திங்கள், 30 ஜனவரி, 2017

யாழ் மாணவர் படுகொலை; பொலிஸ் விசாரணை இடை நிறுத்தம்!!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம் பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களமானது மேற்கொண்டு வந்த விசாரணையானது இடைநிறுத்த ப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவானது மன்றில் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களது
 உறவினர்களிற்கு இவ் வழக்கு தொடர்பாக ஏதாவது அச்சுறுத்தல் காணப்பட்டால் அது தொடர்பில் நீதிமன்றுக்கோ அல்லது பொலிஸ்மா அதிபருக்கோ தெரியப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அண்மையில் வைத்து
 யாழ்.பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தி யோகத்தர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான 
வழக்கு விசாரணையானது யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் இவ்வழக்கு விசாரணையானது யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம் மற்றும் சட்டத்தரணி சயந்தன் ஆகியோர்
 முன்னிலையாகியிருந்தனர். இதன்போது மன்றில் இவ்வழக்கு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு அதிகாரி விசாரணை தொடர்பான மேலதிக அறிக்கையை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.
மேலும் இச் சூட்டு சம்பவம் தொடர்பாக
 பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையானது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர். அத்துடன் இவ் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் காணப்படுமாயின் அது தொடர்பில் நீதிமன்றுக்கோ அல்லது பொலிஸ்மா அதிபருக்கோ தெரியப்படுத்த முடி யும் எனவும் நீதிவான் குறிப்பிட்டார்.
கொல்லப்பட்ட மாணவர்களின் மரணச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ள தாகவும் நீதிவான் தெரிவித்துடன் சந்தேக நபர்க ளான ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.