கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து ஸ்கை டைவிங் எனப்படும் அந்தரத்தில் பாய்ந்து விளையாடும் சாகச விளையாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆரம்பத்தில் தாமரைக் கோபுர உச்சியில் இருந்து பங்கி ஜம்ப் எனப்படும் இரும்புக் கம்பி உதவியுடனான பாய்ச்சல் விளையாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கென சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் தாமரைக்கோபுர நிர்வாக மற்றும் பராமரிப்பு அதிகார சபை ஒப்பந்தம் ஒன்றைச்
செய்துள்ளது.
வருடமொன்றுக்கு குறைந்தது பத்தாயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அங்கு அழைத்து வந்து பங்கி ஜம்ப் விளையாட்டில் ஈடுபடுத்துவது குறித்த சிங்கப்பூர் நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.
அதற்காக சுற்றுலாப் பயணியொருவரிடமிருந்து 600 டொலர்கள் கட்டணமாக அறவிடப்படவுள்ளது.உள்நாட்டு சாகசப்பிரியர்களுக்கும் அதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளதுடன் அவர்களுக்கும் கணிசமான கட்டணமொன்று அறவிடப்படவுள்ளது.
அதேபோன்று மிக விரைவில் தாமரைக் கோபுர உச்சியில் இருந்து பரசூட் பாய்ச்சல் சாகச விளையாட்டுக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதற்காக துருக்கிய நிறுவனமொன்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக