வெள்ளி, 14 ஏப்ரல், 2023

நோர்வே அரசாங்கம் 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றியுள்ளது

உளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டுக்காக 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நோர்வே அரசாங்கம் அதிரடியாக 
வெளியேற்றியுள்ளது.
கடந்தாண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கியதுடன் சில நாடுகள் அவர்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்கவும் மறுத்திருந்தன.
உளவுத்தகவல்களை திருடும் ரஷ்ய  அதிகாரிகள்
இந்த நிலையில், ரஷ்யாவின் அயல் நாடான நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனை நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக நோர்வே கருதிய நிலையில், குறித்த அதிகாரிகளிடத்தில் விசாரணைகளும் நடத்தப்பட்டு அவர்களது செயல்பாடுகள் இராஜதந்திர நடவடிக்கைகளுடன் பொருந்தவில்லை என நோர்வே முடிவு
 செய்துள்ளது.
இதனையடுத்து நோர்வேயில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 15 பேரை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை நோர்வே அரசாங்கம் நேற்று வெளியிட்டது.
இது குறித்து கருத்து வெளியிட்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் அன்னிகென் ஹூய்ட்பெல்ட் கூறுகையில்,
ரஷ்யாவின் உளவுத்துறை நடவடிக்கைகளின் நோக்கத்தை எதிர்ப்பதற்கும், அதன் மூலம் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும் இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும் எனத் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த ஆண்டிலும் இதுபோல 3 தூதரக அதிகாரிகளை நோர்வே வெளியேற்றியிருந்தது. இதேசமயம் நோர்வே அரசாங்கத்தின் இந்த செயலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 13 ஏப்ரல், 2023

திருப்பூரில் 2000 ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் குழந்தையை கடத்திய தம்பதியை கைது

இரண்டாயிரம் ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் இரண்டரை வயது ஆண் குழந்தையை ஜோலார்பேட்டையிலிருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார் பிடித்தனர்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி ஆண் குழந்தையுடன் சுற்றித் திரிந்த தம்பதி குறித்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தம்பதியிடம் போலீசார் விசாரணை 
நடத்தினர்.
விசாரணையில் ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் தங்கி தூய்மைப்பணி செய்யும் வேலு-வள்ளி தம்பதி, உடன் பணியாற்றும் டென்னி என்பவரின் குழந்தையை கடத்தி வந்தது
 தெரிய வந்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 12 ஏப்ரல், 2023

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் சட்ட மன்றத்தில் இன்று அறிவிப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய போது, பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடல்தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் மூடப்படும். அவ்வகையில், இந்த ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சம்பளம் உயர்வு 
டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு 1,100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய் மற்றும் உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக சம்பளம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கானல் நீராகும் முழு மதுவிலக்கு
டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு, பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த 500 டாஸ்மாக் 
கடைகள் மட்டும் தான் தமிழ்நாட்டில் உள்ளதா எனும் கேள்வி 
மக்கள் மத்தியில் கேட்கப்பட்டுள்ளது. ஏனென்றால் 
எங்க பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் குறையில்லை. இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. முழு 
மதுவிலக்கு தான் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், இன்று வரையிலும் அது மட்டும் நடக்கவே இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு முழு மதுவிலக்கு என்பது இன்னும் கானல்
 நீராகவே உள்ளது.


 


செவ்வாய், 11 ஏப்ரல், 2023

நாட்டில் பள்ளிப் பைகள், காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க முடிவு

நாட்டில் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில்
 பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைப் பைகள் மற்றும் காலணிகளின் 
விலைகள் 
தொடர்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு
 தெரிவித்தார்.
தற்போது காலணி மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு உள்ளுர் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மட்டுமே இறக்குமதி
 செய்யப்படுகின்றன.
டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் சியம்பலாபிட்டிய, வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களம் இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை வழங்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் , விலை குறையவில்லை என்றால் உடனடியாக ஜனாதிபதிக்கு அறிவித்து விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 10 ஏப்ரல், 2023

நாட்டில் கடவுச்சீட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்காக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதியன்று நேரம் ஒதுக்கிக் கொண்டவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தலொன்றை 
விடுத்துள்ளது.
அதன்படி அன்றைய தினத்தில் நேரம் ஒதுக்கியவர்கள் நண்பகல் 12 மணிக்கு முன்னர் திணைக்களத்துக்கு வருகை தந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.   


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

மேலும் கனடாவில் குடியேற காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்

கனடாவிற்கு குடியேறுவதற்காக பல நாடுகளில் இருந்தும் விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்பி 
வைத்துள்ளனர். 
இந்நிலையில் கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலரின் ஆவணங்கள் நீண்ட காலமாமக கிடப்பில் போடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தில் உத்தியோகத்தர் ஒருவர், பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாது சில ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
கனடிய ஊடகங்கள் இந்த விடயம் பற்றிய விபரங்ளை 
வெளியிட்டுள்ளது. 
இந்த தகவல்களைத் தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசிலனை செய்யும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்கம், அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 
இது குறித்த அவசர மின்னஞ்சல்கள் பல்வேறு மட்டங்களிலும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே பரிசீலனை செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த குடிவரவு ஆவணக் கோப்புகள் வேறும் உத்தியோகத்தர்களிடம்
 பொறுப்பளிக்பபட்ள்ளது. 
கனடாவில் ஏதிலி அந்தஸ்தினை பெற்றுக்கொள்வதற்காவும் மற்றும் குடியேற்றம் தொடர்பிலும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்ய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 8 ஏப்ரல், 2023

கருக்கலைப்பு மாத்திரை பயன்பாட்டில் அமெரிக்காவில் அரசு நீதிபதிகளின் தீர்ப்பால் பரபரப்பு

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையானது, கடந்த 50 ஆண்டுகாலம் நீடித்து வந்த நிலையில், தேசிய அளவிலான சட்டபூர்வ உத்தரவை கடந்த ஆண்டு ஜூனில், அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து 
தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட பலரும் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அதிருப்தி 
தெரிவித்தனர்.
இந்நிலையில், கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்துவது பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய இந்த கருக்கலைப்பு மாத்திரைகளை வீட்டில் இருந்தபடியே உபயோகப்படுத்தி 
கொள்ளலாம். மருத்துவ உதவி எதுவும் தேவைப்படாது. பிற மாத்திரைகளை விட இது வேறுபட்டு உள்ளது. பாலியல் உறவுக்கு பின்னர் கர்ப்பம் உருவாகாமல் இருக்க, பிற மாத்திரைகளை பெண்கள் 
எடுக்கின்றனர்.
இந்த மாத்திரையானது, பெண் கர்ப்பிணியானது உறுதியானதும் கருக்கலைப்பு நடைபெறுவதற்கான விசயங்களை தூண்டுகிறது. உண்மையில் இதனுடன் கூடுதலாக ஒரு மருந்தும் எடுத்து கொள்ள வேண்டும்.
முதலில், மைப்பிரிஸ்டோன் ஆனது புரோஜெஸ்டிரோன் எனற ஹார்மோன் உற்பத்தியை தடுக்கிறது. அதற்கு 48 மணிநேரத்திற்கு பின் 
எடுத்து கொள்ளும் மிசோபுரோஸ்டால் மருந்து, ரத்தபோக்கு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி பெண்ணின் கருப்பை முழுவதும்
 காலி செய்கிறது.
இந்த மைப்பிரிஸ்டோன் மற்றும் மிசோபுரோஸ்டால் மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை (எப்.டி.ஏ.) 2000-ம் ஆண்டில் அனுமதி வழங்கியது.
10 வார கர்ப்பத்திற்குள் மாத்திரைகளை எடுத்து கொள்ளும்போது, அது வெற்றியடைகிறது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு விதித்த தடையை தொடர்ந்து, 13 அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்புக்கு 
தடை அமலில் உள்ளது.
எனினும், கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி அளிக்கப்பட்ட மாகாணங்களில், மற்ற மருந்துகளை போன்று மேற்கூறிய மாத்திரைகள் விநியோகத்தில் மருந்து நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. நேரடியாக விற்பனை செய்தும் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடனான குறிப்புகளின்படி மருந்துகளை மெயில் வழியே அனுப்பியும் வருகின்றன.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தடை அமெரிக்காவில் ஒரு புறம் சர்ச்சையை கிளப்பியபோதும், டெக்சாஸ் மற்றும் வாஷிங்டனில் உள்ள நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை நேற்று வழங்கியது மற்றொரு சர்ச்சை 
ஏற்படுத்தி உளளது.
இதன்படி, கருக்கலைப்பு மாத்திரைக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஒப்புதல் அளித்தபோதும், டெக்சாஸ் நீதிபதி, 7 நாள் காலஅவகாசம்
 கேட்டு உள்ளார்.
ஆனால், நேற்றிரவு வாஷிங்டன் நகர அரசு நீதிபதி, 12 மாகாணங்களில் இந்த மாத்திரை கிடைக்கும் வகையில் எப்.டி.ஏ. பார்த்து கொள்ள வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது. இதனால், நீதிபதிகளின் 
இருவேறு தீர்ப்பால் அடுத்து என்ன செய்வது என் தெரியாமல் மக்கள் மற்றும் அரசு காத்திருக்கிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.