வெள்ளி, 7 அக்டோபர், 2022

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தால் கடுமையாக்கப்படும் நிபந்தனைகள்

கடனில் இருந்து விடுவிக்க தமது கொள்கைகளுடன் பொருந்தக்கூடிய இலங்கையின் செயற்பாடுகளுக்காக தாம் காத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஸ்ட செயற்பாட்டு அதிகாரி மசாஹிரோ நொசாக்கி இதனை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பணியாளர் மட்ட இணக்கம்
ஏற்கனவே கடந்த செப்டெம்பர் முதலாம் திகதியன்று இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும், 2.9 பில்லியன் டொலர்களுக்கான பணியாளர் மட்ட இணக்கத்தை எட்டின.
இதன் அடிப்படையில், இலங்கைக்கு 48 மாதங்களில் செலுத்தக்கூடிய வகையில் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவியை 
மேற்கொள்ளும்.
எனினும் அதற்கு முன்னதாக ஏற்கனவே தமக்கு கடன் வழங்கியவர்களுடன் கடன் மீள்செலுத்துகை சீரமைப்புக்களை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.
எனவே இலங்கை இதனை நிறைவேற்றும் வரை, தாம் காத்திருப்பதாக நொசாக்கி குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
இலங்கையை பொறுத்தவரை அது சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆசிய முக்கிய நாடுகளுடனும், சர்வதேச கடன் வழங்குனர்களுடனும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள 
வேண்டியுள்ளது.
இந்த நிபந்தனை நிறைவேற்றப்பட்டவுடன் தற்போதுள்ள பணியாளர் மட்ட உடன்பாடு, சர்வதேச நாணய நிதிய நிர்வாக குழுவுக்கு பாரப்படுத்தப்பட்டு இலங்கைக்கு கடனை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் நொசாக்கி தெரிவித்துள்ளார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 6 அக்டோபர், 2022

மகிழ்ச்சியான செய்தி கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், வசதியான வீடுகள் மற்றும் உரிமைப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர்பிரதீப் ரத்நாயக்க 
தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் 30,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
“நாட்டில் சமீபகாலமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், வீடுகள் கட்டுவதில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடியை வென்று மீண்டும் நாட்டில் அபிவிருத்திப் போரை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
அதற்கேற்ப, வீட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொழும்பு நகரில் வீடற்ற மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க சுமார் இரண்டு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். எந்த நெருக்கடி வந்தாலும் அந்த இலக்கை அடைய அமைச்சகம் ஏற்கனவே சில திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
மேலும், திறைசேரியின் பணத்தில் சுமார் 260 நகர அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஐந்து வேலைத்திட்டங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சகம், 
மேம்பாட்டு 
அனுமதிகளின் ஒப்புதலை விரைவுபடுத்துவதற்காக One-Stop Unit, OSU என்ற சேவைப் பிரிவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி அனுமதிகளை அங்கீகரிக்கும் அனைத்து நிறுவனங்களையும் சேர்த்து இந்த சேவை பிரிவு நிறுவப்பட உள்ளது. வளர்ச்சி 
அனுமதிகளை அங்கீகரிக்க எடுக்கும் நேரத்தை குறைத்து, எளிமையாக்குவதன் மூலம், அதிக முதலீட்டை ஈர்க்க முடியும் எ
ன நம்புகிறோம்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு வீடு 40,000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு மேலதிகமாக, வீடுகளை கொள்வனவு செய்ய வெளிநாட்டவர்களிடமிருந்தும் பல 
கோரிக்கைகள் வந்துள்ளன.
அதற்கமைய, இந்த ஆண்டு இறுதிக்குள் டொலருக்கு வீடுகளை விற்கும் இலக்கை எளிதில் எட்டிவிடுவோம். மேலும், குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.இது 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய கட்டத்திற்கு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் மேலும்
 தெரவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 5 அக்டோபர், 2022

நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.

<

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் .05-10-2022.இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர், எரிசக்தி அமைச்சர் கஞ்சன
விஜேசேகரவின் ஒத்துழைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கான ‘Tap & Go’ எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறினார்.சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்கும் திட்டமும் 
முன்னெடுக்கப்படவுள்ளது.
சுற்றுலாத் துறையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற சிறப்பு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்குவது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு, அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>

செவ்வாய், 4 அக்டோபர், 2022

நாட்டில் கையடக்க தொலைபேசி வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

இலங்கையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன் பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய வருடாந்த வருமானம் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பெறும் வர்த்தகர்களுக்கு சமூக பாதுகாப்பு வரி அறிவிடப்படுகிறது.இதனையடுத்து பெரிய இறக்குமதியாளர்கள் பொருட்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கும்போது வரியைச்
 சேர்க்கின்றனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 3 அக்டோபர், 2022

நாட்டில் புகையிரதநிலைய அதிகாரியின் அதிரடி நடவடிக்கையினால் 129 பயணிகளுக்கு தண்டப்பணம்

இலங்கையில் கொம்பனி வீதி புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நிலைய சேவையாளர்கள் கடந்த செப்டெம்டர்  மாதம் 08-09-2022.ஆம் திகதி முதல் செப்டெம்டர் மாதம் 30-09-2022. ஆம் திகதி வரை பயணிகளின் பயணச்சீட்டு பரிசோதனையை முன்னெடுத்தனர். இக்காலப்பகுதியில் மாத்திரம் 129 பேர் பயணச்சீட்டு இல்லாமல் புகையிரதத்தில் பயணம் 
செய்துள்ளனர்.
கொம்பனி வீதி புகையிரத நிலையத்தில் இரண்டு வெளியேறல் வாயில் காணப்படுகிறது. நீதியரசர் அப்கர் மாவத்தை பக்கம் உள்ள வெளியேறல் வாயிலில் இருந்து மேற்கொண்ட பயணச்சீட்டு பரிசோதனையின்
 போதே 129 பேர் இவ்வாறு அகப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சுமார் நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூறு ரூபா குறித்த காலப்பகுதியில் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.கொம்பனி வீதி புகையிரத நிலையத்தில் 18 சேவையாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 6 சேவையாளர்கள் மாத்திரமே சேவையில் 
ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
புகையிரத நிலையத்தில் உத்தரானந்த மாவத்தை பக்கம் உள்ள வெளியேறல் வாயிலில் பயணச்சீட்டு பரிசோதனை செய்யப்படுவதில்லை.புகையிரத நிலையங்களில் சேவைக்கான பதவி வெற்றிடம் காணப்படுவதால் பயணச்சீட்டு பரிசோதனை உள்ளிட்ட இதர சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாகவே பதவி வெற்றிடங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம் 
என்று கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 2 அக்டோபர், 2022

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் கல்வி அமைச்சால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர சிறுவர், ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட இதர நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ பணம் அறவிடக் கூடாது
என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.பாடசாலை மாணவர்களிடம் அங்கிகரிக்கப்படாத கட்டணங்களை பெறுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.பாடசாலைகளில் முறைசாரா முறையில் பணம் அறவிடப்படுவதைத் தடுக்கும் வகையில் 2015/5 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை
வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சின் செயலாளர், பிள்ளைகளின் கல்விக்காக கடுமையான நிதி சிக்கல்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் பாடுபட்டு வரும் நிலையில் இவ்வாறான பணச் செலவுகளை நிறுத்துவது அதிபர்களின் பொறுப்பு எனவும் 
தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் மாணவர்களிடம் தேவையில்லாமல் பணம் கேட்டால் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு எனவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.பாடசாலைக் கட்டணத்தைக் கூட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வற்புறுத்திக் கேட்கக் 
கூடாது என்றும்,
பெற்றோரால் அந்தத் தொகையைச் செலுத்த முடியாவிட்டால் கிராம உத்தியோகத்தரிடம் சான்றிதழைச் சமர்ப்பித்து அதைச் செலுத்தாமல் இருக்க முடியும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





சனி, 1 அக்டோபர், 2022

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம்
இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாடசாலை அதிகாரிகளிடம் விசேட
 கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலைகளில் முறைசாரா வகையில் நிதி அறவிடுவதை தடைசெய்து 2015/5 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் பெற்றோர்கள் இருக்கும் நிலையில், 
தேவையற்ற சுமைகளை
அவர்கள் மீது சுமத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவர் குறிப்பாக அதிபர்கள் இவற்றை செயற்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.அந்த வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Blogger இயக்குவது.