புதன், 12 அக்டோபர், 2022

நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவித்தல்

சுற்றுலா விசா மூலம் மலேசியாவுக்கு தொழிலுக்காக செல்ல வேண்டாம் எனவும் சுற்றுலா விசாவில் அங்கு தொழிலுக்காக அனுப்பி வைக்கும் மோசடியாளர்கள் தொடர்பாக தகவல்களை அறிந்தால், அது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் அந்த பணியகம்
 அறிவித்துள்ளது.
மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி பல நபர்கள்,தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்போரிடம் பணத்தை பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன் சுற்றுலா விசாவில் தொழிலுக்காக மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற முடியாது
சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு சென்ற பின்னர், அங்கு எந்த வகையிலும் சுற்றுலா விசாவில் சென்றவர்களுக்கு அதனை தொழில் விசாவாக மாற்ற முடியாது.இப்படியான மோசடிகள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால், அது குறித்து வெளிநாட்டு வேலை
வாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவின் 0112864241 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 0112864118 தொலைநகல் இலக்கத்திற்கு தகவல்களை வழங்க முடியும்.அத்துடன் mgr_invest@slbfe.lk என்ற மின்னஞ்சலுக்கும் தகவல்களை அனுப்பி வைக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.