ளார். 
“புதிய தொழில் நுட்பத்தில் திருக்கோவில் விவசாயத்தை மேம்படுத்தி வருகிறோம். கடலைச் சாதகமாகப் பயன்படுத்தி மீன்பிடித் துறையை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
20 வருடங்களில் நல்ல நாட்டில் வாழ்வோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும். 5 வயது குழந்தைக்கு 25 வயது ஆவதற்குள் நல்ல நாடு உருவாக வேண்டும். அதை பெற நாங்கள் உழைக்கிறோம்.
 அதனால்தான் வாக்களிக்க அழைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 
குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 11 செப்டம்பர், 2024

தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்க வேண்டும்

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார்.
 அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக
 மக்களும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களும்
 அவருக்கு ஆதரவாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிகுந்த 
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன்
 தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை ஒன்றிணைப்பதற்காக இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கியிருப்பதாகக் கூறுகிறீர்கள். அவ்வாறெனில் தமிழ்பேசும் மலையகத் தமிழர்களும், கிழக்கு மாகாண
 முஸ்லிம் மக்களும் தமிழர்கள் இல்லையா? அவர்களை 
ஏன் உங்களது தமிழ் பொதுவேட்பாளருக்கு
 வாக்களிக்குமாறு 
கோரவில்லை? என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு 
அளித்திருக்கும் பதிலில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கும் சி.வி.விக்கினேஸ்வரன், இதுபற்றி மேலும் 
கூறியிருப்பதாவது:
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார். அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக 
மக்கள் அவர் சார்பாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை 
அவர் மிகுந்த
 மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். தமிழர்கள் என்ற ரீதியில் மலையகத்தமிழர் ஒவ்வொருவரும் தமது மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை அவருக்கு அளிப்பதை அவர் கட்டாயமாக மனமுவந்து 
ஏற்றுக்கொள்வார்.
ஆனால் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சனைகள் வேறு, மலையக சகோதர சகோதரிகளின் பிரச்சனைகள் வேறாகும். எனினும் நாம் யாவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்று சேரலாம். அதில் தவறில்லை. 
அது மட்டுமல்ல, 1977ஆம் ஆண்டளவில் மலையகத்திலே முடுக்கி விடப்பட்ட கலவரங்கள் காரணமாக அங்கிருந்து 
இடம்பெயர்ந்துவந்த 
பல மலையகத் தமிழர்கள் வன்னி மாவட்டத்தில் குடியேறியுள்ளார்கள். இப்போது அவர்கள் எமது மக்களாவர். வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பாரம்பரிய உரிமைகள் அவர்களையும் சாரும். ஆகவே தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் எமது தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க
 முன்வர வேண்டும்.
வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களிடையே இன்று ஒரு மறுமலர்ச்சி பரிணமித்திருக்கின்றது. உலக அரங்குகளில் எமது குரல் ஓங்கி ஒலிக்க நாம் ஒரு பலமான மக்கள் கூட்டம் என்ற உண்மையை நிலைநிறுத்துவது அவசியம். இவ்வாறான ஒரு

 தமிழ் மொழி சார்ந்த ஈடுபாடு மலையகத்திலும், கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. நாம் யாவரும் தமிழ்த் தாயின் மக்களே என்ற உணர்வை இந்த ஈடுபாடும் நிலைப்பாடும் ஏற்படுத்துகின்றன.

அண்மையில் 30க்கும் மேற்பட்ட மலையக புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் போன்றோர் அரியநேத்திரனுடன் இணையவழியில் தொடர்புகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். தாம் யாவரும் ஒன்றுபட்ட தமிழினமாக தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாகவும், மலையகத்தில் அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். அத்துடன் பொதுவேட்பாளரை மலையகத்திற்கு மக்கள் சந்திப்புக்காக அழைத்துள்ளனர். பொதுவேட்பாளரும் அவர்களது கூட்டத்தில் பங்கேற்க இணங்கியுள்ளார்.

நான் தொடக்கத்தில் இவ்வாறு கோராததற்குக் காரணம் கிழக்கிலங்கை முஸ்லிம் தலைவர்கள் பலர் வட, கிழக்கு இணைப்பை ஏற்க மறுக்கின்றார்கள். மற்றும் மலையகத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் நாம் எமது பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் எமது அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்துவதை அவ்வளவாக வரவேற்கவில்லை.

பெரும்பான்மை வேட்பாளர்களுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஆனால் இப்பொழுது எமது மலையக சகோதர சகோதரிகளும், கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதர 
சகோதரிகளும் நாம் யாவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுசேர விரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது. 
பொதுவேட்பாளர் கட்டாயமாக வட, கிழக்கு பிரமுகர்களை மலையக பிரச்சாரப்பணிகளுக்காக அனுப்பிவைப்பார் என்று நம்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 10 செப்டம்பர், 2024

இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாகஆயிரத்தி முன்னுறி ஐம்பது ரூபாவை வழங்க இணக்கம்

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ இலைக்கு 50 ரூபா கொடுப்பனவும் 
வழங்குவதற்கு 10-09-2024.இன்று  சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் 
எட்டப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், தோட்ட முதலாளிகள் மற்றும் தோட்டத் தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
அதன்படி இன்று முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு 
தொழிலாளர் ஆணையாளர் நடவடிக்கை 
எடுக்கவுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொழிலாளர் இராஜாங்க அமைச்சர்  வடிவேல் சுரேஷ், "தோட்டத் தொழிலாளி ஒரு நாள் வேலைக்குத் திரும்பினால் EPF மற்றும் ETF உடன் 1,552 ரூபாய் பெற வேண்டும் என்று நாங்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தோம்."
அதாவது EPF மற்றும் ETF இல்லாமல் 1,350 ரூபாய். ஆனால் அது 1,350 மற்றும் எஸ்டேட் தொழிலாளிக்கு அதிக சுமை கொடுக்க முடியாது. தோட்டத் தொழிலாளியின் உழைப்பை மட்டுப்படுத்த முடியாது.
 அதிகமாக உழைத்தால் அடிப்படைச் சம்பளத்தை 
விட அதிகமாக சம்பாதிக்க முடியும். 350 ரூபாயாக 
மட்டுப்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 
குறிப்பிடத்தக்கது   என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

Blogger இயக்குவது.