சனி, 11 மார்ச், 2023

மீண்டும் சீனாவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த தீர்மானம்

சீனாவில் முதன்முறையாக கொரோனோ தொற்று கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கி விட்டது. தடுப்பூசி, ஊரடங்கு போன்ற நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அது அடுத்தடுத்து உருமாறி இன்னும் இந்த நோயின் தாக்கம் இருந்து 
கொண்டு தான் உள்ளது. 
இந்த சூழ்நிலையில் சீனாவில் மீண்டும் காய்ச்சல் தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். 
நோய் தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதால் அதனை கட்டுப்படுத்த சீனாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 
சீயான் மற்றும் ஷாங்கி நகரங்களில் தான் இதன் வேகம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து காய்ச்சலால் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் 
வெளியாகி உள்ளது. 
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள்
 விடுக்கப்பட்டு இருக்கிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வெள்ளி, 10 மார்ச், 2023

அனைவரும் யாழில் பார்க்க வேண்டிய முக்கிய தமிழ் தொன்மை பேசும் இடங்கள்.

  யாழ்  நெடுந்தீவு என்பது வட இலங்கையின் பூங்காவில் உள்ள ஒரு தீவு ஆகும். மற்ற தீவுகளை போலல்லாமல், இந்த தீவு அட்மிரால்டி விளக்கப்படத்தில் டெல்ஃப்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது, அதன் அறிகுறிகள் தமிழ் ஆகும். தீவின் பரப்பளவு 50 கிமீ², இது கிட்டத்தட்ட ஓவல் வடிவத்தில் உள்ளது. இதன் நீளம் 8 கிமீ, அதன் அதிகபட்ச அகலம் சுமார் 6 கிமீ.
தீவின் வாழ்க்கை உற்சாகமானது, ஆனால்  நேர்மையானது. வீடுகளைச் சுற்றியுள்ள பவளச் சுவர்கள் பனை மரங்களைப் போலவே குறியீடாக உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எஞ்சியிருந்த டச்சு எச்சங்கள் 
இங்கு உள்ளன. இன்று இங்கு பொருளாதார வசதிகள் அருகிய தமிழ் மீனவ சமூகத்தைச் சார்ந்த 2500 இருந்து 3000 மக்களே கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 9 மார்ச், 2023

உங்கள் தொலைபேசிக்கு இரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்குபவர்கள் படிக்க வேண்டிய பதிவு

Night mobile Charge போட்டுட்டு தூங்கினா battery health issue வருமா..?நிறைய நேரம் mobile charge போடும் போது அது வெடிச்சுடும் / battery க்கு பாதிப்பு வரும் இதுலாம் நாம காதால கேக்குற நம்புற விஷ்யம் ஆனா இதுலாம் உண்மையா..?கண்டிப்பா சில வருடங்கள் முதல் வரைக்கும் உண்மை தான்.. மொதல்ல எப்பிடி battery பாதிப்பு வருதுனு பாப்போம்.
நம்ம mobile phone la இருக்க battery ஓட சேமிப்பு அளவையும் தாண்டி சார்சர் மூலமா தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் போது mobile battery health குறைய அதிக வாய்ப்புக்கள் இருக்கு ஆனா அதை தடுக்குறதுக்காக தான் இப்போ வாற சார்ஜர்ஸ் + உங்க மொபைல்ஸ் ல ஒரு தொழில்நுட்பம் 
பயன்படுத்தப்படுது அது மூலமா உங்க உங்க mobile phone & charger கமினியூகேட் பண்ணிக்கும்
தெளிவா சொல்லனும்னா நீங்க சார்ஜர் ஐ கனெக்ட் பண்ணதும் உங்க மொபைல் எத்தனை வாட் சார்ஜ் சப்போட்.. எண்டத மொதல்ல தெரிஞ்சுகிட்டு அதுக்கு ஏற்ற அளவுல உங்க மொபைல் போனுக்கு மின்சாரம் வழங்கப்படும் இதனால தான் உங்க மொபைல் போன் ல குறிப்பிட்டத விடவும் அதிக வாட் சார்ஜர் போட்டா கூட அதிக மின்சாரம் போய் உங்க மொபைல்க்கு எதுவும் ஆகுறது இல்ல
சேம் இதே மாதிரி உங்க மொபைல் ல சார்ஜ் full ஆனதும் battery க்கு போற மின் இணைப்பை தற்காலிகமா நிறுத்தி வைச்சு மறுபடியும் குறையும் 
போது சார்ஜ் பண்ணிக்கும்
இது பெரும்பாலும் இப்போ வாற எல்லா மொபைல்போன்ஸ்லயும் இருக்க விஷ்யம் தான்.ஐபோன்ஸ் ல கொஞ்சம் அப்டேட்டா இதுக்கு தனியா ஒரு ஆப்சனே இருக்கு “Optimised Battery Charging” எண்டு இத ஆன் பண்ணும் போது நீங்க காலேல என்ன டைம் மொபைல் 
ஆன் பண்றிங்க 
எண்டத அவதாணிச்சு.. நீங்க நைட் ல சார்ஜ் போட்டது 80% த்தோட charge ஆகுறது off ஆகி நீங்க எந்திரிக்குறதுக்கு 1h முன்னாடி again சார்ஜ் ஆகி 100% ல நீங்க எந்திரிக்கும் போது இருக்கும்
இதுக்கு எல்லாம் முக்கியமானது உங்க சார்ஜர் நல்ல தரமான சார்ஜரா இருக்கனும் அது மட்டும் போதுமானது.குறிப்பு : மேலே நான் நைட் சார்ஜ் போட்டா தொலைபேசிக்கு எந்த பாதிப்பும்
 இல்லனு சொன்னனே 
தவிர அது 100% பாதுகாப்பனதுனு சொல்ல முடியாது.. ஏதேனும் ஒரு சிறிய தவறு விபரீதத்தில் முடியலாம் ஆகவே இரவில் ராஜ் போடுங்க ஆனா பாதுகாப்பான தூரத்துல எளிதில் தீ பற்றாத பொருட்களுக்கு பக்கத்த
 வச்சு சார்க் போடுங்க

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 8 மார்ச், 2023

இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது இலங்கை குறித்த முக்கிய அமர்வு

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது 
மீளாய்வுக்கூட்டம்.08-03-2023. இன்று ஆரம்பமாகி, நாளைய தினமும் 
நடைபெறவுள்ளது.
இம்மீளாய்வு செயன்முறைக்கென உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும், சிவில் சமூகக்கட்டமைப்புக்களும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் பெருமளவில் எதிர்மறையான விடயங்களை உள்ளடக்கிய அறிக்கைகளை மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளன.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானதுடன், அக்கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை 
நடைபெறவுள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழு என்பது 18 சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் ஓர் கட்டமைப்பாகும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகள், 
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச 
சமவாயத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றன என்பதைக் கண்காணிப்பதும், மீளாய்வு செய்வதுமே இக்கட்டமைப்பின் பிரதான பணிகளாகும்.
இலங்கை கடந்த 1980 ஜுன் 11 ஆம் திகதி சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தை ஏற்றுக்கொண்டது. அதன்பிரகாரம் அச்சமவாயத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் அனைத்து நாடுகளும் அதனை நடைமுறைப்படுத்தும் அதேவேளை, மனித உரிமைகள் 
மீளாய்வுக்குழுக்கு அவ்வப்போது அறிக்கைகளை சமர்ப்பிப்பதுடன் மீளாய்வு செயன்முறையில் பங்கேற்கவேண்டிய கடப்பாட்டைக் 
கொண்டிருக்கின்றன.
அதன்படி இலங்கை 1983, 1990, 1994, 2003 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் காலாந்தர அறிக்கைகளை சமர்ப்பித்திருப்பதுடன் 1983, 1991, 1995, 2003 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மீளாய்வுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளது.
அதன்தொடர்ச்சியாக இலங்கையின் 6 ஆவது காலாந்தர அறிக்கை கடந்த 2019 பெப்ரவரி 22 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, அதனை அடிப்படையாகக்கொண்ட 6 ஆவது மீளாய்வு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
இம்முறை 6 ஆவது மீளாய்வு செயன்முறையானது இலங்கையின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவின் தலைமையில் கலப்பு வடிவத்தில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 7 மார்ச், 2023

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவர்களுக்கு கவலையான செய்தி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வருகிறது.அதன்படி, இன்றைய 
தினம் டொலரின் 
கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி
 தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வெள்ளைகிழமைன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 334 ரூபா 50 சதமாகவும், விற்பனை விலை 348 ரூபா 03 சதமாகவும் பதிவாகியிருந்தது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






திங்கள், 6 மார்ச், 2023

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கைத்தமிழர்

 இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுகின்றார் என தகவல்கள் 
வெளியாகின்றன.
யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்து நபரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர் பலவந்தமாக நாடு கடந்த்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றதாகவும் 
கூறப்படுகின்றது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 5 மார்ச், 2023

கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக மரை இறைச்சியை எடுத்து வந்தவர் கைது

சட்டவிரோதமாக மரை இறைச்சியை எடுத்து வந்தவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் இன்றையதினம் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 3 கிலோ மரை இறைச்சியை கிளிநொச்சியில் இருந்து எடுத்து வந்தவேளை ஊர்காவற்துறை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். அவரை.05-03-2023. இன்றையதினம் 
ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.